சென்னை: தமிழகத்தில் ரியல் எஸ்டேட் துறையினர், நில உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் அரசு அலுவலகங்களில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு காண வேண்டும் என்று அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் (FAIRA) நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஹென்றி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
டாக்டர் ஹென்றி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் சார்பில், நவம்பர் 1-ம் தேதி கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஏ.எஸ். சக்திவேல் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், கூட்டமைப்பின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
அரசுக்கு முக்கிய கோரிக்கைகள்! கூட்டத்தில் பங்கேற்ற FAIRA நிறுவனர் டாக்டர் A. ஹென்றி, உறுப்பினர்கள் எதிர்கொள்ளும் நடைமுறைச் சிக்கைகளைக் கேட்டறிந்தார். அப்போது பதிவுத்துறை, வருவாய்த்துறை, DTCP, CMDA, TNRERA உள்ளிட்ட அரசு அமைப்புகளில் நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. பதிவுத்துறையின் ஆன்லைன் 3.0 மென்பொருளில் ஏற்படும் தொழில்நுட்பக் கோளாறுகளைச் சரிசெய்து, பத்திரப்பதிவை எளிமைப்படுத்த வேண்டும். பெரிய நிலங்களைச் சிறிய மனைகளாகப் பிரித்து விற்பனை செய்வதற்கான நடைமுறைகளை எளிதாக்க வேண்டும். வழிகாட்டி மதிப்பில் உள்ள முரண்பாடுகளையும் சரிசெய்ய வேண்டும். வருவாய்த்துறையில் பட்டா பெயர் மாற்றம் வருவாய்த்துறையில் பட்டா பெயர் மாற்றம், நில அளவை, உட்பிரிவு உள்ளிட்ட பணிகளுக்கு காலக்கெடு நிர்ணயித்து விரைவாக முடிக்க வேண்டும். DTCP-யில் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள நூற்றுக்கணக்கான மனைப்பிரிவு அனுமதிக் கோப்புகளுக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும். CMDA-வில் திட்ட அனுமதி, மனைப்பிரிவு அனுமதி மற்றும் நில வகைப்பாடு மாற்றம் தொடர்பான கோப்புகளைத் தேவையற்ற தாமதமின்றி முடிக்க வேண்டும். TNRERA-வில் திட்டப் பதிவு, புதுப்பித்தல் உள்ளிட்ட விண்ணப்பங்களுக்கும் விரைவான அனுமதி வழங்க வேண்டும். கிராமப்புற மனைப்பிரிவுகள் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மனைப்பிரிவு, கட்டிட அனுமதி வழங்குவதில் உள்ள காலதாமதத்தைத் தவிர்க்க வேண்டும். கிராமப்புற மனைப்பிரிவுகளுக்கான அடிப்படை வசதிகள் தொடர்பான விதிமுறைகளை நடைமுறைக்கு ஏற்ற வகையில் எளிமைப்படுத்த வேண்டும். மேலும், பதிவுத்துறையில் போதிய அனுபவமும் பயிற்சியும் பெற்ற அதிகாரிகளை நியமித்து, பணியாளர் பற்றாக்குறையைச் சரிசெய்ய வேண்டும். அரசு அலுவலகங்களில் இடைத்தரகர்கள் தலையீடு மற்றும் லஞ்சப் புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. ரியல் எஸ்டேட் துறை இதுகுறித்து டாக்டர் A. ஹென்றி பேசுகையில், ரியல் எஸ்டேட் துறை என்பது நில உரிமையாளர்கள், விவசாயிகள், கட்டுமானத் தொழிலாளர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் வீடு வாங்கும் பொதுமக்களின் வாழ்வாதாரத்துடன் தொடர்புடைய முக்கியமான துறை என்றார். அரசு அலுவலகங்களில் ஒரு கோப்புக்காக மாதக்கணக்கில் காத்திருக்கும் நிலை மாற வேண்டும். ஆன்லைன் சேவைகள் மக்களின் சிரமத்தைக் குறைக்க வேண்டும். அனைத்துத் துறைகளிலும் உள்ள பிரச்சினைகளை அரசு ஒருங்கிணைந்து ஆய்வு செய்து, காலக்கெடுவுடன் தீர்வு வழங்க வேண்டும். லஞ்சமில்லாத, இடைத்தரகர்கள் இல்லாத வெளிப்படையான நிர்வாகத்தை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார். கூட்டத்தின் முடிவில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த டாக்டர் ஹென்றி, உறுப்பினர்களின் கோரிக்கைகளை அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்று தீர்வு காண FAIRA தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்தார்