மின்சார வாரியத்தின் ஸ்மார்ட் மீட்டர்! சின்ன லீக்கேஜ், ஆனா பில் எகிறுமே! சென்னையை அலறவிடும் அந்த தவறு

  • சென்னை: தமிழகத்தில் பழைய மின் மீட்டர்களுக்குப் பதிலாகப் புதிய ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்ட பிறகு பல வீடுகளில் மின் கட்டணம் திடீரென உயர்வதாக பொதுமக்கள் தரப்பில் சொல்லப்படுகிறது. இந்த திடீர் கட்டண உயர்வுக்கு பின்னாலுள்ள நிஜமான டெக்னிக்கல் காரணம் என்ன என்பது குறித்துப் பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன. நுகர்வோர் சந்திக்கும் இந்தச் சிக்கலின் பின்னணியில் உள்ள சில காரணங்களை இங்கே சுருக்கமாக பார்ப்போம்.

    Advertisement

    தமிழகம் முழுவதும் பழைய மின்சார மீட்டர்களுக்குப் பதிலாக நவீன டிஜிட்டல் மற்றும் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்படும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஆனால், இந்த புதிய மீட்டர்கள் வைக்கப்பட்ட அடுத்த நிமிடமே பல வீடுகளில் மின்சாரக் கட்டணம் எக்கச்சக்கமாக உயர்ந்து வருவது ஒட்டுமொத்த பொதுமக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    Advertisement

    மின்சார வாரியம்

    "பழைய மீட்டரே எவ்வளவோ பரவாயில்லை" என்று புலம்பும் மக்கள் ஒருபுறம் இருக்க, இன்னொருபக்கம் இந்த கட்டண உயர்வுக்குப் பின்னால் இருக்கும் உண்மையான தொழில்நுட்பக் காரணம் என்ன, இதனால் உண்மையில் பில் குறையுமா அல்லது கூடுமா என்ற விவரங்களையும் பொதுமக்கள் அறிந்து கொள்வது அவசியமாகிறது.

    பல வருடங்களாகவே நம்முடைய வீடுகளில் பயன்பாட்டில் இருந்த பழைய அனலாக் மீட்டர்கள், நீண்ட கால ஓட்டத்திற்கு பிறகு தங்களின் துல்லியத் தன்மையை இழந்துவிடுகின்றன. அவற்றில் உள்ள இயந்திர பாகங்கள் தேய்மானம் அடைவதால், அவை உண்மையான மின்சாரப் பயன்பாட்டை விடக் குறைவான அளவையே பதிவு செய்து வந்தன.

    Advertisement

    மின்கட்டணம் அதிகரிப்பு

    ஆனால் இப்போது பொருத்தப்பட்டு வரும் நவீன டிஜிட்டல் மீட்டர்கள் மிகக் குறைந்த அளவு மின் கசிவை கூடத் துல்லியமாகக் கணக்கிடும் அதிநவீன திறன் கொண்டவை ஆகும்.

    நாம் பல நேரங்களில் வீட்டின் சுவிட்சுகளை ஆஃப் செய்திருந்தாலும், பிளக் பாயிண்ட்டில் செருகப்பட்டிருக்கும் செல்போன் சார்ஜர்கள் அல்லது டிவி ஸ்டேண்ட்பை மோட் போன்றவற்றால் உறிஞ்சப்படும் மிக சிறிய மின்சாரத்தை கூட இந்தப் புதிய மீட்டர்கள் துல்லியமாக ஷார்ப்பாக கணக்கில் எடுத்துக் கொள்கின்றனவாம்.

    பழைய மீட்டர்களில் பதிவாகாமல் தப்பிய இந்த சிறிய யூனிட்டுகள் அனைத்தும் இப்போது புதிய மீட்டரில் அப்படியே பதிவாவதால் தான், மின்சார பில் திடீரென எகிறிவிடுவது போல தெரிகிறது.

    Advertisement

    பழைய மீட்டர் பாக்ஸ்

    இதனை தவிர, வீடுகளில் இருக்கும் பழைய வயரிங் அமைப்புகள் அல்லது சுவர்களில் ஏற்படும் ஈரப்பதத்தினால் ஏற்படும் மிகச் சிறிய மின் கசிவுகள் பழைய மீட்டர்களில் பெரும்பாலும் பதிவாகாது.

    ஆனால் புதிய மீட்டர் வந்தவுடன் இந்தப் பிரச்சனைகள் அனைத்தும் உடனடியாக "யூனிட்"களாக மாறி கரண்ட் பில்லை அதிகரிக்க செய்துவிடும்.. எனவே மீட்டர் மாற்றப்பட்ட பிறகு பில் கூடுகிறது என்றால் அது மீட்டரின் தவறு மட்டுமே என்று சொல்லிவிட முடியாது. மின்சார வாரியம் இந்த மாற்றத்தைக் கொண்டு வருவதன் முக்கிய நோக்கமே மின் இழப்பைத் தடுத்து துல்லியமான வருவாயை பெறுவதுதான் என்றாலும், சாதாரண மக்களுக்கு இது ஆரம்பத்தில் மிகப்பெரிய நிதிச் சுமையாகவே உருவெடுத்துள்ளது.

    Advertisement

    கரண்ட் பில் ஏறுதா

    ஒருவேளை, உங்கள் வீட்டுப் பழைய மீட்டரை மாற்றிய பின் திடீரென பில் உயர்ந்தால், உடனடியாக நீங்கள் செய்ய வேண்டியது ஒரு சிம்பிள் சோதனை தான். வீட்டில் உள்ள எல்லா மின் சாதனங்களையும், ஸ்விட்சுகளையும் அணைத்துவிட்டு மீட்டரின் பல்ஸ் விளக்கு தொடர்ந்து துடிக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

    அப்படி துடித்தால் உங்கள் வீட்டு வயரிங்கில் எங்கோ மின் கசிவு இருக்கிறது என்று அர்த்தம். அதனை உடனடியாகச் சரி செய்தாலே மின் கட்டணத்தைக் கட்டுக்குள் கொண்டு வர முடியும்.
    ஒருவேளை, உங்கள் வீட்டுப் பழைய மீட்டரை மாற்றிய பின் திடீரென பில் உயர்ந்தால், உடனடியாக நீங்கள் செய்ய வேண்டியது ஒரு சிம்பிள் சோதனை தான். வீட்டில் உள்ள எல்லா மின் சாதனங்களையும், ஸ்விட்சுகளையும் அணைத்துவிட்டு மீட்டரின் பல்ஸ் விளக்கு தொடர்ந்து துடிக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

    Advertisement

    அப்படி துடித்தால் உங்கள் வீட்டு வயரிங்கில் எங்கோ மின் கசிவு இருக்கிறது என்று அர்த்தம். அதனை உடனடியாகச் சரி செய்தாலே மின் கட்டணத்தைக் கட்டுக்குள் கொண்டு வர முடியும்.

    English Summary

    Electricity Bill Surge in Chennai Homes: Why the New Smart Meters Are Turning Tiny Leakages Into Huge Losses