துண்டு போட்டு தூக்கிய விஜய்.. தவெகவில் இணைந்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை!

  • சென்னை: தாராபுரத்தில் இன்று நடைபெறும் இடைத்தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை முதலமைச்சரும், தவெக தலைவருமான விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்துள்ளார். ஏற்கெனவே செம்மலை அதிமுக-வை விட்டு விலகுவதாக அறிவித்திருந்தார்.

    Advertisement

    அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக ஏற்கனவே அறிவித்திருந்த அதிமுக முன்னாள் அமைச்சரும், அக்கட்சியின் அமைப்புச் செயலாளராக செயல்பட்டவருமான செம்மலை இன்று தவெக அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபனை சந்தித்தார். தாராபுரத்தில் முதலமைச்சர் விஜய் பங்கேற்றுள்ள கூட்டத்திற்கு செம்மலை வருகை புரிந்தார்.

    Advertisement

    அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை

    சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் அதிமுக இருப்பது நல்லதல்ல எனக்கூறி, சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி தலைமையில் ஒரு அணி திரண்டது. அதிமுகவின் ஒரு பிரிவு எம்எல்ஏக்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவளித்தனர்.

    இது அதிமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், தவெக-வுக்கு ஆதரவளித்த அனைத்து எம்எல்ஏக்களின் பதவியையும் பறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். பின்னர், நீக்கப்பட்ட நிர்வாகிகளை மீண்டும் கட்சியில் சேர்த்து பதவி வழங்கினார் எடப்பாடி பழனிசாமி.

    தவெகவில் இணைந்தார்

    அதிமுகவில் உட்கட்சி பூசல் நிலவிய பரபரப்பான சூழலில், முன்னாள் அமைச்சர் செம்மலை அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இந்நிலையில் செம்மலை தமிழக வெற்றி கழகத்தில் இன்று இணைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தாராபுரத்தில் இன்று நடைபெறும் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் விஜய் முன்னிலையில் தவெகவில் அவர் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    Advertisement

    இதற்காக செம்மலை இன்று தவெக அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபனை சந்தித்துள்ளார். மேலும் தாராபுரத்தில் முதலமைச்சர் விஜய் பங்கேற்கவுள்ள கூட்டத்திற்கு செம்மலை வருகை புரிந்தார். தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரம் நடைபெறும் திடலுக்கு வருகை புரிந்த விஜய்யை செம்மலையும் வரவேற்றார். செம்மலைக்கு தவெக துண்டு அணிவித்து கட்சிக்கு வரவேற்றார் முதல்வர் விஜய்.

    யார் இந்த செம்மலை?

    கடந்த 2001 ஆம் ஆண்டு ஓமலூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட செம்மலை, சுகாதாரத்துறை மற்றும் கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்தார்.

    கடந்த 2009 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் சேலம் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி ஆக வெற்றி பெற்றார் செம்மலை. கடந்த 2016 ஆம் ஆண்டு தமிழக சட்டசபையில் தற்காலிக சபாநாயகர் ஆகும் இவர் பணியாற்றியுள்ளார்.

    Advertisement

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு இவருக்கு போதிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலிலும் இவருக்கு சீட் வழங்கப்படவில்லை. இதையடுத்து அதிருப்தியில் இருந்து வந்த செம்மலை, மே மாதம் அதிமுகவில் ஏற்பட்ட பூசல்களை தொடர்ந்து, கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

    English Summary

    Reports indicate that former AIADMK Minister Semmalai is set to join TVK today at a by-election campaign meeting in Dharapuram, in the presence of TVK leader and CM Vijay. Semmalai had previously announced his decision to leave the AIADMK.