அமைச்சர் வன்னி அரசு சகோதரிக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 3 பேருக்கு போலீஸ் வலைவீச்சு!

  • விருதுநகர்: சாத்தூர் அருகே அமைச்சர் வன்னி அரசுவின் சகோதரிக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக பட்டாசு ஆலை உரிமையாளரான அமைச்சர் வன்னி அரசுவின் சகோதரி ஜெயசக்தி உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    Advertisement

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஒத்தையால் கிராமத்தில், அமைச்சர் வன்னி அரசுவின் சகோதரிக்கு சொந்தமானதாக கூறப்படும் சின்னத்தம்பி பைரோடெக் ஃபயர் வொர்க்ஸ் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். வெடிமருந்து கலவை தயாரிக்கும் பணியில் ஈடுபட்ட மீனம்பட்டியை சேர்ந்த மாடசாமி என்பவர் பலியானார்.

    Advertisement

    இந்த வெடி விபத்து குறித்து சாத்தூர் தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக பட்டாசு ஆலை மேலாளர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழக சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசுவின் சகோதரி ஜெயசக்தி, அவரது மகள் செல்வகுமாரி, மருமகன் முரளீஸ்வரன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த வெடி விபத்துக்கான காரணம், பாதுகாப்பு நடைமுறைகள் உள்ளிட்டவை குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தலைமறைவான 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இதற்கிடையே உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்தினருக்கு தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் ரூ.4 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார்.

    English Summary

    One person died in an explosion at a firecracker factory owned by Minister Vanni Arasu's sister near Sattur. The police have registered a case against the factory owner—Minister Vanni Arasu's sister, and others in connection with the incident.