சென்னை மற்றும் தமிழகத்தில் இன்று முதல் வடகிழக்கு பருவமழையின் முதல் கட்ட மழை.. வெதர்மேன் தகவல்

  • சென்னை: சென்னை மற்றும் தமிழகத்தில் இன்று முதல் வடகிழக்கு பருவமழையின் முதல் கட்ட மழை தொடங்குகிறது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தமிழகம் மற்றும் சென்னைக்குச் சிறப்பாக அமையவுள்ளது. எல்லா மழையும் வெள்ளத்தை ஏற்படுத்திவிடாது; நமக்கு இந்த மழை அவசியம். எனவே, வடகிழக்கு பருவமழையை மகிழ்ச்சியுடன் வரவேற்போம் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்ஜான் கூறியுள்ளார்.

    Advertisement

    தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழை பொய்த்து போய்விட்டது. போதிய மழை பொழிவு எங்குமே இல்லை. இதனால் வெயிலின் தாக்கம் உக்கிரமாக இருக்கிறது. கோடை வெயில் என்பது ஜூன் மாதத்துடன் முடிந்துவிடும். ஆனால் அக்டோபர் மாதம் வரையிலும் இருக்கிறது. இரவில் புழுக்கம் இருக்கிறது. தென்மேற்கு பருவ மழை மிக குறைவாக பெய்த காரணத்தால் விவசாயம் பொய்த்து போயிருக்கிறது. டெல்டா மாவட்டங்களில் தண்ணீர் இல்லாத காரணத்தால் விவசாயமே செய்ய முடியாத நிலை இருக்கிறது. அதேபோல் தேனி மாவட்டத்தில் போதிய மழை இல்லாத காரணத்தால் வைகை வறண்டு வருகிறது. இதனால் ஐந்து மாவட்ட மக்கள் கடுமையான குடிநீர் பஞ்சத்தை எதிர்கொள்ளும் அபாயத்தில் இருக்கிறார்கள்.

    Advertisement

    வற்றாத தாமிரபரணியே இந்த முறை ஏமாற்றத்தில் இருக்கிறது. எட்டி எட்டி பார்த்து ஏமாற்றி சென்றுவிட்டது தென்மேற்கு பருவ மழை. வழக்கமாக கன்னியாகுமரி, நீலகிரி, கோவை மாவட்டங்கள் தென்மேற்கு பருவ மழையால் செழிப்பாக இருக்கும். இந்த முறை நீலகிரியே ஏமாற்றத்தை தான் சந்தித்தது. இப்போது தான் அண்மைகாலமாக மழை பெய்கிறது. கடந்த ஆண்டைவிட குறைவான மழையே பெய்திருக்கிறது. இப்படி தென்மேற்கு பருவ மழை ஏமாற்றத்துடன் விடைபெற்ற நிலையில், சென்னை மற்றும் தமிழகத்தில் இன்று முதல் வடகிழக்கு பருவமழையின் முதல் கட்ட மழை தொடங்குகிறது

    இதுபற்றி தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்ஜான் வெளியிட்டுள்ள பதிவில் கூறுகையில், "சென்னை மற்றும் தமிழகத்தில் இன்று முதல் வடகிழக்கு பருவமழையின் முதல் கட்ட மழை தொடங்குகிறது

    Advertisement
    62 லட்சம் குழந்தைகள் ஒரு பைலட் பிராஜக்ட் அல்ல.. கேக் திட்டத்திற்கு எதிர்ப்பு.. அரசுக்கு கோரிக்கை

    அடுத்த 2 வாரங்களில் எதை எதிர்பார்க்கலாம்?

    * அவ்வப்போது திடீர் மழைப்பொழிவு மற்றும் அதைத் தொடர்ந்து இடைவெளிகள் இருக்கும்.
    * மீண்டும் ஒரு திடீர் மழைப்பொழிவு ஏற்படலாம்; இதில் சில சமயங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
    * நாள் முழுவதும் தொடர்ந்து மழை பெய்யாது. மழைப்பொழிவுக்கு இடையே வெயில் அல்லது மேகமூட்டமான சூழல் நிலவும்.
    * மழையின் நேரம், கால அளவு மற்றும் தீவிரம் ஆகியவை இடத்திற்கு இடம் மாறுபடும்.
    * விட்டு விட்டு பெய்யும் மழை என்பதன் பொருள், ஒவ்வொரு இடத்திலும் தினமும் அல்லது ஒரே நேரத்தில் மழை பெய்யும் என்று அர்த்தமல்ல.

    Advertisement

    சென்னை உட்பட தமிழகம் முழுவதும் அடுத்த இரண்டு வாரங்களுக்கு இந்த 'விட்டு விட்டு பெய்யும்' மழை முறை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஒரு சிறிய ஆனால் முக்கியமான நினைவூட்டல்: இன்று முதல் வெளியே செல்லும்போது குடை அல்லது மழைக்கோட்டை (raincoat) உடன் எடுத்துச் செல்லுங்கள்!

    சேலத்தில் 6 சென்ட் நிலம்.. பட்டா பெயர் மாற்றம் செய்ய விஏஓ போட்ட கண்டிசன்.. கைதில் முடிந்த ட்விஸ்ட்

    அடுத்த திடீர் மழை எப்போது உங்களை எதிர்பாராத விதமாக நனைய வைக்கும் என்று சொல்ல முடியாது.

    இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தமிழகம் மற்றும் சென்னைக்குச் சிறப்பாக அமையவுள்ளது. எல்லா மழையும் வெள்ளத்தை ஏற்படுத்திவிடாது; நமக்கு இந்த மழை அவசியம். எனவே, வடகிழக்கு பருவமழையை மகிழ்ச்சியுடன் வரவேற்போம்" இவ்வாறு கூறியுள்ளார்.

    English Summary

    The first phase of the Northeast Monsoon begins today in Chennai and across Tamil Nadu. This year's Northeast Monsoon is expected to be highly beneficial for the region. Not every rainfall leads to flooding; these rains are essential for us. Therefore, let us welcome the Northeast Monsoon with joy, says Tamil Nadu Weatherman Pradeep John.