சென்னை விமான நிலையத்திற்கு அடையாறு ஆற்றின் மீது நீளவாக்கில் மேம்பாலம் கட்டுவதற்கு கடும் எதிர்ப்பு

  • சென்னை: சென்னை விமான நிலையத்தை நிர்வகிக்கும் இந்திய விமான நிலையங்கள் ஆணையம், விமான நிலையத்திற்கு முன்புறம் மட்டுமின்றி, பின்புறமும் ஒரு பிரதான வழியை ஏற்படுத்த விரும்புகிறது. அப்படி ஒரு வழியை ஏற்படுத்தினால், டெர்மினல் 5 கட்ட முடியும். ஒரே நேரத்தில் ஏராளமான விமானங்களை கையாள முடியும். சுமார் 5.5 கோடி அளவிற்கு பயணிகளை கையாள டெர்மினல் ஐந்து கட்டாயம் ஆகும். அதற்கு ஆறுவழி மேம்பால சாலை அமைக்க வேண்டியதும் அவசியம் ஆகும். ஆனால் அந்த ஆறுவழி மேம்பால சாலை, அடையாறு ஆற்றின் மீது நீளவாக்கில் மேம்பால காட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

    Advertisement

    இது தொடர்பாக நெட்டிசன் ஒருவர் கூறுகையில், "சென்னை விமான நிலையத்தை நிர்வகிக்கும் இந்திய விமான நிலையங்கள் ஆணையம் (AAI), கூடுதல் சரக்கு போக்குவரத்தைக் கையாள்வதற்காக NH179B சாலையிலிருந்து நேரடி இணைப்புச் சாலை அமைக்கத் தமிழக அரசிடம் அனுமதி கேட்டுள்ளது. மக்களிடமிருந்து பட்டா நிலங்களைக் கையகப்படுத்துவது கடினம் என்பதால், அடையாறு ஆற்றின் மீதே இந்தப் பாதையை அமைக்கத் திட்டமிட்டுள்ளனர். ஆனால், செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரி நீர் திறக்கப்படும் முதன்மையான ஆறு இதுதான்.

    Advertisement

    பரந்தூர் புதிய விமான நிலையத் திட்டம் வந்தால் சென்னைக்கு வெள்ள அபாயம் ஏற்படும் என்றும், அங்கிருக்கும் 0.02 TMC கொள்ளளவு கொண்ட நீர்நிலைகள் அழியும் என்றும் கூறிப் பலர் கடுமையாக எதிர்த்தார்கள். ஆனால், இப்போது சென்னையின் முக்கிய வெள்ள மேலாண்மை அமைப்பான அடையாறு ஆற்றின் அகலத்தையும் நீளத்தையும் சுருக்கும் இந்தத் திட்டத்தை அமைதியாகக் கடந்து போகிறார்கள். இதில் எந்த ஒரு நியாயமும் இல்லை.

    பரந்தூர் திட்டத்தைப் பொறுத்தவரை, அதை எதிர்க்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ( கடந்த தேர்தலில் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை மண்டலத்தில் மக்களிடம் இருந்து பெரிய ஆதரவு கிடைத்தது. மக்கள் எதற்கு வாக்களித்தார்களோ அதைப்பெறுகிறார்கள். ஆனால், அடையாறு ஆற்றை ஆக்கிரமித்து அமைக்கப்படும் இந்த அறிவற்ற சாலைத் திட்டத்திற்கு யாருமே வாக்களிக்கவில்லை.

    Advertisement

    அடையாறு ஆற்றையோ அல்லது அதன் வெள்ளப் பெருக்குப் பகுதிகளையோ பாதிக்காமல், ஆற்றின் ஓரங்களில் உள்ள பட்டா நிலங்களைக் கையகப்படுத்தி இந்தச் சாலையைக் கட்டினால் யாருக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை.

    இப்போது சில சமூக வலைதள ஆதரவாளர்கள் "ஆற்றின் மீது பாலம் கட்டுவது இயல்பான ஒன்றுதானே" என்று பேசி வருகிறார்கள். ஆனால், ஆற்றின் குறுக்கே பாலம் கட்டுவதற்கும் (Bridge across the river), ஆற்றின் நீளவாக்கில் ஆற்றின் மீதே பாலம் கட்டுவதற்கும் (Bridge along the river) இடையே மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது.

    ஆற்றின் குறுக்கே கட்டப்படும் பாலங்கள் இயல்பானவை; அந்தச் சிறிய பகுதியில் ஆற்று நீர் செல்வதில் பெரிய தடங்கல் இருக்காது. பாம்பன் பாலம் போன்றவை முறையான பொறியியல் தொழில்நுட்பத்துடன், கரடுமுரடான நீர்நிலைகளைத் தாங்கும் வகையில் கட்டப்பட்டவை. எனவே, தரமான பொறியியல், சரியான திட்டமிடல் மற்றும் பராமரிப்பு ஆகியவைதான் முக்கியம்.

    இங்கு யாருக்கும் ஆற்றைக் கடக்கும் சாதாரணப் பாலங்கள் மீது பிரச்சனை இல்லை; அவர்கள் ஆற்றின் ஓட்டத்தை மறித்து, ஆற்றின் மீதே நீளமாகப் பாலம் கட்ட நினைக்கிறார்கள். இந்த இரண்டிற்கும் இடையே மிகப்பாரிய வேறுபாடு உள்ளது" இவ்வாறு கூறியுள்ளார்.

    English Summary

    AAI (which runs Chennai Airport) is asking TN govt for a direct road connection from NH179B to handle more cargo. This road will be built on the Adyar river (Since, we can’t acquire people land, rivers become a target). River here carries Chembarampakkam outflow.