10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு எப்போது? அட்டவணை வெளியிட்ட ராஜ்மோகன்!

  • சென்னை: 10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டுள்ளார். 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 3ல் தொடங்கி மார்ச் 29 வரை நடைபெறுகிறது. அதேபோல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 29ல் தொடங்கி ஏப்ரல் 12 வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    தமிழ்நாட்டில் 10, 11 மற்றும் 12 ஆகிய வகுப்பு பயிலும் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆயத்தமாகும் வகையில், அவர்களுக்கான பொத்ய்த்தேர்வு அட்டவணை 5 மாதங்களுக்கு முன்பாகவே வெளியிடப்படும். அந்த அடிப்படையில் பொதுத்தேர்வுக்கான அட்டவணையை இன்று அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட இருக்கிறார்.

    Advertisement

    12ஆம் வகுப்பை பொறுத்தவரை தமிழ், ஆங்கிலம் தவிர்த்து இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல், கணினி பயன்பாடுகள், வணிகவியல், கணக்கு பதிவியல், பொருளியல், வரலாறு, அரசியல் அறிவியல், புவியியல் மற்றும் தொழிற்கல்வி பாடங்கள் என்று பல்வேறு தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

    இதனால் தேர்வு அட்டவணை வெளியான பிறகு முழுமையான தேர்வு தேதிகள் மற்றும் செய்முறை தேர்வு விவரங்களை பள்ளிக் கல்வித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு அட்டவணையை அறிந்து கொள்ள மாணவர்களும் ஆர்வத்துடன் இருக்கின்றனர்.

    Advertisement

    இந்த நிலையில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 3ல் தொடங்கி மார்ச் 29 வரை நடைபெறுகிறது. அதேபோல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 29ல் தொடங்கி ஏப்ரல் 12 வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 11 மற்றும் 12 ஆகிய வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் மே 7ல் தேதி வெளியிட வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 20ல் வெளியிட வாய்ப்பு என்று கூறப்பட்டுள்ளது.

    12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை

    மார்ச் 3 - தமிழ்

    மார்ச் 8 - ஆங்கிலம்

    Advertisement

    மார்ச் 12 - வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல்

    மார்ச் 15 - கணினி அறிவியல், உயிர் வேதியியல், அரசியல் அறிவியல், புள்ளியியல், கணினி பயன்பாடு,

    மார்ச் 19 - உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிக கணிதம்

    மார்ச் 23 - இயற்பியல், பொருளியல்

    மார்ச் 29 - கணிதம், விலங்கியல்

    10ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை

    மார்ச் 17 - தமிழ்

    மார்ச் 25 - ஆங்கிலம்

    மார்ச் 31 - கணிதம்

    ஏப்ரல் 5 - அறிவியல்

    ஏப்ரல் 9 - சமூக அறிவியல்

    Advertisement

    ஏப்ரல் 12 - விருப்ப மொழி

    English Summary

    Exam: Class 10, 11, and 12 Board Exam Schedule to Be Released Today by Minister Rajmohan