விவசாயிகளுக்கு குட் நியூஸ்.. 50,000 இலவச மின் இணைப்புகள்.. மின்வாரியம் போட்ட மெகா பிளான்

  • சென்னை: தமிழ்நாட்டில் விவசாயிகளுக்கு புதிதாக 50,000 மின் இணைப்புகள் வழங்குவதற்கான பணிகளை மின்வாரியம் தீவிரப்படுத்தியுள்ளது. இதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், விவசாயிகளுக்கு விரைவாக மின் இணைப்புகளை வழங்கும் வகையில் அதிகாரிகளுக்கு மின்வாரிய இயக்குநர் முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். அதை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்...!!

    Advertisement

    விவசாயம் செய்வதற்கு தண்ணீர் மிகவும் முக்கியம்... மழையை மட்டுமே நம்பி விவசாயம் செய்ய முடியாத சூழலில், பல விவசாயிகள் தங்களது நிலங்களில் கிணறு, ஆழ்துளைக் கிணறு அமைத்து அதன் மூலம் தண்ணீர் எடுத்து பயிர்களுக்கு பாய்ச்சி வருகிறார்கள்.. இதற்காகவே மின்சார மோட்டார்களையும் பயன்படுத்துகிறார்கள்..

    Advertisement

    மின் மோட்டார்கள்

    ஆனால், மோட்டாரை இயக்குவதற்கு விவசாய மின் இணைப்பு அவசியம்.. மின் இணைப்பு இல்லாத விவசாயிகள் டீசல் மோட்டார் உள்ளிட்ட மாற்று வழிகளை நாட வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் அவர்களுக்கு கூடுதல் செலவும் சிரமமும் ஏற்படுகிறது. குறிப்பாக, சிறு மற்றும் குறு விவசாயிகள் இதனால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

    அதனால்தான் இதையெல்லாம் கருத்தில்கொண்டு விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் மின் இணைப்பு கிடைத்தால் விவசாயிகள் தங்களது நிலங்களில் உள்ள கிணறு அல்லது ஆழ்துளைக் கிணற்றில் இருந்து மின்சார மோட்டார் மூலம் தண்ணீர் எடுத்து பயிர்களுக்குப் பாய்ச்ச முடியும்.

    Advertisement

    50000 இணைப்புகள்

    இதற்காக மின் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என்பதால் விவசாயிகளின் சாகுபடிச் செலவும் குறையும். பயிர்களுக்குத் தேவையான நேரத்தில் தண்ணீர் பாய்ச்சவும், விவசாயப் பணிகளை தடையில்லாமல் மேற்கொள்ளவும் இந்த மின் இணைப்புகள் உதவியாக இருக்கும். இதனால் பல ஆண்டுகளாக விவசாய மின் இணைப்புக்காக காத்திருக்கும் விவசாயிகளுக்கு இந்த திட்டம் ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்,

    இந்த நிலையில், 2026-27ம் நிதியாண்டில் விவசாயிகளுக்கு புதிதாக 50,000 மின் இணைப்புகள் வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் அறிவித்தார். இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது. இதில் சாதாரண பிரிவில் 20000 இணைப்புகளும், சுயநிதி திட்டத்தில் 3,372 இணைப்புகளும் வழங்கப்பட உள்ளன.

    Advertisement

    தட்கல் சுயநிதித் திட்டம்

    அதேபோல், தட்கல் சுயநிதித் திட்டத்தில் 25282 இணைப்புகளும், அரசின் மற்ற திட்டங்களின் கீழ் 1346 இணைப்புகளும் வழங்கப்பட உள்ளன. இந்த திட்டத்திற்காக மின் இணைப்புகளுக்கு வழங்கப்படும் மானியமாக ரூ.127.56 கோடியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது... மேலும், மின் கம்பங்கள், மின்மாற்றிகள் உள்ளிட்ட தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த ரூ.750 கோடியை மின்வாரியம் செலவிட உள்ளது.

    இதன்மூலம் மின் இணைப்புக்காக பல வருடமாகவே காத்திருக்கும் விவசாயிகளுக்கு இணைப்பு கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. எலக்ட்ரிக் மோட்டார்கள் மூலம் தண்ணீர் இறைத்து பயிர்களுக்கு தேவையான நேரத்தில் பாசனம் செய்யவும், விவசாயச் செலவைக் குறைக்கவும் இது உதவியாக இருக்கும்.

    Advertisement
    உங்கள் வீட்டு மின் கட்டணம்.. கரண்ட் பில்லை நீங்களே மொபைலில் உருவாக்கலாம்.. மின்வாரியம் விளக்கம்

    இயக்குநர் உத்தரவு

    இப்படிப்பட்ட சூழலில்தான், திட்டமிட்டபடி 50,000 விவசாய மின் இணைப்புகளையும் வழங்குவதற்கான பணிகளை விரைவுபடுத்த மின்வாரிய இயக்குநர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

    அதில், "2026-27ம் நிதியாண்டில் திட்டமிட்டபடி 50,000 விவசாய மின் இணைப்புகளை வழங்குவதற்காக வட்டார வாரியாக இலக்குகள் நிர்ணயிக்க வேண்டும். இதுதொடர்பாக அனைத்து மண்டல தலைமைப் பொறியாளர்கள் மற்றும் மின் பகிர்மான வட்ட மேற்பார்வைப் பொறியாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நடப்பாண்டில் ஏற்கனவே மின் இணைப்பு வழங்குவதற்குத் தயார் நிலையில் உள்ள 48,944 விண்ணப்பங்கள் மற்றும் புதிதாகப் பெறப்பட்டுள்ள 1,056 விண்ணப்பங்கள் என மொத்தம் 50,000 விண்ணப்பங்களுக்கு வட்டார வாரியாக இலக்குகளை நிர்ணயித்து, விரைவாக மின் இணைப்புகளை வழங்குவதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

    Advertisement

    விவசாய மின் இணைப்புக்கு விண்ணப்பித்தவர்களில் எந்தெந்தப் பிரிவினருக்கு முதலில் இணைப்புகள் வழங்க வேண்டும் என்பது தொடர்பாகவும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக, அரசு நிதி ஒதுக்கும் திட்டங்களின் கீழ் வழங்கப்படும் விவசாய மின் இணைப்புகளுக்கு அதிக முன்னுரிமை அளிக்க வேண்டும்.

    மீனாட்சி அம்மன் கோயிலில் மின் தடை.. எடப்பாடி பழனிசாமி அப்செட்.. மின்வாரியம் தந்த விளக்கம் என்ன

    மோட்டார் மற்றும் பம்ப் செட்

    மின் இணைப்புக்கான மதிப்பீடுகளைத் தயாரித்தல், மின் இணைப்பு வழங்குவதற்கான பணிகளை மேற்கொள்ளுதல், மோட்டார் மற்றும் பம்ப் செட் பொருத்துவதற்கான தயார் நிலையை உறுதி செய்தல் உள்ளிட்ட பணிகளை நடைமுறையில் உள்ள தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் மின்பகிர்மான விதிகளின்படி மேற்கொள்ள வேண்டும்.

    மின் இணைப்பு வழங்குவதற்குத் தேவையான பெரிய அளவிலான மின் பொருட்கள் தேவைப்பட்டால், உத்தரவு கிடைத்த 7 நாட்களுக்குள் தலைமைப் பொறியாளர் தலைமை அலுவலகத்தைத் தொடர்புகொண்டு தேவையான பொருட்களை ஒதுக்கீடு பெற்றுக்கொள்ள வேண்டும்.

    நிர்ணயிக்கப்பட்ட இலக்கின்படி 50,000 விவசாய மின் இணைப்புகளையும் உரிய காலத்திற்குள் வழங்குவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்" என்று மின்வாரிய இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

    English Summary

    Farmers to Get 50,000 Free Electricity Connections.. What Is TANGEDCO's Mega Plan?