சென்னை: மாதாந்திர பட்ஜெட்டில் நமக்கு எப்போதுமே கூடுதல் கவனம் தேவைப்படும் ஒரு விஷயம் இந்த கரண்ட் பில் தான். அதுவும் வேலைப்பளு, குடும்பச் சூழ்நிலை காரணமாக நிறைய பேர் பலர் பில் கட்ட வேண்டிய கடைசி தேதியை மறந்துவிடுவது வழக்கமான ஒன்றுதான். பில் கட்டுவதற்கான கடைசி தேதி முடிந்துவிட்டால், எப்போது வந்து கனெக்ஷனை கட் செய்துவிடுவார்களோ என்ற பதற்றமும் பயமும் பலருக்கும் வந்துவிடுகிறது. ஆனால், இப்போதைய டிஜிட்டல் காலகட்டத்தில், கடைசி தேதி கடந்திருந்தாலும் கூட, தேவையற்ற அலைச்சல்களையும் கூடுதல் சிக்கல்களையும் தவிர்த்து, அந்த பிரச்சனையை சரி செய்ய முடியும். அது எப்படி தெரியுமா?
பில் கட்ட வேண்டிய கடைசி நாள் முடிந்துவிட்டதுமே, அடுத்த சில நாட்களில் மின் ஊழியர்கள் வந்து மின் இணைப்பைத் துண்டித்துவிடுவார்கள் என்று பலரும் நினைக்கிறார்கள்.
ஆனால் ரூல்ஸ்படி உடனடியாக மின் இணைப்பு துண்டிக்கப்படாது, அதற்கு முன்னதாக கஸ்டமருக்கு உரிய அறிவிப்பு வழங்கப்பட வேண்டும் என்பதே தற்போதைய விதியாகும். இருந்தாலும் கடைசி தேதி கடந்த பின்னும் நாம் அலட்சியமாக இருந்தால், எப்போது வேண்டுமானாலும் மின் துண்டிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படலாம். இதுபோன்ற சிக்கல்களை தவிர்க்க நுகர்வோர் செய்ய வேண்டிய முக்கியமான காரியம், நிலுவைத் தொகை மற்றும் Late Payment Surcharge அதாவது அதற்கான தாமத கட்டணத்தை உடனடியாக ஆன்லைனில் செலுத்துவதுதான். முன்பு போல மின்வாரிய அலுவலகத்திற்கு நேரில் சென்று அலைந்து, வரிசையில் நின்று பணம் கட்ட வேண்டிய அவசியம் இப்போது இல்லை. உங்கள் செல்போன் மூலமாகவே, மின்சார வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது செல்போன் ஆப் TANGEDCO Mobile App வழியே, நிலுவைத் தொகையுடன் சேர்த்து அதற்கான தாமத கட்டணத்தையும் உடனடியாக ஆன்லைனில் செலுத்திவிட முடியும். நீங்கள் ஆன்லைனில் பணத்தை செலுத்திய அடுத்த சில நிமிடங்களிலேயே, மின்வாரியத்தின் கணினியில் உங்களுடைய கணக்கு அப்டேட் ஆகிவிடுகிறது. இதன் மூலம் உங்களுடைய நுகர்வோர் எண்ணிற்கான கட்டணம் செலுத்தப்பட்ட தகவல் மின்வாரிய பதிவில் புதுப்பிக்கப்படும். ஒருவேளை நீங்கள் பணத்தை செலுத்த தாமதித்து, மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டால், அதன்பின் நிலுவை தொகையோடு சேர்த்து மறு இணைப்பு பெறுவதற்கான கட்டணத்தையும் அதாவது Reconnection Charges, கூடுதலாக செலுத்த வேண்டி வரும். அதுமட்டுமல்லாமல் மறுபடியும் மீள் இணைப்பு வழங்கப்படும் வரை காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படலாம். அதனால் கடைசி தேதி முடிந்துவிட்டது என்று தெரிந்ததுமே டென்ஷன் ஆகாமல் உங்களது நுகர்வோர் எண்ணைப் பயன்படுத்தி ஆன்லைன் மூலமாக முழுத் தொகையையும் தாமதக் கட்டணத்துடன் செலுத்துவதே புத்திசாலித்தனமான செயலாகும். டெக்னாலஜி வளர்ந்துவிட்ட இந்த நேரத்தில், மின் நுகர்வோர்களாகிய நாம் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். கடைசி தேதி கடந்திருந்தால், நிலுவைத் தொகை மற்றும் தாமதக் கட்டணத்தை உடனடியாக ஆன்லைனில் செலுத்துவது கூடுதல் சிக்கல்களைத் தவிர்க்க உதவும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இனிமேல் இதுபோன்ற டென்ஷன்களைத் தவிர்க்க, மின்வாரியத்தின் எஸ்எம்எஸ் (SMS) அலர்ட் வசதியைப் பதிவு செய்து வைத்துக் கொள்வது நல்லது. இது பில் தொகையையும், கடைசி தேதியையும் உங்களுக்கு முன்கூட்டியே நினைவூட்டி, அபராதம் மற்றும் மின் துண்டிப்பு போன்ற தேவையற்ற அலைச்சல்களில் இருந்து உங்கள் குடும்ப பட்ஜெட்டைக் பாதுகாக்கும்...!!மின்கட்டணம் வசதிகள்
கரண்ட் பில் கட்டாமல் விட்டால்?
மின் நுகர்வோர்கள்