EXCLUSIVE: காங் இல்லாத மெகா 3வது அணி! திமுக - CJP கூட்டணி? ஒரே கல்லில் 2 மாங்காய் அடிக்கும் ஸ்டாலின்

  • சென்னை: நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில், நாடு தழுவிய அளவில் மாணவர்களைத் திரட்டி போராட்டம் நடத்தி வென்றுள்ளது காக்ரோச் ஜனதா கட்சி. தீவிரமான போராட்டத்தால் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமாவும் செய்தார்.

    Advertisement

    தேசிய அளவில் சாதித்துக் காட்டிய காக்ரோச் ஜனதா கட்சி, இப்போது தேசிய அரசியலின் மையப்புள்ளியாக மாறியிருக்கிறது. டெல்லி ஜந்தர் மந்தரில் தொடங்கிய இந்த மாணவர் எழுச்சி, இந்திய அரசியலின் அத்தனை பெரிய தலைவர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ள நிலையில், அடுத்த கட்டமாக ஒரு மாபெரும் அரசியல் திருப்பம் அரங்கேற உள்ளதாக டெல்லி மற்றும் சென்னை அரசியல் வட்டாரங்கள் பரபரக்கின்றன.

    Advertisement

    தமிழ்நாட்டிலும் தேசிய அளவிலும் புதிய அலை

    நீட் போராட்டத்தின் ஆரம்ப நாளிலிருந்தே CJP கட்சிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட அனைத்து முக்கிய தலைவர்களும் தங்களது முழு ஆதரவை வழங்கி வந்தனர். நாடாளுமன்றத்திலும், தெருவிலும் திமுக வழங்கிய இந்த வலுவான ஆதரவு, தற்போது இரு கட்சிகளுக்கும் இடையேயான நெருக்கத்தை புதிய உயரத்திற்குக் கொண்டு சென்றுள்ளது.

    தற்போதைய தகவல்களின்படி, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் திமுக - CJP கூட்டணி அமைவது கிட்டத்தட்ட உறுதிசெய்யப்பட்டு விட்டதாகக் கூறப்படுகிறது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் எதிர்பாராத பின்னடைவைச் சந்தித்த திமுகவுக்கு, இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் பேராதரவைப் பெற்ற CJP கட்சியின் கூட்டணி, ஒரு மிகப்பெரிய அரசியல் வரப்பிரசாதமாகப் பார்க்கப்படுகிறது.

    Advertisement

    அகில இந்திய அளவில் 3வது அணி!

    இந்த கூட்டணியின் மிக முக்கியமான அம்சம்.. இதில் காங்கிரஸ் கட்சிக்கு இடம் இல்லை என்பதுதான்! அகில இந்திய அளவில் CJP தலைமையில் ஒரு சக்திவாய்ந்த 'மூன்றாவது அணி' உருவெடுத்து வருகிறது. அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி, அர்விந்த் கெஜரிவாலின் ஆம் ஆத்மி, மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ், தெலங்கானாவில் சந்திரசேகர் ராவின் BRS மற்றும் தமிழகத்தில் திமுக ஆகிய முக்கிய மாநிலக் கட்சிகள் இந்த கூட்டணியில் இணையப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    காங்கிரஸின் மெத்தனப் போக்கை விரும்பாத இளம் தலைமுறையினரும், மாநிலக் கட்சிகளும், CJPயின் இளைஞர் சக்தியை முன்னிறுத்தி பாஜகவுக்கும் காங்கிரஸுக்கும் மாற்றாக இந்த 3வது அணியைக் கட்டமைக்கத் திட்டமிட்டுள்ளன.

    Advertisement

    தவெக - காங்கிரஸ் கூட்டணி?

    ஏற்கனவே தமிழ்நாட்டில் காங்கிரஸ் - தவெக கூட்டணி உள்ளது. இதன் மூலம் தமிழக அரசியல் களம் நான்கு முனைப் போட்டியாக மாறும் சூழல் உள்ளது.. AIADMK - BJP, நாம் தமிழர், TVK-காங்கிரஸ் மற்றும் திமுக-CJP அணி!

    CJP-யின் இந்த திடீர் வருகையும் திமுக உடனான கூட்டணியும் தமிழக அரசியல் கணக்குகளை தலைகீழாக மாற்றக் கூடும். விஜய் தலைமையிலான தவெக கவர நினைக்கும் இளைஞர் வாக்கு வங்கியை அப்படியே தம் பக்கம் இழுக்க CJP-யின் கூட்டணி திமுகவுக்குப் பெரிதும் உதவும். இதன் மூலம் பாஜக, காங்கிரஸ் மற்றும் தவெக ஆகிய கட்சிகளின் வாக்கு வங்கியைத் தவிடுபொடியாக்கி, தமிழகத்தில் மீண்டும் தன் ஆதிக்கத்தைச் செலுத்த திமுக தயாராகி வருகிறது.

    Advertisement

    அதாவது இளைஞர் வாக்கு வங்கியை பிடித்தது போலவும் இருக்கும்.. காங்கிரசை காலி செய்தது போலவும் இருக்கும்.. ஒரே கல்லில் இரண்டு மாங்காய்!

    டெல்லியில் வெடித்த மாணவர் போராட்டம், இப்போது அகில இந்திய அரசியலிலும், தமிழகத்தின் தேர்தல் களத்திலும் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்திருக்கிறது!

    English Summary

    Exclusive: CJP-DMK Joining Hands in Tamil Nadu?