எலும்பை உடைப்பேன் என மார்க்கண்டேயன் பேசியது குற்றமாகவே வராது! நீதிபதிக்கு அழுத்தம்.. ரகுபதி ஆவேசம்

  • நெல்லை: எலும்பை உடைப்பேன் என்று சொல்வது பேச்சுவாக்கில் சொல்வது.. அதற்கும் இதற்கும் சம்மந்தமே இல்லை. ஏதாவது ஆயுதம் வைத்து இருந்தாரா? நேருக்கு நேர் சொன்னாரா? ஒன்னுமே கிடையாது. அவர் எங்கேயோ இருக்கிறார். எந்த விதமான ஆயுதங்கள் அவர் கையில் கிடையாது என முன்னாள் திமுக அமைச்சர் ரகுபதி விளாத்திகுளம் எம்.எல்.ஏ கைது செய்யப்பட்டது குறித்து பேசினார். மேலும், சட்டமன்ற கதவுகளை சாத்துவேன்னு முதல்வர் சொன்னது மட்டும் சரியா? என்று ரகுபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

    Advertisement

    விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன், கோவில்பட்டியில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் பேசும்போது முதல்வர் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதையடுத்து, மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டார். அவரை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து நெல்லை பாளையங்கோட்டை சிறையில் மார்க்கண்டேயன் அடைக்கப்பட்டுள்ளார்.

    Advertisement

    ரகுபதி பேட்டி

    அவரை திமுக முன்னாள் அமைச்சர்கள் சந்தித்து வருகிறார்கள். இந்த நிலையில், இன்று நெல்லையில் முன்னாள் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தவெக ஆட்சியில் பேச்சுரிமை முழுக்க முழுக்க பறிக்கப்பட்டுவிட்டது. அவர்களை விமர்சனம் செய்து ஏதாவது பேசினால், அடுத்த நிமிடம் எந்த வழக்கில் மாட்டுவான், வழக்கு போடுவோம் என்றுதான் இந்த அரசு செயல்பட்டு கொண்டு இருக்கிறது. உங்களை நேருக்கு நேர் நின்று வெட்டிருவேன் என்று சொன்னால் மிரட்ல்.

    ஆனால், நான் சட்டமன்றத்தின் கதவை மூடி உன்னுடைய உரிமையை பறிப்பேன் என்று முதல்வர் சொல்லும் போது.. சட்டமன்ற உறுப்பினர்களை சிறைவைப்பதற்காக நாங்கள் போயிருக்கிறோம். அங்கே.. சட்டமன்றத்தில் எங்களை ஜெயிலில் வைத்து அடைப்பது போல அடைக்க போறீங்களா..

    Advertisement

    நேருக்கு நேர் சொன்னாரா?

    எலும்பை உடைப்பேன் என்று சொல்வது சரியா என்று கேட்கிறீர்கள்.. பேச்சுவாக்கில் சொல்வது சார்.. அதற்கும் இதற்கும் சம்மந்தமே இல்லை. ஏதாவது ஆயுதம் வைத்து இருந்தாரா? நேருக்கு நேர் சொன்னாரா? ஒன்னுமே கிடையாது. அவர் ஒரு கூட்டத்தில் சொல்கிறார். ஒரு முதல்வர் சட்டமன்றத்தின் கதவை சாத்துவேன் என்று சொல்வது நியாயம். அது உரிமை மீறல் கிடையாது. அதை எல்லாம் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.

    ஆனால் நான் எலும்பை உடைப்பேன் என்று சொல்வது மட்டும் உங்களுக்கு குற்றமாக போகிறதே.. யாராக இருந்தாலும் சட்டமன்றத்தின் கதவை பூட்டுவதற்கு யாருக்குங்க உரிமை இருக்கு.. சட்டமன்றத்தை பூட்ட முடியுமா? இது (மார்க்கண்டேயன் பேசியது) குற்றமாகவே வராது. பேச்சுவாக்கில் சொல்வது.. இது எங்கேயோ பேசுகிறார். அவர் எங்கேயோ இருக்கிறார். நேருக்கு நேர் பேசக்கூடிய சம்பவம் இல்லை.

    Advertisement

    நீதிபதிக்கே அழுத்தம் கொடுக்கிறாங்க

    எந்த விதமான ஆயுதங்கள் அவர் கையில் கிடையாது. மேடையில் பேசும் போது, சாத்தினால் என்றுதானே சொல்கிறார். சாத்தினால்தானா சொல்கிறோம். எங்களுக்கு நிறைய நீதிபதிகள் அறிவுரை பண்ணுகிறார்கள். ஒரு முதலவர் சட்டமன்றத்தை சாத்துவேன் என்பதை சரி என்று நீதிபதி ஏற்றுக்கொள்கிறார். ஆனால், அதே நீதிபதி சட்டமன்றத்தில் எம்.எல்.ஏ எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று பாடம் படித்து கொண்டு இருக்கிறார்கள். நிர்மல் குமார் மூலம் கொடுக்கப்படும் அழுத்தங்கள் ஒரு காலத்தில் நிச்சயம் வெளியே வரும். வெளியே கொண்டு வருவோம். நீதிபதிக்கு அழுத்தம் கொடுக்கிறார்கள்" என்றார்.

    Advertisement

    மார்க்கண்டேயன் பேசியது என்ன?

    மானங்கெட்ட தமிழ்நாட்டினுடைய முதல் அமைச்சர்.. உன்னைய சட்டமன்றத்திற்குள் வைத்து பார்த்துகுறோம்.. நாங்க என்ன கோமாளி பயல்கள்னு நினைக்கிறீங்களா.. சட்டமன்றத்தை பூட்டுவாராம்.. பூட்டினால் எலும்பு இருக்காது உடைத்துவிட்டுதான் உன்னை அனுப்பி விடுவோம். இவ்வளவு ஒரு கேவலமான ஒரு முதல்வரை தமிழ்நாடு மட்டுமின்றி இந்திய வரலாறே பெற்றது இல்லை. என மார்க்கண்டேயன் பேசியிருந்தார்.

    English Summary

    Raghupathy: "Saying 'I will break your bones' is just a figure of speech—it has absolutely no connection to the actual incident. Did he possess any weapon? Did he say it face-to-face? None of that happened. He was elsewhere, and he was not carrying any kind of weapon," said former DMK Minister Raghupathy regarding the arrest of the Vilathikulam MLA.