ஒரு வார்த்தைக்கு எங்களுக்கு இவ்வளவு அடியா.. திமுக மீது குமுறும் அமைச்சர் மரிய வில்சன்

  • சென்னை: தவெக ஆட்சிக்கு வந்து 5 மாதங்களாகிறது. மின் கொள்முதல், விலைவாசி உயர்வு, அதிமுக எம்எல்ஏக்களிடம் பேரம் உள்ளிட்ட ஏராளமான சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்கள். குதிரை பேரத்தை மறுத்து வந்தனர். ஆனால் அமைச்சர்களே குதிரை பேரத்தை ஊக்குவிப்பதை வெளிப்படையாக பேசுவது சர்ச்சையாகியுள்ளது. இந்நிலையில் தவெக மீதான விமர்சனத்துக்கு அமைச்ர் மரிய வில்சன் ஆதங்கத்துடன் பதில் கூறியுள்ளார்.

    Advertisement

    சென்னையில் அமைச்சர் மரிய வில்சன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "இப்படி நடக்குமா, அப்படி நடந்திருக்குமா என்கிற யூகத்திற்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது. எதிர்க்கட்சிகள் விரக்தியில் உள்ளனர். திமுக உச்சகட்ட பொறாமையில் உள்ளது. அந்த குணம் யாராக இருந்தாலும் அழித்துவிடும். அது எனக்கு, உங்களுக்கு எல்லாருக்கும் பொருந்தும். மக்கள் வாய்ப்பு கொடுத்து புதிய அரசு வந்துள்ளதே என்கிற எண்ணம் அவர்களிடம் இல்லை.

    Advertisement

    தவறான பிம்பம்

    கரப்ஷனுக்கு எதிரான நிலை எடுத்ததற்கு எங்கள் மீது தாக்குதல் நடத்துவதா. ஊழலற்ற அரசை நடத்த வந்துள்ளோம் என்று முதலமைச்சர் சொன்ன ஒரே ஒரு வார்த்தைக்கு இந்த 150 நாட்களில் எங்கள் மீது இவ்வளவு பெரிய அவதூறை சுமத்துவதா. சோபா, குதிரை பேரம் என்றெல்லாம் சொல்கிறார்கள். இதை மக்கள் கவனித்து கொண்டிருக்கிறார்கள். நாங்கள் அதற்கு வரவில்லை. முதலமைச்சர் தெளிவாக உள்ளார். வெளிப்படையாக அரசை நிர்வாகம் செய்ய அமைச்சர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

    அதை நோக்கி தான் பயணிக்கிறோம். எதிர்க்கட்சிகள் எதையாவது சொல்லி கொண்டு தான் இருப்பார்கள். அவர்களால் வேறு என்ன செய்ய முடியும். முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் மீது ஊழல் வழக்கு நடந்து வருகிறது. அவர்கள் மீதுள்ள லக்கேஜ்களை பார்க்க சொல்லுங்க. இன்னும் நிறைய வரப்போகிறது. இன்றைக்கு என்ன செய்தாலும் ட்ரோல் தான் செய்வார்கள். தாராபுரத்தில் எங்கள் வேட்பாளருக்கு எதிராக ஒரு தவறான பிம்பத்தை கட்டமைக்க பார்த்தனர். முடிவில் என்ன ஆனது.

    Advertisement

    மக்கள் வரவேற்பு

    அப்படி எங்கள் ஆட்சி மீது போலியான பிம்பத்தை கட்டமைக்க பார்க்கிறார்கள். அதிமுக உள்ளிட்ட பிரச்சனையை எடுக்கிறார்கள். இதை வேலையாக வைத்துள்ளனர். அரசியலுக்கு புதிதாக யார் வந்தாலும் வரவேற்கிறோம். இங்கு முதலமைச்சர் தான் எல்லாம். எல்லாருக்கும் எல்லாம் என்பது எங்கள் நிலைப்பாடு. இந்த வரவேற்பு எல்லாருக்கும் இருக்காது. அவரை மக்கள் ஏற்று கொண்டனர். சில விமர்சனங்கள் வைத்தாலும், பெரும்பாலான துறையினர் வரவேற்கிறார்கள்.

    யாரிடமும் ஒற்றை பைசா வாங்குவதில்லை. இதை அவர்களால் பொருத்து கொள்ள முடியவில்லை. உண்மை இப்படி இருக்கும்போது யார் அரசியலில் வந்து போட்டியிட்டாலும் கவலையில்லை. தலைவர் மீதும், மக்கள் மீதும் நம்பிக்கை அதிகரித்துள்ளது. அதை காப்பாற்றுவோம். விலைவாசியை கட்டுப்படுத்த கமிட்டி அமைத்து ஆய்வு செய்கிறோம். மக்களுக்கு எந்த கஷ்டமும் வராமல் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

    English Summary

    Minister Marie Wilson said, Our CM told corruption free government. for that DMK attacking us very badly.