கரூர் சம்பவத்தில் விஜய் மீது வழக்கு போட்டிருந்தால் இன்று நிலைமையே வேறு.. நாங்க ஏமாந்துட்டோம்! எவ வேலு

  • சென்னை: கரூர் சம்பவத்தின் போது மட்டும் நாங்கள் அன்றைக்கு எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து இருந்தால் இன்று நிலைமையே வேறு என முன்னாள் அமைச்சர் எ.வ வேலு தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், ஒரு கனம் நாங்கள் ஏமாந்துவிட்டோம் என்றும், ஏமாந்துவிட்டோம் என்று சொல்வதை விட, எங்கள் தலைவரோட தாயுள்ளம் அதற்கு ஒரு காரணமாக ஆகிவிட்டது என்று அவர் கூறினார்.

    Advertisement

    சென்னையில் நடந்த திமுக மகளிரணி கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் எ.வ வேலு கூறியதாவது:- "மிஸ்டர் சிஎம் சார்.. இல்லாதது பொல்லாதது எல்லாத்தையும் எங்க மேல சொன்னீங்க.. ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் போது நான் ஒன்றை உள்ளபடியே ஒற்றுக்கொள்கிறேன். 'ஒரு கனம நாங்க ஏமாந்துவிட்டோம்.. ஒரு கனம்..' ஏமாந்துவிட்டோம் என்று சொல்வதை விட, எங்கள் தலைவரோட தாயுள்ளம் அதற்கு ஒரு காரணமாக ஆகிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

    Advertisement

    எஃப் ஐ ஆர் போட வேண்டாம் என்று சொன்னார்

    41 பேர் கரூரில் செத்து போயிட்டாங்க.. காவல்துறை எஃப் ஐ ஆர் போட வேண்டுமா? இல்லையா? அதிகாரிகள் எல்லாம் எஃப் ஐ ஆர் போட வேண்டும் என சொல்கிறார்கள். கெஞ்சுகிறார்கள்.. ஆனால் எங்க தலைவன் என்ன சொன்னார் என்று எல்லாருக்குமே தெரியும்.. எந்த கட்சித் தலைவனாவது தன் சொந்த கட்சிக்காரர்கள் சாவார்கள் என்று இப்படி செய்வார்களா.. என கூறி, அத்தனை அதிகாரிகளும் எஃப் ஐ ஆர் பதிவு செய்வோம் என்று சொன்ன பிறகும் கூட எஃப் ஐ ஆர் போட வேண்டாம் என்று சொல்லிய தாயுள்ளம் கொண்ட தலைவர் எங்கள் தலைவர்.

    Advertisement

    அவர் அன்று மட்டும் வழக்கு பதிவு செய்து இருந்தால் இன்று நிலைமையே வேற.. அடுத்தது எல்லா மேடையிலும் சொன்னார் அவர், திமுக அரசியல் எதிரி என்றும், கொள்கை எதிரி என்று பாஜகவை சொல்கிறார். அதாவது டெல்லியில் இருப்பவர்கள் கொள்கை எதிரியாம், இங்கு இருக்கும் நாங்கள் அரசியல் எதிரிகளாம். இங்கே இருக்கிற நாம் அரசியல் எதிரியாம்.. இந்த ஒரு வார்த்தைக்காக நான் பல நாட்கள் தனி அறையில் இருந்து யோசித்தேன்..

    நாங்கள் விமர்சிக்காமல் இருந்துவிட்டோம்..

    நான் யோசித்து யோசித்து பார்த்தேன்.. இதனால் என் தலையில் இருந்தது எல்லாம் போயிடுச்சு.. அரசியல் எதிரி என்றால் என்னய்யா அர்த்தம்.. திமுகவில் இருந்தவர் எம்.ஜி.ஆர்.. கலைஞரும், எம்ஜிஆரும் நண்பர்களாக இருந்தனர். அவருக்கு திமுகவில் பதவி கூட வழங்கப்பட்டிருந்தது. திமுக பொருளாளர், நண்பர்.. அவர் திமுகவில் இருந்து விலகி கட்சி ஆரம்பித்த பிறகு அவர் இப்படி அரசியல் விரோதம் என சொன்னால் பொருத்தமாக இருக்கும். ஆனால் சிஎம் சார் நீங்க என்ன திமுகவில் இருந்தீர்களா?.. திமுகவுக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்.. ஆனால் நாடு முழுக்க அரசியல் எதிரி என சொல்லிக்கொண்டு இருக்கிறார்..

    Advertisement

    அவர் எங்களை பற்றி பேசிக்கொண்டே இருந்தார். ஆனால் நாங்கள் பதிலுக்கு ஒன்றுமே பேசவில்லை. எங்கள் தலைவர் நாம் மக்களுக்கு நிறைய செய்து இருக்கிறோம். அவர்கள் பார்த்துக்கொள்வார்கள் என்று சொல்லிவிட்டார். அவரை விமர்சிக்க வேண்டாம் என சொன்னவர் தான் எங்கள் தாயுள்ளம் கொண்ட தலைவர்.. இவ்வாறு அவர் பேசினார்.

    கரூர் கூட்ட நெரிசல்

    கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் விஜய்யை பார்க்க வந்த 41 பேர் பலியாகினர். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் ஐபிஎஸ் அதிகாரி அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. கரூர் சம்பவம் தொடர்பாக புஸ்சி ஆனந்த, சிடிஆர் நிர்மல் குமார், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    Advertisement

    எனினும், தவெக தலைவர் விஜய் மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. கரூர் கூட்டநெரிசல் வழக்கில் மதியழகன் கைதும் செய்யப்பட்டார். கரூர் வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தவெக சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், நீதிபதி அஜய் ரஸ்தோகி கண்காணிப்பின் கீழ் சிபிஐ விசாரணை செய்ய உத்தரவிட்டது. இதன்படி, கரூர் வழக்கை தற்போது சிபிஐ விசாரணை செய்து வருகிறது.

    English Summary

    EV Velu: Tamil Nadu Minister EV Velu claimed that Chief Minister MK Stalin refused to allow an FIR after the Karur rally tragedy that reportedly killed 41 people. His remarks have sparked fresh political debate, while the CBI continues its investigation into the case.