தமிழக அரசே! மீனவர்களின் பூர்வீக நிலத்தை பறிக்காதே! பட்டினப்பாக்கத்தில் மீனவர்கள் போராட்டம்

  • சென்னை: சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து முள்ளிக்குப்பம் , சீனிவாசபுரம், முள்ளிமாநகர் மீனவர் பஞ்சாயத்து சபை சார்பில் மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள்.

    Advertisement

    சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் எதிரே உள்ள விளையாட்டுத் திடலில் கருப்பு கொடி பறக்கவிட்டு ஷாமியானா பந்தலில் அமர்ந்து போராட்டத்தை மீனவ மக்கள் தொடங்கியுள்ளனர். இந்த போராட்டத்திற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    Advertisement

    போராட்ட திடலில் தமிழக அரசை கண்டித்து ஒரு பேனர் வைக்கப்பட்டுள்ளது. அதில் "தமிழக அரசே சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் அரசாணை 564 ஐ உடனடியாகத் திரும்ப பெற வேண்டும்.

    முள்ளிக்குப்பம், முள்ளிமாநகர் மீனவர்களுக்கு சொந்தமான பூர்வீக நிலத்தை பட்டாவுடன் மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தை மீனவர்கள் தொடங்கியுள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக அருகில் உள்ள மீனவ கிராமங்களை சேர்ந்தவர்களும் வந்துள்ளனர்.

    பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகத்தை கொண்டு வந்தால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கும். மேலும் மீனவ வலைகளை காய வைக்கவும், பழுது நீக்கவும், படகுகளை நிற்க வைக்கவும் இடமில்லாமல் தவிப்போம். எங்களது வாழ்வாதாரமான லூப் சாலையில் மீன் வியாபாரம் செய்ய முடியாத நிலை ஏற்படும் என்பதை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.

    Advertisement

    சென்னை பட்டினப்பாக்கத்தில் ரூ 1200 கோடியில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும் என முதல்வர் விஜய் அறிவித்து அரசாணை வெளியிட்டிருந்தார். அந்த அரசாணை எண் 564 - ஐ ரத்து செய்யக் கோரி மீனவர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

    பட்டினப்பாக்கத்தில் தங்களை அப்புறப்படுத்தி விட்டு தலைமைச் செயலகம் கட்டப்பட்டால் தங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும் என மீனவர்கள் எதிர்க்கிறார்கள். மீனவர்களுக்கு ஆதரவாக அரசியல் கட்சிகளும், ஏன் தவெக கூட்டணி கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

    பரந்தூர் விவசாயிகளுக்கு ஒரு நியாயம் பட்டினப்பாக்கம் மீனவர்களுக்கு ஒரு நியாயமா என கேட்டு கண்டனங்கள் குவிகின்றன. இதனால் பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் என்ற அரசாணையை ரத்து செய்யும் முடிவில் முதல்வர் விஜய் இருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கிடைத்துள்ளன.

    Advertisement

    எனினும் இதுவரை இது குறித்து அறிவிப்பு ஏதும் வரவில்லை. பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் அரசாணை எண் 564-ஐ ரத்து செய்யக் கோரி செப்டம்பர் 29ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அனைத்து மீனவ கிராம பஞ்சாயத்து சபை தெரிவித்திருந்தது.

    அந்த வகையில் இன்றைய தினம் முள்ளிக்குப்பம், முள்ளிமா நகர், மயிலை பகுதி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த அனைத்து மீனவ கிராம பஞ்சாயத்து சபை ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். ஆர்ப்பாட்டத்தில் "முதலமைச்சருக்கு 5 நாள் அவகாசம் தரோம். அதுக்குள்ள தலைமைச் செயலகம் அரசாணையை ரத்து செய்யணும். இல்லனா தமிழ்நாடு ஸ்தம்பிக்கும்" என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    English Summary

    சென்னை: சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கான அரசாணையை நீக்கக் கோரி அனைத்து மீனவ கிராமப் பஞ்சாயத்து சபை இன்று ஆர்ப்பாட்டம் நடத்துவதாக தெரிவித்துள்ளது.சென்னை பட்டினப்பாக்கத்தில் ரூ 1200 கோடியில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும் என முதல்வர் விஜய் அறிவித்து அரசாணை வெளியிட்டிருந்தார். அந்த அரசாணை எண் 564 - ஐ ரத்து செய்யக் கோரி மீனவர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.பட்டினப்பாக்கத்தில் தங்களை அப்புறப்படுத்தி விட்டு தலைமைச் செயலகம் கட்டப்பட்டால் தங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும் என மீனவர்கள் எதிர்க்கிறார்கள். மீனவர்களுக்கு ஆதரவாக அரசியல் கட்சிகளும், ஏன் தவெக கூட்டணி கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.பரந்தூர் விவசாயிகளுக்கு ஒரு நியாயம் பட்டினப்பாக்கம் மீனவர்களுக்கு ஒரு நியாயமா என கேட்டு கண்டனங்கள் குவிகின்றன. இதனால் பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் என்ற அரசாணையை ரத்து செய்யும் முடிவில் முதல்வர் விஜய் இருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கிடைத்துள்ளன.எனினும் இதுவரை இது குறித்து அறிவிப்பு ஏதும் வரவில்லை. பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் அரசாணை எண் 564-ஐ ரத்து செய்யக் கோரி செப்டம்பர் 29ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அனைத்து மீனவ கிராம பஞ்சாயத்து சபை தெரிவித்திருந்தது.அந்த வகையில் இன்றைய தினம் முள்ளிக்குப்பம், முள்ளிமா நகர், மயிலை பகுதி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த அனைத்து மீனவ கிராம பஞ்சாயத்து சபை ஆர்ப்பாட்டம் நடத்த போகிறது.