“ரீல்.. ரீல்”.. சட்டசபையில் எ.வ.வேலு காட்டிய சைகை.. திரும்பிப் பார்த்து புன்னகைத்த முதல்வர் விஜய்!

  • சென்னை: "எங்கள் மீது குற்றச்சாட்டுகள் வைக்கும்போது எங்களுக்கு பேச அனுமதி அளித்தால் தான், நேரலையில் சரியாக இருக்கும். இல்லை என்றால், ரீல் கட் ஆகி மேலே போய் விடுகிறது" என சைகையில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு பேச, அவர் செய்ததை திரும்பிப் பார்த்து முதல்வர் ஜோசப் விஜய் சிரித்துவிட்டார்.

    Advertisement

    தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 5 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. சட்டசபை இன்று கூடியதும் பேரவையின் 110 விதியின் கீழ் மூன்று முக்கிய அறிவிப்புகளை முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்தார். பரந்தூர் விமான நிலையம் திட்டம் கைவிடப்படுவதாக முதல்வர் விஜய் அறிவித்தார். பரந்தூர் விமான நிலையம் பற்றிய விவாதத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து திமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

    Advertisement

    பின்னர் திமுக உறுப்பினர்கள் அவைக்குள் வந்ததைத் தொடர்ந்து, மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்து வருகிறது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, செய்தி மற்றும் விளம்பரத் துறை, எழுது பொருள் மற்றும் அச்சுத் துறை, பள்ளிக் கல்வித் துறை, தமிழ் வளர்ச்சித் துறை, உயர்கல்வித் துறை என மொத்தம் 6 துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதம் இன்று நடைபெற்று வருகிறது.

    திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில், "எதிர்க்கட்சிகள் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படும்போது அவைக்குறிப்பில் இருந்து நீக்குவதாகச் சொல்கிறீர்கள். ஆனால் அது லைவில் போய்விடுகிறது. அதற்கு பதில் அளிக்க தங்களுக்கு பேச அனுமதி அளித்தால்தான் நேரலை ஒளிபரப்பில் சரியாக இருக்கும்.

    Advertisement

    இல்லையெனில் ரீல் கட் ஆகி மேலே போய் விடுகிறது.. ரீல்.. ரீல்" என சைகையில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். இதனை அவையிலிருந்த முதலமைச்சர் விஜய் சிரித்த முகத்துடன் திரும்பிப் பார்த்து ரசித்துப் புன்னகைத்தார்.

    இதன் காரணமாக இன்று காலையிலேயே சட்டசபையில் திமுக எம்.எல்.ஏக்கள் கூச்சலிட்டு, வெளிநடப்பு செய்துவிட்டுத் திரும்பிய பிறகு சட்டப்பேரவையில் நிலவிய காரசாரமான சூழல் தணிந்து சிறிது நேரம் கலகலப்பான சூழல் உருவானது.

    English Summary

    “It would be better for the live broadcast if we were allowed to speak when allegations are leveled against us; otherwise, the feed gets cut off in segments,” former Minister EV Velu said using gestures, prompting Chief Minister Joseph Vijay to look back at his actions and smile.