சென்னை: "உடைந்த பானை ஒட்டாது" என்று நினைத்தவர்களுக்கு மத்தியில், அதிமுகவின் இரு முக்கியத் துருவங்கள் திடீரென கைகுலுக்கி ஒன்றிணைந்துள்ளன. கடந்த சில நாட்களாக அதிமுகவுக்குள் புகைந்துகொண்டிருந்த உட்கட்சிப் பூசல், தற்போது சுமுகமாக முடிவுக்கு வந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி அணியும், எஸ்.பி.வேலுமணி அணியும் மீண்டும் கைகோர்த்துள்ளது.
அதிமுகவில் தனியாக செயல்பட்ட வேலுமணி அணி, எடப்பாடி பழனிசாமி அணியுடன் மீண்டும் இணைந்த பின்னர் எடப்பாடி பழனிசாமியை அதிமுக சட்டம்ன்றக் குழு தலைவராக்க சபாநாயகரிடம் அவர்கள் கடிதம் அளித்தனர்.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 47 இடங்களில் வெற்றி பெற்றது. ஆட்சி அமைக்க முடியாவிட்டாலும், பலமான எதிர்க்கட்சியாக உருவெடுக்க வேண்டிய சூழலில், கட்சிக்குள் திடீர் பிளவு ஏற்பட்டது. எஸ்.பி வேலுமணி - சிவி சண்முகம் தலைமையில் அதிமுகவின் 25 எம்.எல்.ஏக்கள் தவெகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டுடன், எஸ்.பி.வேலுமணியைச் சட்டமன்றக் குழு தலைவராக்க சபாநாயகரிடம் மனு அளித்தனர். எடப்பாடி பழனிசாமி அணியைச் சேர்ந்த 22 எம்.எல்.ஏக்கள்) எடப்பாடி பழனிசாமியைத் தலைவராக்கத் தனி மனு அளித்தனர். எம்.எல்.ஏ-க்கள் எண்ணிக்கையில் எஸ்.பி.வேலுமணி கை ஓங்கியிருந்ததால், கோபமடைந்த இபிஎஸ், அதிரடியாக அந்த அணியினரின் கட்சிப் பதவிகளைப் பறித்ததோடு, அவர்கள் மீது கட்சித்தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதிநீக்க நடவடிக்கை எடுக்கவும் தயாரானார். இடையில், எஸ்.பி.வேலுமணி அணியைச் சேர்ந்த 4 எம்.எல்.ஏ-க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவிலேயே ஐக்கியமாகி அதிர்ச்சி கொடுத்தனர். நிலைமை கைமீறிப் போவதை உணர்ந்த இருதரப்பும் சமரசப் பேச்சுவார்த்தையில் இறங்கின. நேற்று வேலுமணி அணியின் சீனியர் தலைவர் நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் இபிஎஸ்ஸுடன் முதற்கட்டப் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக, இன்று எஸ்.பி.வேலுமணி தரப்பினர் நேரடியாக எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினர். முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், தங்கமணி, காமராஜ், கே.சி. வீரமணி, எம்.ஆர். விஜயபாஸ்கர், சி. விஜயபாஸ்கர், கே.பி. அன்பழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இந்த சந்திப்பால், கடந்த சில நாட்களாக நீடித்து வந்த அரசியல் குழப்பம் ஒருவழியாக முடிவுக்கு வந்தது. அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி - வேலுமணி அணிகள் இணைந்ததைத் தொடர்ந்து, இருதரப்பு எம்.எல்.ஏ-க்களும் கூட்டாகத் தலைமைச் செயலகத்திற்கு விரைந்தனர். எஸ்பி வேலுமணியைச் சட்டமன்றக் குழு தலைவராக்கக் கோரி அளிக்கப்பட்ட மனுவை வேலுமணி தரப்பும், அவர்களைத் தகுதிநீக்கம் செய்யக் கோரி அளிக்கப்பட்ட கடிதத்தை எடப்பாடி பழனிசாமி தரப்பும் பரஸ்பரம் திரும்பப் பெற்றுக் கொண்டனர். அதன் பின்னர், எடப்பாடி பழனிசாமியை அதிமுக சட்டமன்றக் குழு தலைவராகவும், அக்ரி கிருஷ்ணமூர்த்தியை கொறடாவாகவும் நியமிக்கக் கோரி சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரரிடம் கூட்டாகப் புதிய கடிதத்தை வழங்கினர். இந்த ஒட்டுமொத்த சமரசப் படலத்திலும் மற்றும் சபாநாயகரைச் சந்தித்த நிகழ்விலும், வேலுமணி அணியின் முக்கியத் தூணாகச் செயல்பட்ட சி.வி.சண்முகம், அருள்மொழி தேவன் ஆகியோர் மட்டும் இடம்பெறவில்லை என்பது அரசியல் அரங்கில் புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது. சிவி சண்முகம் இந்த இணைப்பில் இன்னும் அதிருப்தியில் இருக்கிறாரா அல்லது அவரது தனிப்பட்ட முடிவா என்பது வரும் நாட்களில் தெரியவரும். "அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்" என்பார்கள். தவெகவின் அரசியல் பாய்ச்சலும், எம்.எல்.ஏ-க்களின் ராஜினாமாவும் கொடுத்த 'அடி', அதிமுகவின் இரு அணிகளையும் ஈகோ-வை மறந்து ஒன்று சேர வைத்துள்ளது. இரு அணிகளும் இணைந்ததன் மூலம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது.ட்விஸ்ட்டுகளுடன் தொடங்கிய ப்ளாஷ்பேக்
ரகசியப் பேச்சும்.. க்ளைமாக்ஸும்
சபாநாயகர் அலுவலகத்தில் லா..லா..லா..
சி.வி.சண்முகம் ரூட்?