சென்னை: காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான இ.எம். சுதர்சன நாச்சியப்பன் இன்று காலமானார். லோக்சபா, ராஜ்யசபா எம்.பியாகவும், காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பொறுப்புகளையும் வகித்துள்ளார் சுதர்சன நாச்சியப்பன்.
ப.சிதம்பரம் தமாகாவுக்கு சென்றபோது சுதர்சன நாச்சியப்பன் காங்கிரஸ் சார்பில் சிவகங்கையில் நின்று வெற்றி பெற்றார். மீண்டும் ப.சிதம்பரம் காங்கிரஸில் சேர்ந்ததால், சுதர்சன நாச்சியப்பனுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி தரப்பட்டது. மத்திய இணை அமைச்சராகவும் இருந்துள்ளார். அதன்பிறகு ஓரங்கட்டப்பட்டிருந்தார்.
இ.எம். சுதர்சன நாச்சியப்பனின் சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள ஏரியூர். எம்.ஏ.,பி.எல்., படித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றியவர். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி பட்டம் பெற்றவர். காங்கிரஸ் பாரம்பரியம் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர் சுதர்சன நாச்சியப்பன். சுதர்சன நாச்சியப்பனின் பெரியப்பா தியாகி சொக்கலிங்க அம்பலம் 1957இல் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக இருந்தவர். 1969 ஆம் ஆண்டு இந்திரா காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த சுதர்சன நாச்சியப்பன், சென்னை சட்டக் கல்லூரி மாணவர் காங்கிரஸ் தலைவராகச் செயல்பட்டார். 1972 ஆம் ஆண்டில் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி வட்டார இளைஞர் காங்கிரஸ் தலைவரான சுதர்சன நாச்சியப்பன், அதே ஆண்டில் ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளரானார். 1973 ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த ராமநாதபுரம் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் செயலாளர் ஆனார். 1974ல் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவரானார். 1975ல் மாநில இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளரான நாச்சியப்பன், 1979ல் மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவரானார். 1980 முதல் 90 வரை இந்திய தேசிய கிராம தொழிலாளர் சம்மேளன பொதுச் செயலாளராக இருந்தார். 1983ல் சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் பொறுப்பு தலைவரான நாச்சியப்பன், 1988ல் சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி அமைப்பாளரானார். 1986 முதல் 91 வரை சிவகங்கை ஒன்றிய சேர்மனாக இருந்த சுதர்சன நாச்சியப்பன், 1991ல் அகில இந்திய காங்கிரஸ் சட்டப்பிரிவு செயற்குழு உறுப்பினரானார். 1999ல் மக்களவைக்கு சிவகங்கை தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார் சுதர்சன நாச்சியப்பன். 2000-ஆம் ஆண்டில் தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமைத் துறைத் தலைவராகவும், 2002-ஆம் ஆண்டில் தமிழ்நாடு காங்கிரஸ் துணைத் தலைவராகவும், 2003-ஆம் ஆண்டில் நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சி கொறடாவாகவும் செயல்பட்டார். 2004-ல் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளராகவும் பதவி வகித்துள்ளார். 2004 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்து வந்தார். மாநிலங்களவை தலைமைக் கொறடாவாக பணியாற்றி, மத்திய இணை அமைச்சராகவும் உயர்ந்தார். மன்மோகன் சிங் அமைச்சரவையில் வர்த்தகம், தொழில்துறை இணை அமைச்சராக சுதர்சன நாச்சியப்பன் பதவி வகித்தார். நாடாளுமன்ற நிலைக்குழு தலைவராக சுதர்சன நாச்சியப்பன் இருந்தபோது, தகவல் அறியும் உரிமைச் சட்டம், சொத்தில் பெண்களுக்கு சமஉரிமை சட்டம், பெண்கள் இட ஒதுக்கீடு ஆகியவை கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. ப.சிதம்பரம் தமாகாவுக்கு சென்றபோது சுதர்சன நாச்சியப்பன் காங்கிரஸ் சார்பில் சிவகங்கையில் நின்று வெற்றி பெற்றார். மீண்டும் ப.சிதம்பரம் காங்கிரஸில் சேர்ந்ததால், சுதர்சன நாச்சியப்பனுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி தரப்பட்டது. மத்திய இணை அமைச்சராகவும் இருந்துள்ளார். அதன்பிறகு, சிவகங்கையில் போட்டியிட சுதர்சன நாச்சியப்பன் வாய்ப்பு கேட்டும், ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கே சீட் வழங்கப்பட்டது. ப.சிதம்பரத்தின் செல்வாக்கால் கட்சியில் ஓரங்கட்டப்பட்டிருந்தார் நாச்சியப்பன். இந்நிலையில், தனது 79 வயதில் இன்று காலமாகியுள்ளார் சுதர்சன நாச்சியப்பன். சுதர்சன நாச்சியப்பனின் மனைவி தேவகி. மகன்கள் ஜெயசிம்மா, சாணக்கிய மாதவன். மகள், யமுனா நாச்சியார். மகள், மகன்கள் அனைவரும் வழக்கறிஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.யார் இந்த சுதர்சன நாச்சியப்பன்?
காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பொறுப்புகள்
லோக்சபா எம்.பி
ஆர்டிஐ சட்டம்
பாலிடிக்ஸ்