நீ வேணா சண்டைக்கு வா.. எடப்பாடியிடம் விடாமல் ஒரண்டை இழுக்கும் சி.விஜயபாஸ்கர்! ஓ.. இதுதான் ப்ளானா?

  • சென்னை: 2026 தமிழக சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு ஆளும் - ஆண்ட கட்சியாக இருந்த அதிமுகவில் உட்கட்சி மோதல்கள் ஓயாமல் நீடித்து வரும் நிலையில், முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கரின் தொடர் சமூக வலைதள பதிவுகள் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் அவர் பதிவிட்டு வருவது, அவராகவே தன்னை கட்சியை விட்டுநீக்க வேண்டுமென்பதற்காகத் தான் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள். அப்படி நீக்கினால் தவெகவில் இணைவது ஈசியாக இருக்கும் என்றும் சொல்கின்றனர்.

    Advertisement

    2026 சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட பரபரப்புகள் இன்னும் முழுமையாக அடங்கவில்லை. தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து கட்சிக்குள் அதிருப்தி குரல்கள் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்தன.

    Advertisement

    மேலும், சிவி சண்முகம், எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட சில மூத்த தலைவர்களின் ஆதரவாளர்கள், சட்டப்பேரவையில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவு தெரிவித்த சம்பவம் கட்சிக்குள் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது.

    சி விஜயபாஸ்கர்

    இதையடுத்து அதிமுக இரண்டு அணிகளாக செயல்படுகிறது என்ற தோற்றம் உருவானது. பின்னர் பல்வேறு சமரச முயற்சிகளுக்குப் பிறகு இரு தரப்பினரும் மீண்டும் இணைந்தாலும், கரங்கள் இணைந்தாலும் மனங்கள் இணையவிலை என்பதைப் போல அதிருப்தி முற்றிலும் அடங்கவில்லை என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. இந்த சூழலில் தான் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீண்ட நாட்களாக வெளிப்படையான கருத்துக்களை தெரிவிக்காமல் இருந்து வந்தார்.

    Advertisement

    எடப்பாடி பழனிசாமி

    ஆனால் சமீப நாட்களாக அவரது சமூக வலைதள பதிவுகள் எடப்பாடி பழனிசாமியை விமர்சிப்பது போல் தான் உள்ளது என்ற கருத்து அதிமுக வட்டாரங்களில் பேசப்படுகிறது. நேற்று கூட அவர் வெளியிட்ட பதிவில், "உழைக்கும் உண்மைத் தொண்டர்களை எதிரிகளாகப் பார்க்கும் தலைமையும், கேள்வி கேட்பதையே குற்றமாகப் பார்க்கும் அரசியலும் வெற்றிக்கான பாதை அல்ல" என்று குறிப்பிட்டிருந்தார்.

    அதிமுக தலைமை

    அந்த பதிவு அதிமுக தலைமைக்கு எதிரான மறைமுக விமர்சனமாக பார்க்கப்பட்டது. குறிப்பாக, கட்சிக்குள் கருத்து தெரிவிப்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டை அவர் வெளிப்படுத்துகிறார் என்கின்றனர். இந்த நிலையில், தற்போது அவர் வெளியிட்டுள்ள புதிய பதிவு மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில், "தலைமை என்பது அதிகாரமோ, ஆணவமோ அல்ல. அர்ப்பணிப்பு மிகுந்த அரவணைப்பு. உழைக்கும் தொண்டர்களின் மனதை வெல்ல முடியாத தலைமை, மக்களின் மனதை எப்படி வெல்லும்? உணர்வுகளை மதிக்காத இடத்தில் உண்மையான பயணம் சாத்தியமா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    Advertisement

    எடப்பாடிக்கு பிரஷர்

    இந்த பதிவு வெளியான சில மணி நேரங்களிலேயே சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த நிலையில், அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் இதுகுறித்து பல்வேறு தகவல்கள் உலாவுகின்றன. சி. விஜயபாஸ்கரின் இந்த தொடர் பதிவுகள் வெளியாவதற்கு காரணமே எடப்பாடி பழனிசாமிக்கு பிரஷரை எகிற வைப்பதற்காகத் தான் என்கின்றனர் அண்ணனின் அடிவருடிகள்.

    கட்சி தாவுவது உறுதி

    கடந்த சில வாரங்களாகவே சி விஜயபாஸ்கர் கட்சி தாவுவது உறுதி தான் என்ற பேச்சுக்கள் அடிக்கடி உலா வருவது வழக்கம்தான். ஆனால் இது தொடர்பாக அவர் எந்த விதமான அறிவிப்பையும் வெளியிடவில்லை. தனது அரசியல் எதிர்காலம் பலமுறை மக்களையும், கட்சி நிர்வாகிகளையும் சந்தித்த பிறகும் சி விஜயபாஸ்கர் இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை. இந்த நிலையில் இந்த தொடர் பதிவுகளின் பின்னணியில் முக்கிய விஷயம் இருப்பதை சுட்டிக்காட்டுகின்றனர் விஜயபாஸ்கருக்கு முன்பே அரசியல் செய்துவரும் அதிமுகவினர்.

    Advertisement

    எம்எல்ஏ பதவி

    ஜெயலலிதா காலத்தில் ஏதாவது ஒரு நிர்வாகி தவறாக பேசினாலே உடனடியாக கட்சியில் இருந்து நீக்கப்படுவார். ஆனால் எடப்பாடி அப்படி முடிவு எடுப்பதில்லை. தற்போது தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு விஜயபாஸ்கர் மீண்டும் தேர்தலில் நிற்பது கத்தி மேல் நடப்பதற்கு சமம். ஒருவேளை தோற்றுவிட்டால் அதிமுகவிலிருந்து சென்றதால் தான் அவர் தோற்றுவிட்டார் என அதிமுகவினர் பிரச்சாரம் செய்வார்கள்.

    தமிழக வெற்றி கழகம்

    மேலும் தமிழக வெற்றி கழகத்தில் சேர்ந்தாலும் சீட்டு கிடைக்குமா என்பது கேள்விக்குறி. ஒருவேளை சீட்டு கொடுத்தாலும் ஜெயிக்க முடியுமா என்பது மதில் மேல் பூனையாகத்தான் இருக்கிறது. இந்த நிலையில் ஜெயலலிதா போலவே எடப்பாடி தன்னை ஒரு ஆளுமையாக காட்டிக்கொள்வதற்காக முயன்று வரும் நிலையில் இப்படி தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமியை மறைமுகமாக விமர்சித்தால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து தன்னை நீக்கிவிடுவார். இதன் மூலம் தான் ஒரு சுதந்திர எம்எல்ஏவாக தவெகவில் இணையலாம் என்பதுதான் விஜயபாஸ்கரின் திட்டம் என்கின்றனர்.

    Advertisement

    புதுக்கோட்டை அரசியல்

    இது மட்டுமல்லாமல் புதுக்கோட்டை அரசியல் வட்டாரங்களில் மற்றொரு பேச்சும் உலாவுகிறது. அது திமுகவில் சேரப் போகிறார் விஜயபாஸ்கர் என்பதுதான். ஆனால் அது தொடர்பாகவும் அவர் இதுவரை வாய் திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் விஜயபாஸ்கரை வரவேற்க திமுகவும் - தமிழக வெற்றி கழகமும் தயாராக இருக்கிறது என்பது மட்டும் உண்மை.

    English Summary

    C. Vijayabaskar’s repeated posts fuel speculation over his future in AIADMK and possible political shift.