கொக்கு போல் காத்திருந்த எடப்பாடி.. சீனியர்களை சின்னாபின்னாம்மாக்கி மாஸ்! இப்படி ஒரு ப்ளானா? சூப்பர்!

  • சென்னை: அதிமுகவில் தேர்தல் தோல்விக்குப் பிறகு வெடித்த உட்கட்சி மோதல் தற்போது தற்காலிகமாக முடிவுக்கு வந்தாலும், அதன் பின்னணியில் நடந்த அதிகார மோதல் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. குறிப்பாக, கடந்த சில ஆண்டுகளாக கட்சிக்குள் செல்வாக்கு செலுத்தி வந்த இரண்டாம்கட்ட தலைவர்களின் ஆதிக்கத்தை முற்றிலுமாக கட்டுப்படுத்தும் வகையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்ட அரசியல் நகர்வுகளை மேற்கொண்டதாக அதிமுக வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

    Advertisement

    அதிமுகவில் பொதுச்செயலாளராக முழு கட்டுப்பாட்டை கைப்பற்றிய பிறகு, எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகளில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஆரம்பத்தில் அனைவரையும் அரவணைத்துச் செல்லும் பாணியில் இருந்த அவர், காலப்போக்கில் கட்சிக்குள் தன்னுடைய அதிகாரத்தை உறுதிப்படுத்தும் முயற்சியில் தீவிரமானார் என்கிறார்கள்.

    Advertisement

    குறிப்பாக, ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தபோதுதான் எடப்பாடி பழனிசாமி கடுமையாக அப்செட் ஆனாராம். தேர்தலுக்கு முன்பாக கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த முக்கிய தலைவர்களில் ஒருவரான எஸ்.பி. வேலுமணி தலைமையில் சில முன்னாள் அமைச்சர்கள், ஓபிஎஸ்ஸை மீண்டும் இணைப்பது குறித்து இபிஎஸ்ஸை சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது.

    அதிமுக உட்கட்சி மோதல்

    அந்த சந்திப்பிலேயே எடப்பாடி பழனிசாமி மிகக் கடுமையாக எதிர்வினை காட்டியதாகவும், "கட்சியின் முடிவை நான் எடுப்பேன்" என்ற மனநிலையில்தான் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்பிறகுதான் அவரை சந்தித்து அழுத்தம் கொடுத்த முக்கிய தலைவர்களை மெதுவாக ஓரங்கட்டும் பணியை அவர் தொடங்கியதாக கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாகவே "இரண்டு தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர்" என்ற புதிய திட்டத்தை எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்ததாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    Advertisement

    எடப்பாடி பழனிசாமி

    இதற்கு முன்பு ஒரு மாவட்டத்தில் ஒரே ஒரு முக்கிய தலைவர் மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் நிலை இருந்தது. ஆனால், புதிய திட்டத்தின் மூலம் அந்த அதிகாரம் உடைக்கப்பட்டதாம். அதாவது, ஒவ்வொரு மாவட்டத்திலும் செல்வாக்கு பெற்றிருந்த இரண்டாம்கட்ட தலைவர்களுக்கு எதிராக, தன்னிடம் நெருக்கமாக இருக்கும் புதிய நிர்வாகிகளை வளர்க்கும் பணியில் இபிஎஸ் இறங்கியதாக கூறப்படுகிறது. இதனால் பல முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மாவட்ட அளவிலான முக்கிய நிர்வாகிகள் கடும் அதிருப்திக்கு உள்ளானார்களாம்.

    2026 தேர்தல்

    "நம்ம செல்வாக்கை குறைக்க திட்டமிட்டே செய்கிறார்" என்ற மனநிலையே அவர்களிடம் உருவானதாகவும் கூறப்படுகிறது. ஆனால், வெளிப்படையாக எதிர்க்காமல், தேர்தல் முடிவு காத்திருக்க முடிவு செய்தார்களாம். அதே போல் தேர்தல் வரை அமைதியாக இருந்த அவர்கள், தேர்தல் தோல்விக்குப் பிறகு ஒன்றிணைய தொடங்கினார்கள் என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. 2026 தேர்தலில் அதிமுக மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டதும், இதையே வாய்ப்பாக பயன்படுத்தியுள்ளனர் அதிருப்தி தலைவர்கள்.

    Advertisement

    சிவி சண்முகம்

    "தொடர் தோல்விகளுக்குக் காரணம் எடப்பாடி பழனிசாமிதான்" என்ற கருத்தை வலுவாக முன்வைத்தனர். எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம், சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் தனியாக செயல்படத் தொடங்கியது இதன் விளைவாகவே பார்க்கப்பட்டது. சட்டப்பேரவையில் தவெக அரசுக்கு ஆதரவாக 25 அதிமுக எம்எல்ஏக்கள் வாக்களித்த சம்பவம், அதிமுக உள்கட்சிப் போரைக் வெளிப்படையாக காட்டியது. அந்த நேரத்தில் பலரும், "இபிஎஸ் தலைமையே ஆபத்தில் உள்ளது" என்றே கணித்தனர்.

    எஸ்பி வேலுமணி

    ஆனால், அதற்குப் பிறகுதான் எடப்பாடி பழனிசாமி தனது அடுத்த அரசியல் நகர்வை எடுத்ததாக கூறப்படுகிறது. அதாவது, வேலுமணி அணியில் இருந்தவர்களின் கட்சிப் பதவிகளை நீக்கியதோடு மட்டுமல்லாமல், தகுதி நீக்க நடவடிக்கையையும் கையில் எடுத்தார். இதன் மூலம், "என்னை எதிர்த்தால் அரசியல் எதிர்காலமே கேள்விக்குறியாகும்" என்ற மெசேஜை அவர் கட்சிக்குள் கொடுக்க முயன்றதாக கூறப்படுகிறது. இந்த நடவடிக்கைதான் வேலுமணி அணியில் இருந்த பலரை அதிர்ச்சியடைய வைத்ததாம்.

    Advertisement

    இரண்டாம்கட்ட தலைவர்கள்

    ஒருபுறம் கட்சி தாவல் தடைச் சட்டம், மறுபுறம் அரசியல் எதிர்காலம் என்ற அச்சம் காரணமாகவே, மீண்டும் இபிஎஸ் உடன் சமாதானம் பேச வேண்டிய நிலை ஏற்பட்டதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இப்போது எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோர் மீண்டும் இபிஎஸ் அணியில் இணைந்துவிட்ட நிலையில், "இரண்டாம்கட்ட தலைவர்களின் ஆட்டத்தை எடப்பாடி பழனிசாமி முடிவுக்கு கொண்டு வந்துவிட்டார்" என்ற பேச்சு அதிமுக வட்டாரங்களில் தீவிரமாக பேசப்படுகிறது.

    அதிமுக

    "இனிமேல் அவர்கள் ஒன்றிணைந்தாலும், முன்புபோல கட்சிக்குள் அதிகாரம் செலுத்த முடியாது. முடிவெடுக்கும் அதிகாரம் முழுமையாக இபிஎஸ் கையில்தான் இருக்கும்" என்று அவரது ஆதரவாளர்கள் கூறி வருகிறார்கள். ஆனால், இதனால் அதிமுக உண்மையாக ஒன்றுபட்டுவிட்டதா? அல்லது தற்காலிக சமாதானமா? என்ற கேள்வியும் அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது. குறிப்பாக, சி.வி. சண்முகம் இன்னும் முழுமையாக சமாதானமாகாத நிலையில், அதிமுக உட்கட்சி பிரச்சனை இன்னும் முடியவில்லை என்றே பலரும் கருதுகின்றனர்.

    English Summary

    Edappadi Palaniswami’s strategic reshuffle weakened AIADMK seniors and restored his grip over party leadership.