கூட்டுறவு அங்காடிகளில்.. ரூ.30க்கு சன்ன ரக அரிசி விற்பனை! வழிக்கு வந்த தவெக அரசு!

  • சென்னை: அரிசி விலை மக்களை கடுமையாக பாதித்திருக்கிறது என்று ஒன் இந்தியா தமிழ் களத்தில் இறங்கி உண்மை நிலவரத்தை முதலில் பதிவு செய்திருந்தது. ஆனாலும், விலை உயரவில்லை என்று அமைச்சர்கள் சமாளித்தனர். இப்படி இருக்கையில், தற்போது கூட்டுறவு அங்காடிகள் மூலம் சன்ன ரக அரிசியை ரூ.30க்கு விற்க அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறது.

    Advertisement

    அரிசி விலை ஏறவே இல்லை என்று அமைச்சர்கள் கூறியிருந்த நிலையில், ஏன் இப்போது திடீரென அரிசியை குறைந்த விலைக்கு விற்பனை செய்கிறார்கள்? என்று பலரும் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.

    Advertisement

    அரிசி விலை உயர்வு

    தமிழகத்தை பொறுத்தவரை பருவமழை போதுமானதாக இல்லாதது, மேட்டூர் அணை உரிய நேரத்தில் திறக்கப்படாதது போன்ற காரணங்களால் அரிசி உற்பத்தி கடுமையாக பாதித்தது. இதன் காரணமாக விலையும் அதிகரித்தது. கிலோவுக்கு ரூ.20 வரையிலும், மூட்டைக்கு ரூ.200-500 வரையும் ரேட் எகிறியது. ரூ.500க்கு தினக்கூலியாக வேலைக்கு போகிறவர்கள் அரிசிக்காக ரூ.100 செலவிட்டால்.. மீதமுள்ள தொகையை வைத்து எப்படி குடும்பம் நடத்த முடியும் என்கிற கேள்வி எழுந்தது.

    கூட்டணி கட்சிகளின் குரல்

    அரிசி விற்பனையாளர்களால் கூட, நாளைக்கு என்ன விலை விற்கும் என்று உறுதியாக சொல்ல முடியாத நிலை இருக்கிறது. வாங்குகிற இடத்தில் அதிகமான விலையை சொல்வதாகவும், அப்படியே அவர்கள் கேட்கும் விலையை கொடுத்தாலும் அரிசி குறிப்பிட்ட நாளில் வந்து சேர்வதில்லை எனவும் விற்பனையாளர்கள் புலம்புகிறார்கள். அரிசி ஏற்றுமதி செய்யப்படும் டெல்டா மாவட்டங்களிலேயே நிலைமை இப்படித்தான் இருக்கிறது. விஷயம் பெரியதாக வெடித்த நிலையில், விலை உயர்வு பற்றி எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாது கூட்டணி கட்சிகளும் பேச தொடங்கியிருக்கின்றன.

    Advertisement

    விலைவாசி தொடர்ந்து உயர்வு

    இதன் காரணமாக தற்போது கூட்டுறவு அங்காடிகளில் ரூ.30க்கு சன்ன ரக அரிசியை விற்பனை செய்ய தமிழக அரசு நடவடிக்கையை எடுத்திருக்கிறது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வெங்கடரமணன், "அரிசி விலை ஒரே நாளில் உச்சத்தை தொடவில்லை. கடந்த 2024ல் ரூ.53க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ சன்ன ரக அரிசி, 2025ல் ரூ.65 என அதிகரித்தது. இப்படித்தான் உணவுப்பொருட்களின் விலை கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்திருக்கிறது. இதெல்லாம் முன்னாள் இருந்த அமைச்சர்கள் கவனித்திருக்க மாட்டார்கள்.

    கர்நாடகா, ஆந்திராவிலிருந்து வரும் பொன்னி அரிசியின் வரத்து குறைந்திருக்கிறது. சன்ன ரக அரிசியைதான் மக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இன்று முதல் 25,000 மெட்ரிக் டன் சன்ன ரக அரிசி 250 அமுதம் அங்காடிகள் மூலம் விற்பனை செய்ய திட்டமிட்டிருக்கிறோம்" என்று கூறியிருக்கிறார்.

    Advertisement

    சன்ன ரக அரிசி விற்பனை

    தகுதியுள்ள பொதுமக்கள் அனைவருக்கும் தலா 5 கிலோ வரை இந்த மலிவு விலை சன்னரக அரிசி விநியோகிக்கப்படும். முதற்கட்டமாக சந்தையின் தேவையை சமாளிக்க 25,000 டன் அரிசி உடனடியாக விடுவிக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்திருக்கிறது. தட்டுப்பாடின்றி தொடர்ந்து வழங்க.. ஒட்டுமொத்தமாக 1 லட்சம் டன் அரிசியை கொள்முதல் செய்ய நுகர்பொருள் வாணிப கழகம் நடவடிக்கை எடுத்திருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

    எங்கெங்கு விற்பனை செய்யப்படும்?

    பொதுமக்கள் நெரிசலின்றி வாங்குவதற்காக தமிழகம் முழுவதும் நுகர்பொருள் வாணிப கழகம் மற்றும் கூட்டுறவுத் துறையின் கீழ் இயங்கும் மொத்தம் 260 அங்காடிகள் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றன.

    Advertisement

    தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தால் நடத்தப்படும் 49 அமுதம் துறைசார் அங்காடிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் நடத்தப்படும் 211 பல்பொருள் மற்றும் மினி சூப்பர் மார்க்கெட்டுகளில் அரிசி விற்பனை செய்யப்பட உள்ளது.

    English Summary

    Fine Rice: 'OneIndia Tamil' was the first to report on the ground reality, highlighting how the price of rice has severely impacted the public. Despite this, government ministers attempted to downplay the situation, claiming that prices had not risen. In this context, the government has now taken steps to sell fine-quality rice through cooperative stores at a price of Rs. 30 per kilogram.