மிதுனை விடுங்க.. தவெகவில் ஐக்கியமான எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய சொந்தம்! அதிமுக காலி?

  • சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தில் இன்று மாற்றுக் கட்சியினர் பலர் இணைந்தனர். அதில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய உறவுக்கார பெண்ணான மேனகாவும் இணைந்திருக்கிறார். இதை பார்த்த பலரும், என்னங்க இது.. எடப்பாடி உறவினர் கூட தவெகவுக்கு வந்துட்டாங்க என்று விமர்சித்துள்ளனர்.

    Advertisement

    சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு, தமிழக அரசியலில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. குறிப்பாக அதிமுகவிலிருந்து பல முக்கிய தலைவர்கள் வெவ்வேறு கட்சிகளுக்கு தாவியுள்ளனர்.

    Advertisement

    அதிமுக டூ தவெக

    தேர்தலுக்கு முன்னதாகவே, எடப்பாடி பழனிசாமியின் தலைமையை விமர்சித்திருந்த செங்கோட்டையன் கட்சியிலிருந்து ராஜினாமா செய்துவிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து விட்டார். ஒரு தேர்தலை கூட சந்திக்காத, ஒரு வெற்றியை கூட பதிவு செய்யாத ஒரு கட்சியில் எப்படி இவர் இவ்வளவு தைரியமாக இணைந்தார் என்று விமர்சனங்கள் எழுந்திருந்தன.

    மாஸ் காட்டிய விஜய்

    ஆனால், சட்டமன்ற தேர்தல் தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய மேஜிக்கை நடத்தி காட்டியிருந்தது. திமுக, அதிமுக என 2 பெரிய திராவிட கட்சிகளை ஓரம் தள்ளி, 60 ஆண்டுகளுக்கு திராவிட கட்சி அல்லாத ஆட்சியை தவெக கொடுத்திருக்கிறது. மறுபுறம் அதிமுக எதிர்க்கட்சி என்கிற அந்தஸ்தை இழந்து 3வது இடத்தை பிடித்தது. தவெகவின் இந்த வெற்றியை பார்த்து மிரண்டு போன அதிமுக நிர்வாகிகள் பலர் அடுத்தடுத்து தங்கள் பொறுப்பை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர்.

    Advertisement

    கட்சி தாவிய முக்கிய தலைகள்

    • உடுமலை கே.ராதாகிருஷ்ணன்
    • எம்.சி.சம்பத்
    • கடம்பூர் ராஜு
    • என்.ஆர்.சிவபதி
    • வெல்லமண்டி நடராஜன்
    • ஆனந்தன்
    • சி.விஜயபாஸ்கர்
    • கே.டி.பச்சைமால்

    அதிமுக காலி?

    என லிஸ்ட் நீண்டுக்கொண்டே சென்றது. இந்த லிஸ்ட்டில், கரண்ட் எம்எல்ஏவாக இருந்த மரகதம் குமரவேல், எஸ்.ஜெயகுமார், பி.சத்தியபாமா தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் இணைந்தனர். இதுபோக சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் 25 அதிமுக எம்எல்ஏக்கள் விஜய்க்கு ஆதரவு தெரிவித்திருந்தனர்.

    இப்படி இருக்கையில் இன்று பனையூரில் தவெகவில் இணைய ஏராளமானோர் குவிந்துள்ளனர். குறிப்பாக எடப்பாடி பழனிசாமியின் சொந்த தொகுதியிலிருந்து, அவரது நெருங்கிய உறவுக்கார பெண்ணான மேனகா என்பவரும் இன்று தவெகவில் இணைந்திருப்பது, எடப்பாடி பழனிசாமிக்கு ஏற்பட்டிருக்கும் அதிருப்பதியை வெளிப்படுத்துவதாக தவெகவினர் கூறுகின்றனர்.

    Advertisement

    எடப்பாடி பழனிசாமியின் மகன் கட்சியின் முக்கிய பொறுப்புகளுக்கு கொண்டுவரப்படுவதாக பேச்சுக்கள் அடிப்பட்டிருந்தன. இதை மறுத்த எடப்பாடி, எனது மகன் சாதாரண தொண்டன்தான் என்று கூறியிருந்தார். ஆனால், தற்போது அவரது நெருங்கிய உறவினர்கள் தவெகவில் இணைந்து வருகின்றனர்.

    English Summary

    EPS's Relative Shifts Loyalty: Many members from other parties joined the Tamizhaga Vettri Kazhagam (TVK) today. Among them is Menaka, a close female relative of AIADMK General Secretary Edappadi Palaniswami. Observing this, many have remarked, "What is this? Even a relative of Edappadi has joined TVK."