ரூ 100 கோடி மோசடி வழக்கு! அன்பில் மகேஷ் கைது! பச்சை சட்டையில் சிரித்தபடியே போலீஸ் ஜீப்பில் Anbil

  • சென்னை: திமுக ஆட்சியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக இருந்த போது தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ 100 கோடி முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் முன்ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததை அடுத்து அவர் மத்திய குற்றப்பிரிவு போலீஸரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    Advertisement

    திமுக ஆட்சிக் காலத்தில் தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் மற்றும் டிடிசிபி உள்ளிட்ட அனுமதிகளைப் பெற்றுத் தருவதாக கூறி ரூ 100 கோடிக்கு மேல் மோசடி செய்ததாக தனியார் பள்ளி நிர்வாகிகள் புகார் அளித்தனர்.

    Advertisement

    இந்த புகாரின் பேரில் திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ், தனியார் பள்ளி சங்க தலைவர் பி.டி.அரசகுமார், முன்னாள் எம்எல்ஏ முத்துக்குமார், சுரேஷ், ராஜா உள்ளிட்டோர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    விசாரணை

    இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி அன்பில் மகேஷ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு நீதிபதி லட்சுமி நாராயணன் முன் கடந்த 12 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, "ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் அரசுத் துறை செயலாளரின் அனுமதியுடன் அன்பில் மகேஷ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது." என அன்பில் தரப்பு வாதம் முன்வைக்கப்பட்டது.

    Advertisement

    ஆளுநரின் அதிகாரம்

    உடனே குறுக்கிட்ட நீதிபதி, "ஆளுநரின் அதிகாரம் குறித்து திமுக எப்போது பேச ஆரம்பித்தது? ஆட்டுத் தாடியுடன்தானே ஆளுநர் பதவியை திமுக ஒப்பிடும்? ஆட்டுக்குத் தாடியும், மாநிலத்திற்கு ஆளுநரும் தேவையற்றது என ஒப்பிட்டு பேசிய அதே நிலையில் தற்போதும் திமுக இருக்கிறதா?

    ஆளுநர் பதவி

    திமுகவை பொருத்தவரை ஆளுநர் பதவி என்ற ஒன்றே தேவை இல்லாததுதானே?" என சரமாரி கேள்விகளை எழுப்பிய நீதிபதி, இந்த வழக்கில் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என தெரிவித்தார். மேலும் இந்த வழக்கு விசாரணையை அக்டோபர் 29ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார். இந்த நிலையில் அன்பில் மகேஷ், சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனு கடந்த அக்டோபர் 16ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.

    Advertisement

    8 மணி நேர விசாரணை! 240 கேள்விகள்

    அப்போது அன்பில் மகேஷ் வழக்கறிஞர் ஏற்கெனவே செப்டம்பர் 18ஆம் தேதி காவல் துறை முன்பு ஆஜரானதாகவும், 8மணி நேரம் 240 கேள்விகளை கேட்டதாகவும், முழு ஒத்துழைப்பு அளித்ததாகவும், தனக்கு சொந்தமான இடங்களில் நடத்திய சோதனையில் பல ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும்,10 ஆண்டுகளுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்பியதாகவும், அதில் 7 ஆண்டுகளுக்கான கணக்கை தாக்கல் செய்ததாக அன்பில் மகேஷ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    காவல் துறை மறுப்பு

    அப்போது அன்பிலுக்கு முன்ஜாமீன் தர காவல் துறை எதிர்ப்பு தெரிவித்தது. "அன்பில் மகேஷை காவலில் வைத்து விசாரிக்க வேண்டியது அவசியம். இந்த வழக்கில் 400 கோடிக்கு மேல் முறைகேடு நடந்திருக்கிறது. எனவே அவருக்கு முன்ஜாமீன் வழங்கினால் எந்த உண்மையும் வெளிவராது.

    Advertisement

    முன்னாள் எம்எல்ஏ முத்துக்குமார்

    வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முத்துக்குமாரை அன்பில் மகேஷ்தான் பாதுகாக்கிறார்" என காவல் துறை கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து அன்பில் மகேஷின் முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த மனு மீதான தீர்ப்பை இன்றைய தினம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி லட்சுமி நாராயணன் வழங்கினார். வழங்கியது. அதில் அன்பில் மகேஷ் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

    முன்ஜாமீன் ரத்து

    நீதிபதி தனது தீர்ப்பில், தற்போதைய நிலையில் முன்ஜாமீன் வழங்க முடியாது என்றும் விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதாக காவல் துறை மனுவை ஏற்று அன்பில் மகேஷ் மனுவை தள்ளுபடி செய்வதாக தெரிவித்தார். இதனால் அன்பில் மகேஷ் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் சென்னை அமைந்தகரையில் உள்ள அன்பில் மகேஷ் வீட்டிற்கு மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சென்றிருந்தனர். அங்கு வைத்து அவரை கைது செய்தனர். தற்போது அவரிடம் சென்னை காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. முன்னதாக அன்பில் வீட்டில் போலீஸ் குவிக்கப்பட்டது.

    English Summary

    Chennai Highcourt rejects anticipatory bail plea of DMK Ex Minister Anbil Mahesh Poyyamozhi in Rs 100 crore scam case results arrest.