சென்னை மக்களிடம் டிரெண்டே மாறிடுச்சு.. புறநகரில் வீடு வாங்க ஆர்வம்.. எங்கெல்லாம் தெரியுமா?

  • சென்னை: சென்னையில் சொந்தவீடு வாங்க வேண்டும் என்பது பலருக்கும் கனவாக இருக்கிறது. ஆனால் அது உண்மையில் சாத்தியமா என்றால், லட்சங்களில் சம்பளம் வாங்குபவர்களுக்கே சற்று சவாலானது. அதனால் பலரும் சென்னையின் புறநகரில் தான் வீடுகள் வாங்க ஆர்வம் காட்டுகிறார்கள். சென்னைக்குள் என்றால் நல்ல ஏரியாக்களில் அடுக்குமாடி வீடுகளை வாங்க விரும்புகிறார்கள். இது காலம் காலமாக இருப்பது தான். ஆனால் சென்னை ரியல் எஸ்டேட் சந்தையில் சற்றே டிரெண்ட் மாறி வருகிறது.

    Advertisement

    சென்னை மாநகரை விட புறநகரில் நல்ல வீட்டு மனை வாங்குவது அண்மை காலங்களில் அதிகரித்துள்ளது. சென்னையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கட்டப்பட்ட பின்னர் தெற்கு பகுதியில் இந்த மாற்றம் அதிகரித்துள்ளது. அதேபோல் மெட்ரோ ரயில் திட்டங்கள் காரணமாகவும் பலர் புறநகரில் வீடுகள் வாங்க ஆர்வம் காட்டுகிறார்கள். அதுபற்றி விரிவாக பார்ப்போம்.

    Advertisement

    கொலியர் ஹோம்பையிங் செட்டிமெண்ட் சர்வே 2026 ல் வெளியிட்டஆய்வு முடிவுகள் சென்னையில் வீடு வாங்கும் போக்கே மாறியிருப்பது தெரியவந்துள்ளது. சென்னையில் வீடு வாங்க ஆசையுடன் உள்ள மக்களில் 90 சதவீதம் வீட்டு மனை வாங்கிப்போடவே விரும்புவதாக தெரிவித்துள்ளனர். அதன்பிறகு மெதுவாக அங்கு போய் வீடு கட்டுவது தெரியவந்துள்ளது. அதேநேரம் வெறும் 10 சதவீதம் பேர் மட்டுமே
    2 / 2.5 BHK அப்பார்ட்மெண்ட்டுகளை வாங்க விரும்புகிறார்கள். ஆனால் அந்த அடுக்குமாடியுமே பிரைம் லொக்கேசன், நல்ல வளர்ச்சி உள்ள பகுதி, சொகுசு வசதிகள், கேட்டேட் கம்யூனிட்டி போன்ற வசதிகளுக்காக வாங்கப்படுகிறது.

    Advertisement

    மக்களின் விருப்பம் என்ன

    முன்பெல்லாம் சென்னை மக்கள் கால் கிரவுண்ட் நிலம் வாங்கிப்போட்டு வைப்போம். பின்னாளில் வீடு கட்டி குடியேறுவோம் என்று தாம்பரம் முதல் கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், காட்டங்குளத்தூர், மாதவரம், ஆவடி, பூந்தமல்லி போன்ற பகுதிகளில் வாங்கி போட்டார்கள். ஆனால் வெறும் 600 சதுர அடி, 800 சதுர அடி மனைகளில் பெரிய வீடு கட்ட முடிவது இல்லை.. அப்படி வாங்கி கட்டியவர்களுக்கு கார் வாங்கி நிறுத்த முடியாத சிக்கலில் சிக்கி கொண்டார்கள்.

    இன்றும் பல வீடுகளில் வசதி இருந்தும் காரை வாங்கி நிறுத்த முடியாத காரணத்தால் தவிக்கிறார்கள். இப்படியான சிக்கல்கள் ஒரு புறம் எனில், வீடுமே எதிர்காலத்தில் குடும்பம் பெரிதாகும் போது போதவில்லை என்பதை தாமதமாக உணருகிறார்கள். இப்படி பல சிக்கல்களை பார்த்ததால், இப்போது சென்னையில் வீடு கட்ட விரும்பும் மக்கள், 600 சதுர அடி மனைக்கு பதில், 1000 சதுர அடி முதல் 1500 சதுர அடி வரை மனை வாங்க விரும்புகிறார்கள்.குறைந்தபட்சமே 900 சதுர அடி, 850 சதுர அடி என போகிறார்கள்.

    Advertisement

    1500 சதுர அடி நிலம்

    இது குறித்து நவீன்ஸ் நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டர் விஸ்வஜித் நவீன் கூறுகையில், "இப்போது வாடிக்கையாளர்கள் வாங்கும் மனைகளின் அளவு 50% வரை அதிகரித்திருக்கிறது. பலரும் இப்போது 1,500 சதுர அடி நிலங்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அப்போதுதான் முன்னாடி கொஞ்சம் காலியிடம் விட்டு, தாராளமான காற்றோட்டத்துடன் சொந்தமாக வீடு கட்ட முடிகிறது" என்றார்.

    சென்னை புறநகர்களின் எங்கு மக்கள் அதிகம் விரும்புகிறார்கள்

    சென்னையில் ஜிஎஸ்டி சாலை பகுதியான தெற்கிலும், பூந்தமல்லி சாலையான மேற்கிலும், மாதவரம் சாலையான வடக்கிலும் உள்கட்டமைப்பு வசதிகள் அசுர வேகத்தில் வளருகிறது. மெகா இண்டஸ்ட்ரியல் காரிடார், அவுட்டர் ரிங் ரோடு, பெரிஃபெரல் ரிங் ரோடு மற்றும் சென்னை மெட்ரோ கட்டம்-2 பணிகள் அடுத்தடுத்த நடக்கின்றன. இதனால் மக்கள் புறநகரில் வீட்டு மனை வாங்கி வீடு கட்ட அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்

    Advertisement

    எந்தெந்தப் பகுதிகள் அதிக டிரெண்ட்

    சென்னையில் தெற்கு பகுதியை பொறுத்தவரை ஓஎம்ஆர் சாலை, பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் ரோடு (இங்கு அடுக்குமாடி தான் விருப்பமாக உள்ளது), ஜிஎஸ்டி சாலை ஆகியவற்றுக்கு அருகில் உள்ள பாடுர், கேளம்பாக்கம், மாம்பாக்கம், கூடுவாஞ்சேரி, வண்டலூர், காட்டாங்குளத்தூர் போன்ற பகுதிகளை மக்கள் விரும்புகிறார்கள்.

    சென்னையின் மேற்கு பகுதிகளை பொறுத்தவரை தொழிற்சாலைகள் நிறைந்த ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், திருமழிசை, குத்தம்பாக்கம் பகுதியில் வேலை செய்யும் மக்கள் வீட்டு மனை வாங்க அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். அதேபோல் வட சென்னை பகுதியை பொறுத்தவரை மெட்ரோ இரயில் இணைப்பு மற்றும் போக்குவரத்து மையமாக உருவெடுக்கும் மாதவரம், பொன்னேரி, மிஞ்சூர் பகுதியில் வீட்டு மனை மற்றும் வீடு வாங்க மக்கள் அதிகம் விரும்புகிறார்கள்.

    Advertisement

    கொலியர்ஸ் இந்தியாவின் தேசிய இயக்குனர் விமல் நாடார் கூறுகையில், சென்னையின் வடக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் இன்டஸ்ட்ரியல் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் வளர்ச்சி பெரிய அளவிலான டவுன்ஷிப் திட்டங்களுக்கு வித்திட்டுள்ளது. அதேபோல மாதவரம் போன்ற பகுதிகள் 'டிரான்சிட்-ஓரியன்டட் டெவலப்மென்ட்' அமைப்பாக மாறி உள்ளது என்கிறார்.

    அப்பார்ட்மெண்ட்டில் 3BHK வீடுகளுக்கே டிமாண்ட்


    தனி வீடுகளுக்கு மவசு இருந்தாலும், ஓஎம்ஆர் சாலை, ரேடியல் சாலை உள்பட சென்னையின் பிரைம் லொக்கேசன்களில் அப்பார்ட்மெண்ட்டுகளின் தேவையும் அதிகமாக உள்ளது. ஆனால், அங்கேயும் பெரிய மாற்றம் நடந்துள்ளது. Anarock H1 2026 வெளியிட்ட அறிக்கையின் படி, சென்னையில் அப்பார்ட்மெண்ட் வாங்க விரும்புபவர்களில் 50%-க்கும் அதிகமானோர் 3BHK வீடுகளையே விரும்புவதாக தெரிகிறது. சிறிய வீடுகளை வாங்கியவர்களின் அவஸ்தைகள் மற்றும் கஸ்டங்களை பார்த்த அவர்கள், விசாலமான, காற்றோட்டமான பெரிய வீடுகளை எதிர்காலம் கருதி வாங்குகிறார்கள். அதேபோல் அடுக்குமாடி வீடு வாங்குவதில் எந்த பில்டர்கள் என்பதில் மக்கள் கவனமாக இருக்கிறார்கள்.

    நம்பகமான, மக்களிடம் பெயர் பெற்ற பில்டர்களிடம் வாங்கவே விரும்புகிறார்கள். அவர்களின் நம்பகத்தன்மையை சோதிக்கிறார்கள். அவர்கள் ஏற்கனவே கட்டிய அடுக்குமாடி வீடுகளில் வாழும் மக்கள் கூறும் கருத்துக்களுக்கு மதிப்பளிக்கிறார்கள். ஏனெனில் குறித்த காலத்தில் வீட்டை ஒப்படைக்கும் திறன், கட்டுமானத் தரம் மற்றும் சர்வீஸ் ஆகியவற்றைப் பார்த்துவிட்டுதான் மக்கள் முதலீடு செய்கிறார்கள் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

    English Summary

    Many people are interested in buying homes in Chennai's suburbs. Within the city, however, they prefer to buy apartments in prime areas.