ஓட்டுநர் உரிமம் பெறுவதில் செப் 15 முதல் நடைமுறைக்கு வரும் மாற்றங்கள் என்னென்ன? முழுமையான விளக்கம்

  • சென்னை: ஓட்டுநர் உரிமம் பெறுவதில் செப்டம்பர் 15 முதல் நடைமுறைக்கு வரும் மாற்றங்கள் என்னென்ன? வாகன ஓட்டிகள் அறிய வேண்டியது என்ன.. டிஜிட்டல் ஒட்டுநர் உரிமம் என்றால் என்ன.. ஒரிஜினல் லைசன்ஸ் வாங்கி வைத்த காரை ஓட்ட அனுமதித்தவர்கள் இனி எந்த மாதிரியான மாற்றங்களை எதிர்கொள்ள போகிறார்கள் என்பதை தெளிவாக பார்ப்போம்.

    Advertisement

    தமிழ்நாட்டில் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச்சான்று (ஆர்.சி) ஆகியவை இனி கார்டு வடிவில் வழங்கப்படாது என்றும் இந்த ஆவணங்கள் டிஜிட்டல் வடிவில் மட்டுமே வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை பொதுமக்களே ஆதார் கார்டு பாணியில் டவுன்லோடு செய்துகொண்டு உபயோகிக்கலாம் என்றும் இந்த புதிய நடைமுறை வரும் செப்டம்பர் 15-ம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது,

    Advertisement

    தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த செப்டம்பர் 2-ம் தேதி 110 விதியின் கீழ் முதல்வர் ஜோசப் விஜய் வெளியிட்ட அறிவிப்பில் கூறுகையில், "தமிழ்நாட்டில் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச்சான்று (ஆர்.சி.) பெறுவதற்குக் கட்டணமாக ரூ.250 விண்ணப்பதாரர்களால் செலுத்தப்பட்டு, சிப் பொருத்தப்பட்ட அட்டைகளாக தபால் மூலம் விண்ணப்பதாரர்களின் முகவரிக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இதனால் விண்ணப்பதாரர்களுக்குக் கிடைப்பதற்கு ஒரு வாரம் முதல் ஒரு மாதம் வரை காலதாமதம் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்களுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன.

    வாகனப்பதிவு சான்றிதழ் டிஜிட்டலில் பதிவிறக்கலாம்

    இந்த காலதாமதத்தை தவிர்க்கும் வகையில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச்சான்றிதழ் ஆகியவை மின்னணு (டிஜிட்டல்) முறையில் பொதுமக்கள் தாங்களே பதிவிறக்கம் செய்துகொள்ளும் நடைமுறை தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தப்படும். மாநிலம் முழுவதும் 15.9.2026 முதல், ஓட்டுநர் உரிமங்கள் மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழ்கள், டிஜிட்டல் முறையில், அதாவது 'டிஜிட்டல் டிரைவிங் லைசன்ஸ்' மற்றும் 'டிஜிட்டல் ரிஜிஸ்ட்ரேசன் சர்ட்டிபிகேட்' (டிஜிட்டல் ஆர்.சி.) வழங்கும் வசதி ஏற்படுத்தப்படும்.

    Advertisement

    ஓட்டுநர் தேர்வு அன்றே டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் கிடைக்கும்

    மின்னணு வாகனப் பதிவுச்சான்றிதழ் முறை (டிஜிட்டல் ஆர்.சி.) அறிமுகம் செய்வதன் மூலம், புதிய வாகனம் வாங்குவோர், டிஜிட்டல் ஆர்.சி.யை இணையம் வழியாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு, அன்றைய தினமே ஓட்டுநர் உரிமம் டிஜிட்டல் முறையில் வழங்கப்படும்.


    ஆவணம் தொலைந்தாலும் இனி கவலை என்ன

    அரசு அலுவலகங்கள் மற்றும் பிற அதிகாரப்பூர்வ அமைப்புகள் கியூஆர் கோர்டு-ஐ ஸ்கேன் செய்து மின்னணு முறையில் ஆவணங்களைச் சரிபார்க்க முடியும். இதன் மூலம் போலி ஆவணங்கள் தவிர்க்கப்படும். ஆவணம் தொலைந்தாலோ, சேதமடைந்தாலோ, இந்த முறையினால் மீண்டும் அவற்றை பதிவிறக்கம் செய்துகொள்ளவும், அச்சிட்டுக்கொள்ளவும் முடியும்.

    Advertisement

    எங்கிருந்தும் இனி லைசென்ஸ், ரிஜிஸ்ட்ரேஷசன் செய்யலாம்

    ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கும், வாகனத்தைப் பதிவு செய்வதற்கும், வாகனப்பதிவு புதுப்பித்தல் மற்றும் படிப்படியாக போக்குவரத்து சம்பந்தமான அனைத்து அலுவலக சேவைகளுக்கும் தமிழ்நாட்டில் எந்தவொரு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திலும் விண்ணப்பித்து எங்கும் பதிவு/உரிமம் வழங்குதல் (எனிவேர் ரிஜிஸ்ட்ரேசன்/லைசென்சிங்) என்ற முறையில் வசதிகள் படிப்படியாக நடைமுறைப்படுத்தப்படும்" இவ்வாறு முதல்வர் விஜய் கூறியிருந்தார்.

    முன்னதாக பழைய நடைமுறை என்ன?

    தமிழ்நாட்டில் மத்திய மோட்டார் வாகனச் சட்டம், 1988 மற்றும் தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகள் 1989இன் ஆகியவற்றின் கீழ் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களின் மூலம் ஓட்டுநர் உரிமம் வழங்குதல், உரிமத்தை புதுபித்தல், முகவரி மாற்றுதல், வாகனங்களை பதிவு செய்தல், பெயர் மாற்றுவது, வரி செலுத்துவது உள்ளிட்ட போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு சார்ந்த பணிகள் ஆன்லைன் வழியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    Advertisement

    ஓட்டுநர் உரிமம் பெற விரும்புவோர். மத்திய அரசின் பரிவாஹான் (Parivahan) என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பித்து, ஓட்டுநர் பயிற்சி உரிமத்தை பெற வேண்டும். அதனைப் பெற்று 6 மாத காலத்திற்குள் ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பித்து, ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெறுவதின் அடிப்படையில் ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட்டு வந்தது. டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் விநியோகிக்கப்படும் முறை ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள போதிலும், சிப், புகைப்படம் ஆகியவை இடம்பெற்ற அசல் உரிமம் ஸ்மார்ட் கார்டு வடிவில் தபால் மூலம் விண்ணப்பதார்களின் வீட்டிற்கு அனுப்பப்பட்டு வருகிறது. இதற்கான ரூ. 250 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கடந்த 2019-ம் ஆண்டு முதல் இந்த நடைமுறை அமலில் இருந்து இருக்கிறது. அதே போன்று, புதிதாக வாகனத்தை பதிவு செய்பவர்களுக்கும் வாகனப் பதிவு சான்றிதழ் (ஆர்.சி) கார்டு வடிவில் வீட்டு முகவரிக்கு அனுப்பப்படும் நடைமுறை இருக்கிறது

    Advertisement


    புதிய நடைமுறை இனி எப்படி இருக்கும்

    செப்டம்பர் 15 முதல் இனி ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பித்து, ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெற்றுவிட்டால், அன்றே ஓட்டுநர் உரிமம் டிஜிட்டல் வடிவில் வழங்கப்படும். உரிமம் அங்கீகரிக்கப்பட்ட தகவல் விண்ணப்பதார் அளித்த மொபைல் எண்ணிற்கு வந்த பின்னர், ஓடிபி கொண்டு டிஜிட்டல் ஓட்டுநர் உரிமத்தை பரிவாஹான் இணையதளத்தில் வழியாகவோ அல்லது எம்.பரிவாஹான் செயலியின் மூலமாகவோ பதிவிறக்கம் செய்ய முடியும்.எனவே இனி மேல் தனியாக ஸ்மார்ட் கார்டு தபால் மூலம் அனுப்பப்படாது. அதனை ஓட்டுநர்கள் டிஜிட்டல் முறையிலேயே பயன்படுத்த முடியும். அதிலுள்ள OR Code-ஐ ஸ்கேன் செய்வதன் மூலம் அதனின் உண்மை தன்மையை அதிகாரிகள் சரிபார்க்க முடியும். அதே போன்று, புதிய வாகனத்தை வாங்கி அதனைப் பதிவு செய்பவர்களுக்கும் டிஜிட்டல் ஆர்.சி வாங்கி கொள்ளலாம்.

    நன்மைகள்

    டிஜிட்டல் முறையில் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவு சான்றிதழ் ஆகியவறை எளிதாக டவுன்லாடு செய்து பயன்படுத்தலாம். எனவே ஒரிஜினல் லைசென்ஸ் தொலைந்து போய்விடுமே என்ற கவலை கிடையாது. மத்திய அரசின் டிஜிலாக்கருடன் இவை இணைக்கப்பட்டுள்ளதால், மொபைல் எண்ணை கொண்டு அதிலும் நம்மால் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

    சவால்கள் என்ன

    ஒரிஜினல் லைசென்ஸ் வாங்கி கொண்டு தான் காரை வாடகைக்கு விடுவார்கள்.. இனி ஒரிஜினல் லைசென்ஸ் வாங்க முடியாது என்பதால், காரை வாடகைக்கு விடுபவர்களுக்கு சிக்கல் வரும். அதேபோல் கார் ஓட்டுநர்களிடம் பல நிறுவனங்கள் ஒரிஜினல் லைசன்ஸ் கேட்டு வாங்கிவைப்பார்கள் இனி வாங்கி வைக்கவே முடியாது. அதேநேரம் ஆனால், எந்த ஒரு தனியார் நிறுவனமும் அல்லது நபரும் அசல் அரச ஆவணத்தைப் பிணையாக வைத்திருக்க சட்டப்பூர்வ உரிமை இல்லை கிடையா

    English Summary

    Explainer: What changes regarding obtaining a driving license in Tamil Nadu will come into effect from September 15?