அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ். வளர்மதி பதவி பறிப்பு.. எடப்பாடி பழனிசாமி ஆக்‌ஷன்!

  • சென்னை: அதிமுக அமைப்புச் செயலாளர் பதவியில் இருந்து முன்னாள் அமைச்சர் எஸ்.வளர்மதியை நீக்குவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். திருச்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சரான எஸ்.வளர்மதி, நாளை தவெகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியான நிலையில், இபிஎஸ் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

    Advertisement

    எஸ்.வளர்மதி கடந்த 2016 - 2021 அதிமுக ஆட்சிக் காலத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை அமைச்சராக இருந்தவர்.

    Advertisement

    ஏற்கனவே அதிமுகவைச் சேர்ந்த நான்கு எம்எல்ஏ-க்கள் தங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். இதனைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோரும் நாளை தவெகவில் இணைய உள்ளனர். அவர்கள் இருவரும் தங்கள் எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.

    அதிமுகவிலிருந்து பல முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மூத்த தலைவர்கள் என பலரும் தொடர்ந்து விலகி வரும் நிலையில் நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் பலர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய இருக்கும் தகவல் அரசியல் வட்டாரத்தில் புயலைக் கிளப்பியுள்ளது.

    Advertisement

    முன்னாள் அமைச்சர் எஸ். வளர்மதியும் நாளை தவெகவில் இணைவதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் கடந்த 2016-2021 அதிமுக ஆட்சிக் காலத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை அமைச்சராக இருந்தார். எஸ்.வளர்மதி தவெகவில் இணைய உள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி அவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளார்.

    அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.வளர்மதி வகித்து வரும் அமைப்பு செயலாளர் பதவியை பறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அமைப்புச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் எஸ். வளர்மதி (முன்னாள் அமைச்சர், திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம்) இன்று முதல் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English Summary

    AIADMK General Secretary Edappadi Palaniswami has announced the removal of former Minister S. Valarmathi from the post of party Organizing Secretary. EPS took this decisive action following reports that Valarmathi, a former minister from Trichy, is set to join the TVK party tomorrow.