“தம்மாத்துண்டு ஸ்டிக்கர் மேல வைக்கிற நம்பிக்கைக்கு பதிலா ஒரு நல்ல திட்டத்தைக் கொடுங்க விஜய்” - திமுக

  • சென்னை: "தம்மாத்துண்டு பிளேடு மேல வச்சிருக்க நம்பிக்கையை உன்னுடைய திறமை மேல வைன்னு கில்லி படத்துல விஜய் சொன்னார்ல.. அதுமாதிரி, ஸ்டிக்கர் மேல வைக்கிற நம்பிக்கைக்குப் பதிலா ஒரு நல்ல திடமான ஒரு திட்டத்தைக் கொடுக்கச் சொல்லுங்க முதலமைச்சர் விஜய்யை." என திமுக முன்னாள் எம்.எல்.ஏ பரந்தாமன் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    சென்னையை அடுத்த நெம்மேலி கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டப் பணிகளைத் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று பார்வையிடவுள்ள நிலையில், அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயர் இடம்பெற்றிருந்த கல்வெட்டு அகற்றப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. கல்வெட்டு அகற்றப்பட்டதற்குத் திமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    Advertisement

    இந்நிலையில், திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன், திமுக சட்டத்துறை இணை செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான பரந்தாமன் ஆகியோர் இன்று கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

    அப்போது பேசிய பரந்தாமன், "விஜய் நடித்த கில்லி படத்துல கபடி விளையாட்டுல, 'தம்மாத்துண்டு பிளேடு மேல வச்சிருக்க நம்பிக்கையை உன்னுடைய திறமை மேல வை'ன்னு சொன்னார்ல.. அதுமாதிரி, ஸ்டிக்கர் மேல வைக்கிற நம்பிக்கைக்குப் பதிலா ஒரு நல்ல திடமான ஒரு திட்டத்தைக் கொடுக்கச் சொல்லுங்க முதலமைச்சர் விஜய்யை. ஸ்டிக்கர் ஒட்டுற வேலை வேண்டாம், கல்வெட்டுல நீக்குற வேலை வேண்டாம். அப்படி நீக்கணும்னா எங்களோட தலைவர்கள் சொன்னது மாதிரி, தமிழ்நாடே ஸ்தம்பிக்கிற அளவுக்குப் போராட்டம் நடக்கும்.

    Advertisement

    இன்னைக்கு, நீங்க தொடர்ந்து குற்றச்சாட்டு வைக்கப்பட்ட எம்.எல்.ஏ சரவணன் வந்து 'என் கூட 50 கோடி ரூபாய்க்கு பேரம் பேசினாங்க' அப்படின்றதுக்கு ஆதாரம்னு ஆடியோ ரிலீஸ் பண்ணியிருக்காரு. சம்பந்தப்பட்ட முத்தரசனுடைய அண்ணன், தம்பி அப்படின்னு எல்லாம் சொல்றாங்க. அந்த முத்தரசன் யாருன்னு ஒரு டிஸ்க்ளோஸ் பண்ணச் சொல்லுங்க. இந்த ஆடியோவை என்னைக்குப் பேசினாங்கன்றதை பொதுவெளியில சொல்லச் சொல்லுங்க. புகாரில் அவர் எந்த தேதியில் யார் பேசினாங்கன்றதை சொல்லவே இல்லை.

    அவர் மேல விரல் நீட்டி, கை நீட்டி பாதிக்கப்பட்ட பெண்ணே அந்த கட்சியைச் சேர்ந்த பெண்மணியே வந்து குற்றம் சுமத்தியிருக்காங்க. அதைப்பத்தி வாய் திறந்து பேசாத சரவணன், இன்னைக்கு மட்டும் வந்து 'எனக்கு 50 கோடி ரூபாய் பேரம் பேசினாங்க' அப்படின்றது திசை திருப்புற வேலை. இது வந்து அவர்களுடைய ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமி எழுதித் குடுக்கிற ஸ்கிரீன் பிளேயை இந்த எம்.எல்.ஏ-க்கள் இன்னைக்கு வந்து நடிச்சுக்கிட்டு இருக்காங்க, அவ்வளவுதான்.

    Advertisement

    ஒரு ஒருத்தருக்கு எதிராகப் போராட்டம் பண்ண முடியாது சார். நாங்க ஒட்டுமொத்தமாக பாலியல் குற்றங்கள் நிகழ்வதைக் கண்டித்து, திமுகவினுடைய மாணவரணி சார்பாக நாங்க வெளிப்படுத்தித் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடந்துட்டு இருக்கு, கைது செஞ்சிருக்கீங்க. ஒரு அரசாங்கத்திற்கு அதனுடைய கவனத்திற்குக் கொண்டு வருவதற்குச் சில போராட்டங்கள்... அதை நாங்க செஞ்சிருக்கிறோம்.

    'நான் கண்ணைத் திறந்தே பார்க்க மாட்டேன்' அப்படின்னு இருக்கக்கூடிய முதலமைச்சரை ஒரு ஆறு மாசத்துக்கு வேடிக்கை பார்க்கிறோம். அதுக்கப்புறம் தெருவுக்குத் தெரு போராட்டம் நாங்க இல்ல, பொதுமக்களே வந்து செய்யக்கூடிய சூழ்நிலைதான் இன்னைக்கு உருவாகியிருக்கு." எனத் தெரிவித்துள்ளார்.

    English Summary

    "Just as Vijay said in the movie Ghilli 'Place the faith you have in that tiny blade in your own talent'—ask Chief Minister Vijay to present a solid, concrete plan instead of relying on stickers," stated former DMK MLA Paranthamen.