சென்னை: பொதுவாக ஹோட்டல்களில் குறிப்பிட்ட நேரத்தில் வந்தால் ஹேப்பி ஹவர்ஸ் தள்ளுபடி தருகிறோம் என சொல்லி விளம்பரப்படுத்துவதை நாம் பார்த்திருப்போம். ஆனால், இங்கு பிரபல மருத்துவமனை ஒன்றில் இதுபோல ஹேப்பி ஹவர்ஸ் என சொல்லி 40% தள்ளுபடி அறிவித்துள்ளனர். இது சமூக வலைத்தளங்களில் மிக பெரிய விவாதமாகியுள்ள நிலையில், இது குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்.
ஹோட்டல்களில் காலை நேரத்திலும் மாலை நேரத்திலும் டல் அடிக்கும். லஞ்ச் மற்றும் டின்னருக்கு மட்டுமே மக்கள் வருவார்கள் என்பதால் காலை மற்றும் மாலை நேரங்களில் மக்களை வரவழைக்க ஹோட்டல்கள் ஹேப்பி ஹவர்ஸை அறிவிப்பார்கள். இந்த குறிப்பிட்ட நேரத்தில் நாம் ஹோட்டல்களுக்கு சென்று சாப்பிட்டால் கூடுதல் தள்ளுபடி அல்லது 1+1 ஆஃபர்கள் கிடைக்கும்.
இதற்கிடையே பிரபல தனியார் மருத்துவமனையும் இதுபோல ஒரு சலுகையை அறிவித்துள்ளது. அதாவது மருத்துவமனையில் எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்க அதிகாலை சென்றால் 40 சதவீதம் தள்ளுபடி கிடைக்கும் என கூறியுள்ளதாம். பிரபல தனியார் மருத்துவமனையில் எம்ஆர்ஐ ஸ்கேனுக்கு எவ்வளவு என ஒருவர் கேட்டபோதே, இந்த ஆஃபரை மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. இதனை அந்த நபர் தனது சமூக வலைத்தளங்களில் பதிவிடவே அது டிரெண்டாகி வருகிறது. விஷால் கண்டேல்வால் என்பவரே இது குறித்த போஸ்ட்டை பகிர்ந்துள்ளார். அவர் அந்த தனியார் மருத்துவமனைக்கு போன் செய்த எம்ஆர்ஐ ஸ்கேன் கட்டணம் குறித்து விசாரித்ததாக தெரிவித்துள்ளார். அப்போது மருத்துவமனை நிர்வாகி ஒருவர் எம்ஆர்ஐ ஸ்கேனுக்கு ரூ.16,000 கட்டணம் என கூறியிருக்கிறார். கட்டணம் அதிகமாக இருப்பதாக விஷால் நினைத்தபோதே, அந்த மருத்துவமனை நிர்வாகி ஒருவர் எதிர்பாராத ஒரு ஆஃபர் குறித்து கூறியிருக்கிறார். அதாவது மருத்துவமனையில் அதிகாலை 2 மணி முதல் காலை 6 மணி வரை ஹேப்பி ஹவர்ஸ் ஆஃபர் இருப்பதாகவும், அந்த நேரத்தில் எம்ஆர்ஐ ஸ்கேன் செய்தால் 40 சதவீதம் தள்ளுபடி கிடைக்கும் என்றும் அந்த மருத்துவமனை நிர்வாகி தெரிவித்ததாக விஷால் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில், "எம்ஐஆர் ஸ்கேனுக்கு எவ்வளவு ஆகும் என தெரிந்து கொள்ள அழைத்தேன். அவர்கள் ரூ.16,000 என்றார்கள். நான் கட்டணம் அதிகம் என நினைத்த போதே, அவர்கள் அதிகாலை 2 மணி முதல் 6 மணி வரை ஹேப்பி ஹவர்ஸ் ஆஃர் உள்ளது. அந்த நேரத்தில் 40% தள்ளுபடி என்றார்கள்" என பதிவிட்டுள்ளார். மருத்துவமனையில் இதுபோல ஹேப்பி ஹவர்ஸ் இருப்பதாக வியப்பளிப்பதாக அவர் பதிவிட்டிருந்தார். இந்த போஸ்ட் சமூக வலைத்தளங்களில் டிரெண்டானது. இது தொடர்பாக நெட்டிசன்கள் பல்வேறு கருத்துகளை கூறி வருகிறார்கள். ஒரு தரப்பினர் மருத்துவமனைகளில் நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களில் நோயாளிகள் இருக்க மாட்டார்கள் என்பதால் இதுபோன்ற சலுகைகள் வழங்கி இருப்பார்கள் என பதிவிட்டுள்ளார். இன்னும் சிலர், "எம்ஆர்ஐ இயந்திரங்கள் இந்த நேரத்தில் சும்மா தான் இருக்கும். அந்த நேரத்தில் காசு பார்க்க இதுபோன்ற சலுகையை அறிவித்து இருப்பார்கள். கூட்டமும் இருக்காது என்பதால் முடிந்தால் இந்த ஆஃபரை பயன்படுத்தி கொள்வது சரியாகவே இருக்கும்" என பதிவிட்டுள்ளார். அதே மருத்துவமனையின் வேறு சில கிளைகளில் சிடி ஸ்கேனுக்கும் கூட இரவு நேரங்களில் ஆஃபர் வழங்கப்படுவதாக இன்னொருவர் பதிவிட்டுள்ளார். மருத்துவமனையில் வழங்கப்படும் இந்த ஆஃபர் பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க?சலுகை
40% கம்மி கட்டணம்
ஹேப்பி ஹவர்ஸ்
நெட்டிசன்கள்