தவெகவில் இணைந்த ஜாய் கிரிசில்டா.. பெண்களுக்காக குரல் கொடுக்கவே அரசியலுக்கு வந்ததாக பேட்டி!

  • சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் தொடர்ந்து இணைந்து வரும் நிலையில், பிரபல ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிசில்டாவும் இன்று அக்கட்சியில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார்.

    Advertisement

    சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்திற்கு இன்று நேரில் சென்ற ஜாய் கிரிசில்டா, கட்சியின் உறுப்பினராக தன்னை அதிகாரப்பூர்வமாக இணைத்துக் கொண்டார். அதனை அவர் தனது எக்ஸ் பக்கத்திலும் அறிவித்துள்ளார்.

    Advertisement

    தமிழகத்தில் முன்னணி ஆடை வடிவமைப்பாளர்களில் ஒருவராக அறியப்படும் ஜாய் கிரிசில்டா, பல்வேறு பிரபலங்களுக்கான ஆடை வடிவமைப்பின் மூலம் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கியுள்ளார். தொழில்முனைவோர் என்ற அடையாளத்துடன் மட்டுமல்லாமல், சமூக நிகழ்வுகளிலும் பல்வேறு விழிப்புணர்வு பணிகளிலும் பங்கேற்று வந்தவர்.

    மேலும், திரைப்பட நடிகரும் பிரபல சமையல் கலை நிபுணருமான மாதம்பட்டி ரங்கராஜின் மனைவி என கூறி வரும் நிலையில் வழக்கு நீதிமன்றத்தில் நடந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே அவர் அரசியல் கட்சியல் இணையப் போவதாக பல்வேறு யூகங்கள் சமூக வலைதளங்களில் பரவி வந்தன. அந்த ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நேற்று அவர் நேரடியாக தவெக அலுவலகத்திற்கு சென்று கட்சியில் இணைந்துள்ளார்.

    Advertisement

    கட்சியில் இணைந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஜாய் கிரிசில்டா, தனது அரசியல் பயணத்தின் நோக்கம் குறித்து மனம் திறந்து பேசினார். குறிப்பாக பெண்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து குரல் கொடுப்பேன் என்றார். இதுகுறித்து பேசிய அவர், "இன்று நான் அதிகாரப்பூர்வமாக தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருக்கிறேன். பெண்களுக்கு ஆதரவாக வலுவான குரல் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் நீண்ட நாட்களாக என்னுள் இருந்தது. அதற்கான ஒரு தளமாகவே இந்த அரசியல் பயணத்தை நான் பார்க்கிறேன். பெண்களின் முன்னேற்றம், பாதுகாப்பு மற்றும் அவர்களது உரிமைகள் குறித்து தொடர்ந்து செயல்பட விரும்புகிறேன்" என்றார்.

    Advertisement

    அதே நேரத்தில், கட்சியில் தமக்கு வழங்கப்பட உள்ள பொறுப்பு அல்லது எதிர்கால அரசியல் திட்டங்கள் குறித்து தற்போது எதையும் தெரிவிக்க முடியாது என்றும், இன்னும் சில நாட்களில் தலைவர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார். அதன் பிறகு அனைத்தையும் விரிவாக பேசுகிறேன்" என்று தெரிவித்தார்.

    English Summary

    Fashion designer Joy Crisilda joins TVK, says her political entry is aimed at raising a strong voice for women.