சென்னை: தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் விரைவில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் தவெக சார்பில் சகாயம் போட்டியிடலாம் என்பதோடு, மாநிலங்களவை உறுப்பினருக்கான ரேஸ் பட்டியலிலும் அவரது பெயர் இருப்பதாகக் கூறப்படுகிறது.
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் முதல் முறையாக களமிறங்கிய நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம், 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தமிழகத்தின் முக்கிய அரசியல் சக்தியாக மாறியுள்ளது. முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பிறகு, அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து தொடர் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்த விஜய், பெரம்பூர் தொகுதி உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்தார். இதையடுத்து திருச்சி கிழக்கு தொகுதி காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விரைவில் அந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில், மயிலம் தொகுதியில் வெற்றி பெற்றதால் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை சி.வி. சண்முகம் ராஜினாமா செய்துள்ளார். இதன் மூலம் காலியாகும் மாநிலங்களவை இடத்துக்கும் விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. காரணம், இதன்மூலம் முதல்முறையாக மாநிலங்களவையில் தவெக பிரதிநிதித்துவம் பெற உள்ளது. இந்த சூழலில், திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் தவெக சார்பில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயத்தை நிறுத்துவது குறித்து ஆலோசனை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேர்மையான அதிகாரி என்ற பெயரை பெற்றிருந்த சகாயம், கடந்த சில ஆண்டுகளாக சமூக மற்றும் அரசியல் கருத்துக்களால் பேசி வந்தார். அதன்பிறகு அவர் தவெகவில் இணையலாம் என்ற தகவல்கள் தொடர்ந்து பரவி வருகின்றன. அதேநேரத்தில், அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த மூத்த அரசியல்வாதி கு.ப. கிருஷ்ணனின் பெயரும் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காக பரிசீலிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்ததுடன், அமைச்சராகவும் பணியாற்றிய அனுபவம் அவருக்கு உள்ளது. இதனால், மாநிலங்களவை இடத்துக்கு அனுபவமிக்க அரசியல்வாதியா? அல்லது புதிய முகமாக சகாயமா? என்ற விவாதம் தற்போது தவெக வட்டாரங்களில் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கிடையில், திமுக கூட்டணியில் இருந்து விலகி தவெகவுக்கு ஆதரவு அளித்துள்ள காங்கிரஸும் மாநிலங்களவை இடம் கேட்கலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், மாநிலங்களவையில் தவெகவின் முதல் பிரதிநிதியாக கட்சிக்கே சொந்தமான ஒருவரை அனுப்ப வேண்டும் என்ற மனநிலையில் முதல்வர் விஜய் இருப்பதாக கூறப்படுகிறது. அதனால், சகாயம் உண்மையிலேயே தவெகவில் இணையப் போகிறாரா? அவருக்கு திருச்சி கிழக்கு இடைத்தேர்தலிலா வாய்ப்பு? அல்லது மாநிலங்களவை பதவியா? என்பது குறித்து விரைவில் முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் விரைவில் வெளியாகலாம் என்கின்றனர் தமிழக வெற்றிக் கழகத்தினர்.திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்
தமிழகத்தில் அதிக இடங்களை வென்று, காங்கிரஸ், இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ள தவெக சார்பில் மாநிலங்களவைக்கு யார் அனுப்பப்படப் போகிறார்கள் என்பது தற்போது அரசியல் வட்டாரங்களில் பெரிய கேள்வியாக மாறியுள்ளது.மாநிலங்களவை எம்பி
குறிப்பாக விஜய் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்பு விழாவில் சகாயம் பங்கேற்றது பரபரப்பைக் கிளப்பியது.சகாயம் ஐஏஎஸ்
இதற்கிடையில், மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான பட்டியலிலும் சகாயத்தின் பெயர் பரிசீலனையில் இருப்பதாக கூறப்படுகிறது. நிர்வாக அனுபவம், தூய்மையான இமேஜ் மற்றும் தேசிய அளவில் பேசக்கூடிய திறன் ஆகிய காரணங்களால் அவரை டெல்லியில் தவெகவின் குரலாக பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் விஜய்க்கு இருப்பதாக தவெக வட்டாரங்கள் கூறுகின்றன.கு.ப. கிருஷ்ணன்
காங்கிரஸ்
விரைவில் அறிவிப்பு