அதிக மின் கட்டணம் வந்தால் வசூல் நிறுத்தப்படும்.. ஊழியர்கள் ஆய்வு செய்வார்கள்.. மின்சார வாரியம்!

  • சென்னை: மின் கட்டணத்தில் அதிக மாறுபாடு இருந்தால், முந்தைய பில் தானாகவே நிறுத்தி வைக்கப்படும் என்று மின்சார வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் வரும் பில்லை விடவும், செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில் வரும் மின்சார கட்டணம் 20% அதிகமாக இருந்தால், அந்த பில் நிறுத்தி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    தமிழ்நாட்டில் தவெக ஆட்சிக்கு வந்த உடனே 200 யூனிட் மின்சாரம் இலவசம் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் மிகப்பெரிய பலன் அடைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் பழைய கட்டணங்களை விட அதிக கட்டணங்கள் வருவதாக ஏராளமானோர் புகார் அளித்தனர்.

    Advertisement

    சட்டசபையில் இந்த கேள்வி எழுப்பப்பட்ட போது கூட அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் உரிய விளக்கம் அளிக்கவில்லை. லட்சக்கணக்கானோருக்கு பழைய கட்டணத்தை விட அதிக கட்டணம் வருவது சர்ச்சையாகியது. சோசியல் மீடியாவில் பல்வேறு தரப்பினரும் ஆதாரத்துடன் வீடியோ வெளியிட்டு கொந்தளித்து வந்தனர்.

    ஒரு கட்டத்தில் மின்சார வாரியம் சோசியல் மீடியாவில் புகார் அளிப்போருக்கு விளக்கம் அளிப்பதையும் நிறுத்தியது. இந்த நிலையில் மின் கட்டணம் உயர்ந்துள்ளதாக குவிந்து வரும் புகார்கள் குறித்து ஆய்வு செய்ய மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது. 500 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளில் மின் கட்டணம் 50% அதிகரித்தால், ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கும் வகையில் இந்த உத்தரவு போடப்பட்டுள்ளது.

    Advertisement

    ஜூலை, ஆகஸ்ட் மாதங்களை விட செப்டம்பர் அல்லது அக்டோபர் மாத கணக்கீட்டில் மின் கட்டணம் 20% அதிகரித்தால் ஆய்வு செய்யப்படும். ஒருவேளை கூடுதல் கட்டணம் வரும் வீடுகளுக்கான மின் கட்டண வசூலை நிறுத்தி வைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அப்படி மின் கட்டண வசூல் நிறுத்தப்படும் வீடுகளில் மின் வாரிய அலுவலர்கள் நேரில் ஆய்வு செய்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ரூ.1,000 வரை மின் கட்டணம் அதிகரித்தால், மின் ஆய்வாளர் அல்லது வருவாய் மேற்பார்வையாளர் ஆய்வு செய்வார்கள். சரி பார்ப்பில் கூடுதல் கட்டணம் உறுதியானால் அடுத்த மாதம் மின் கட்டணத்தில் ஈடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஜூலை, ஆகஸ்ட் மாத மின் கட்டணத்தை விட செப்டம்பர், அக்டோபர் மாத மின் கட்டணத்தை ஒப்பிட்டு ஆய்வு செய்வதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

    Advertisement

    ஏசி பயன்பாடு அதிகம் உள்ள ஜூலை, ஆகஸ்ட் மாதங்களை விட செப்டம்பர் அக்டோபரில் கட்டணம் குறைவாகவே வரும். அதுமட்டுமல்லாமல் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் 20% மேல் உயர்ந்தால் மட்டுமே ஆய்வு என்பது கண் துடைப்பு என புகார் கூறப்படுகிறது.

    English Summary

    Electricity Bill: TN Electricity Board to Pause Bills Showing Over 20 Percent Jump From Previous Cycle