முரசு புயலில் மாயமான 9 காசிமேடு மீனவர்கள்! ஆந்திராவில் சடலங்களாக மீட்பு! குடும்பத்தினர் கண்ணீர்

  • சென்னை: முரசு புயலின் போது காணாமல் போன சென்னை காசிமேடு மீனவர்களின் உடல் ஆந்திராவில் கரை ஒதுங்கியுள்ளது. 9 மீனவர்கள் மாயமான நிலையில் 4 பேரின் உடல்கள் கரை ஒதுங்கியுள்ளது. ஆந்திராவின் கோட்டக்குப்பம் பகுதியில் மீனவர்களின் உடல் கரை ஒதுங்கிய நிலையில், தகவல் அறிந்த மீனவர்கள் கதறி அழும் காட்சிகள் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    சென்னை காசிமேடு பகுதியை சேர்ந்த மீனவர்கள் 9 பேர் கடந்த 29 ஆம் தேதி கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர். விசைப்படகில் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள், நிஜாம்பட்டினம் துறைமுகம் அருகே மீன்பிடித்து கொண்டு இருந்த போது மீனவர்களை தொடர்பு கொள்ள முடிந்துள்ளது.

    Advertisement

    கதறி அழுத குடும்பத்தினர்

    ஜிபிஎஸ் மூலமாகவும் வயர்லஸ் மூலமாகவும் மீனவர்கள் தொடர்பு கொண்டுள்ளனர். அதன்பிறகு விசைப்படகின் ஓட்டுநரான சூர்யா என்பவர், தனது படகின் உரிமையாளருக்கு காற்று பலமாக வீசுகிறது.. தண்ணீர் விசைப்படகில் ஏறுகிறது என்று பேசியிருக்கிறார். அதன்பிறகு விசைப்படகில் சென்ற மீனவர்களை பற்றி எந்த தகவலும் இல்லை. இதனால், மீனவர்களின் குடும்பத்தினர் பரிதவித்து போயினர்.

    இதையடுத்து காசிமேடு துறைமுகம் பகுதியில் உள்ள அதிகாரிகளிடம் மீனவர்கள் புகார் அளித்துள்ளனர். காவல்துறையிடமும் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, கடலோர காவல்படையை வைத்து தீவிரமாக மீனவர்களை தேடும் பணி நடைபெற்று வந்தது. மீனவர்களின் நிலை என்னவென்று தெரியாத நிலை ஏற்பட்டதால் காசிமேடு அருகே மீனவர்களின் குடுமப்த்தினர் சாலை மறியல் போராட்டத்திலும் இன்று ஈடுபட்டனர்.

    Advertisement
    அநியாயம் செய்யும் இலங்கை கடற்படை! காரைக்கால் மீனவர்களின் தவறு.. தண்டனை எங்களுக்கா? என்ன நடந்தது?

    இந்த நிலையில், மீனவர்களின் உடல்கள் ஆந்திராவில் உள்ள கோட்டக்குப்பம் கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ளது மீனவர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முரசு புயலின்போது படகு கவிழ்ந்ததில் மாயமான தமிழக மீனவர்கள் 9 பேரில் 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு இருப்பதாக ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்ட ஆட்சியர் ராஜா பாபு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-

    4 மீனவர்கள் உடல்கள் கரை ஒதுங்கின

    தமிழ்நாட்டை சேர்ந்த மீனவர்கள் கடந்த 29 ஆம் தேதி சென்னையில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். முரசு புயல் நெருங்கி வந்ததால், படகுகளை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து 4 படகுகள் ஆந்திர கடலோரப் பகுதியில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டன. இதில் 3 படகுகள் ராமயப்பட்டினம் துறைமுகத்திலும், ஒரு படகு நிஜாம்பட்டினம் துறைமுகத்திலும் நிறுத்தப்பட்டிருந்தன.

    Advertisement
    தமிழக மீனவர்கள் 7 பேர் கைது.. விசைப்படகும் பறிமுதல்! இலங்கை கடற்படை அட்டூழியம்

    தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகள் பாதுகாப்பாக இருப்பதாக 2 ஆம் தேதி மீனவர்களும், தமிழக அதிகாரிகளும் உறுதிப்படுத்தியிருந்தனர். எனினும், நவம்பர் 3 ஆம் தேதி நிஜாம்பட்டினம் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த படகில் இருந்த 9 மீனவர்கள் தங்கள் படகை எடுத்துக்கொண்டு கிளம்பியுள்ள்னர். ஆந்திரா மற்றும் தமிழக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காமல் மீனவர்கள் 9 பேரும் ராமயப்பட்டினம் நோக்கி சென்று இருக்கிறார்கள். அப்போது முரசு புயலில் சிக்கிய படகு கடலில் கவிழ்ந்தது.

    Advertisement

    உடல்களை ஒப்படைக்க நடவடிக்கை

    இதையடுத்து 9 மீனவர்களும் மாயமாகினர். இது குறித்து தகவல் காவல்படையினருக்கு தெரிவிக்கப்பட்டு மீட்புப் பணிகள் தொடங்கப்பட்டன. மாயமான மீனவர்களில் 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 5 மீனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மீட்கப்பட்ட மீனவர்களின் உடல்கள் உரிய நடைமுறைகள் முடிந்ததும் தமிழக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும். கவிழ்ந்த படகையும் கரைக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இது குறித்து தமிழக அதிகாரிகளிடம் பேசியுள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.

    வங்கக்கடலில் உருவான முரசு புயல் கடந்த கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை ஆந்திராவின் நெல்லூருக்கும் நரசாபூருக்கும் இடையே, ஓங்கோல் அருகே தெற்கு ஆந்திராவில் கரையக் கடந்தது. அப்போது பலத்த சூறைக்க்காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது. முரசு புயலில் சிக்கிய மீனவர்கள் சடலமாக கரை ஒதுங்கியுள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    English Summary

    Fishermen: The bodies of fishermen from Kasimedu, Chennai—who went missing during Cyclone 'Murasu'—have washed ashore in Andhra Pradesh. While nine fishermen had gone missing, the bodies of four of them have now been recovered. The sight of fellow fishermen weeping in anguish upon learning that the bodies had washed up in the Kottakuppam area of ​​Andhra Pradesh has been deeply distressing.