திமுக செய்த அதே தவறு.. தவெக கதை அவ்ளோதான்.. அன்புமணி கடும் விமர்சனம்

  • சென்னை: சட்டமன்ற தேர்தல் முடிவு தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கூட்டணியிலும் பல்வேறு மாற்றம் நிகழ்ந்துள்ளது. திமுக, அதிமுக கட்சிகள் தவெகவை கடுமையாக விமர்சித்து வருகின்றன. பாமக தவெக கூட்டணி அமைய போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் டாஸ்மாக் மது விற்பனை, தனியார்மயமாக்கல் போன்ற பல்வேறு விவகாரங்களில் திமுகவை தவெக பின்தொடர்வதாக அன்புமணி ராமதாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.

    Advertisement

    சென்னை விமான நிலையத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறுகையில், "தமிழக அரசு வேறு திசையில் பயணிக்கிறது. அரசு வேலையை தனியார்மயப்படுத்துதல், தற்காலிக பணியாளர்களை நியமித்தல் என்கிற அடிப்படையில் தான் இயங்குகிறது. போக்குவரத்துத்துறையில் பேருந்துகளை இயக்க அரசு நிதி கொடுக்குமா அல்லத தனியார் நிறுவனங்களே இயக்குவார்களா. திமுக கொண்டு வந்த நடைமுறையை ஏன் தவெக பின்பற்றுகிறது.

    Advertisement

    எல்லாம் தனியார்மயம்

    மின்சாரத்துறையில் தற்காலிக பணியாளர்கள், தூய்மை பணியாளர் பணி தனியார்மயம் என எல்லாமே தனியார்மயத்தை நோக்கி செல்கிறது. மாண்டேக்சிங் அலுவாலியா தலைமையில் ஒரு ஐவர் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. தமிழகத்திற்கு எந்த துறையில் வரி வருவாய் மற்றும் வரி இல்லாத வருவாய் ஈட்டுவது என்பதை அந்த குழு அரசுக்கு பரிந்துரை செய்யும். தமிழகத்தில் உள்ள அரசு நிலத்தை விற்பது அல்லது வாடகை விதிப்பது மூலம் வருவாய் ஈட்டலாம்.

    மின்கட்டணத்தை, பேருந்து கட்டணத்தை எப்படி உயர்த்தலாம், மக்களிடம் எப்படி வருவாயை பிழிந்தெடுப்பது என்பதை அந்த குழு செய்யும். மாண்டேக் சிங் அலுவாலியா உலக வங்கியில் பணியாற்றியவர். திட்டக்குழு துணை தலைவராக இருந்தார். அவர் தனியார்மயமாக்க நிபுணர். அவரின் வேலையே எல்லாவற்றையும் தனியார்மயமாக்குவது தான். தனியாரிடம் எல்லா வேலையும் கொடுத்து வருவாயை கண்காணிப்பது தான் அரசின் வேலையா.

    Advertisement

    திமுகவை ஏன் அகற்றினார்கள் தெரியுமா

    எல்லா வேலையும் தனியாரிடம் கொடுத்தால் சமூக நீதி எப்படி பின்பற்றுவார்கள். இடஒதுக்கீடு எப்படி பின்பற்ற முடியும். தவெக தேர்தல் அறிக்கையில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் நிரப்புவோம் என கூறியுள்ளனர். தமிழக அரசுத்துறைகளில் 6.5 லட்சம் காலி பணியிடங்கள் உள்ளன. டாஸ்மாக் வருமானத்தை எப்படி அதிகப்படுத்துவது என்பதற்காகவும் மாண்டேக் சிங் அலுவாலியாவை அழைத்துள்ளனர்.

    ஒருபக்கம் படிப்படியாக மதுவிலக்கை கொண்டு வருவோம் என்கிறீர்கள். மறுபக்கம் மது மூலம் கூடுதல் வருவாய் ஈட்டுவது எப்படி என்பதற்காக குழு அமைப்பீர்கள். உங்கள் நிலைப்பாடு தான் என்ன. மதுவிற்பதற்கு ஆப் கொண்டு வருவதாகவும் சொல்கிறார்கள். திமுக ஆட்சியில் மது, போதை பழக்கம் அதிகரித்து பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நிலை ஏற்பட்டது. அதற்காக தான் மக்கள் தவெகவை ஆட்சியில் அமர்த்தினர்.

    Advertisement

    மக்கள் கண்காணிப்பு

    தவெகவும் மதுவை எப்படி விற்கலாம், மதுவை தனியார்மயமாக்கலாம், செயலி மூலம் மதுவிற்பனையை அதிகரிக்கலாம் என்கிறார்கள். பெண்கள் பாதுகாப்புக்காக சிங்கப்பெண் படை அமைத்து, மறுபக்கம் மது குடிக்க ஊக்குவிக்கிறார்கள். மக்கள் எல்லாவற்றையும் பார்க்கிறார்கள். திமுகவின் நிலைப்பாடை தெரிந்து கொள்வதற்காக தான் அனைத்து கட்சி எம்பிக்கள் கூட்டம் நடக்கிறது. மத்திய அரசு அறிவிப்பதற்கு முன்பு இந்த கூட்டம் எதற்கு" என கேள்வி எழுப்பினார்.

    English Summary

    Anbumani Ramadoss strongly criticized TVK for following the same privatization and liquor policies that led to public opposition against the DMK.