எடப்பாடிக்கு கடிதம் எழுதிய அடுத்த 1 மணி நேரத்தில் தவெகவில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ முருகுமாறன்!

  • சென்னை: அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்த காட்டுமன்னார்கோவில் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ முருகுமாறன், அடுத்த ஒரு மணி நேரத்தில் அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் தவெகவில் இணைந்தார்.

    Advertisement

    2026 சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி சிக்கல்களுக்கு மத்தியில், அக்கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகி ஆளுங்கட்சியான தவெகவில் இணைந்து வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது முன்னாள் எம்.எல்.ஏ முருகுமாறனும் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்துள்ளார்.

    Advertisement

    அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ முருகுமாறன்

    அதிமுக முன்னாள் எம்எல்ஏ முருகுமாறன் அதிமுகவிலிருந்து விலகுவதாக ஒரு மணிநேரத்திற்கு முன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதிய நிலையில், அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்த காட்டுமன்னார்கோவில் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. முருகுமாறன், அமைச்சர் ஆனந்த் முன்னிலையில் தவெகவில் இணைந்தார்.

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயிலைச் சேர்ந்தவர் முருகுமாறன். இளநிலை விவசாயப் பட்டமும், இளநிலை சட்டப் பட்டமும் பெற்றுள்ளார். அதிமுகவின் அமைப்புச் செயலாளராகப் பொறுப்பு வகித்துவந்த முருகுமாறன், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திட்டக்குடி தொகுதியின் அதிமுக வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

    Advertisement

    2 முறை எம்.எல்.ஏ

    முன்னதாக முருகுமாறன் 2011 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் காட்டுமன்னார்கோயில் சட்டசபை தொகுதியில் இருந்து அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் போட்டியிட அவர் விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், காட்டுமன்னார்கோவில் தொகுதிக்கு பதிலாக திட்டக்குடி (தனி) தொகுதியில் அதிமுக சார்பில் வேட்பாளராக களமிறக்கப்பட்டார்.

    தேர்தல் முடிவில் முருகுமாறன் 42,502 வாக்குகளுடன் மூன்றாமிடம் பிடித்தார். திமுக வேட்பாளர் சி.வி. கணேசன் 63,106 வாக்குகளுடன் வெற்றி பெற்றார். தவெக வேட்பாளர் ராஜசேகர் 60,477 வாக்குகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.

    Advertisement

    தலைமை மீது அதிருப்தி

    கடந்த சட்டமன்றத் தேர்தலில், தனது சொந்த தொகுதியான காட்டுமன்னார்கோயில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாமல் துரோகம் செய்ததால் அதிருப்தியில் இருந்ததாகவும், அதனால் அதிமுகவில் இருந்து விலகுவதாகவும் முன்னாள் எம்.எல்.ஏ. முருகுமாறன் இன்று அறிவித்திருந்தார்.

    அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து நிலை பொறுப்புகளில் இருந்தும் மிகுந்த மனவலியோடு என்னை முழுமையாக விடுவித்துக் கொள்கின்றேன் எனக் குறிப்பிட்டு கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு விலகல் கடிதம் அனுப்பினார்.

    1 மணி நேரத்தில் தவெகவில் இணைந்தார்

    அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்த அடுத்த 1 மணி நேரத்தில் தவெகவில் இணைந்துள்ளார் முன்னாள் எம்.எல்.ஏ முருகுமாறன். அதிமுகவில் இருந்து விலகிய கையோடு முருகுமாறன், தாராபுரத்தில் தவெக பொதுச்செயலாளரும், அமைச்சருமான என். ஆனந்த் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்துள்ளார்.

    English Summary

    Murugumaran, the former MLA of the Kattumannarkoil constituency who announced his resignation from the AIADMK, joined the TVK within an hour in the presence of Minister Bussy Anand.