“இதற்காகத்தான் ஆதவ் அர்ஜுனாவையும் லண்டன் கூட்டிச் செல்கிறீர்களா?” முதல்வர் விஜய்க்கு அப்பாவு கேள்வி!

  • சென்னை: ஆந்திரா பாணியில் ஆட்சி கவிழ்ந்துவிடுமோ என்ற பயத்தில் பொதுப்பணித்துறை ஆதவ் அர்ஜுனாவையும், லண்டன் பயணத்திற்கு அழைத்துச் செல்கிறீர்களா சி.எம் சார்? என தமிழக முதலமைச்சர் விஜய்க்கு, முன்னாள் சபாநாயகர் அப்பாவு கேள்வி எழுப்பியுள்ளார்.

    Advertisement

    தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் லண்டன் பயணம் மேற்கொள்கிறார். தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

    Advertisement

    முன்னாள் சபாநாயகர் அப்பாவு வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "தவெக ஆட்சி அமைந்த 100 நாட்களுக்குள் மக்களின் கோபம், இளைஞர்களின் அதிருப்தி, பெண்களின் சாபம், விவசாயிகளின் கண்ணீர், அரசு ஊழியர்களின் ஆவேசம் ஆகியவற்றால் செல்வாக்கு சரிந்து வருவதை உணர்ந்து இடைத்தேர்தலில் பழைய பருப்பு வேகாது என்பதற்காக உங்களால் "கல்லாப்பெட்டி கூட்டணி " என்று வர்ணிக்கப்பட்ட கட்சிகளை அழைத்து "மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி " என்று பெயர் மாற்றம் செய்ததாலேயே மக்களின் செல்வாக்கை பெற்றுவிடலாம் என்று கனவு காணாதீர்கள் சி.எம் சார்?

    நேற்று தங்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் முடிந்த பின்பு கூட்டத்தின் நோக்கம் குறித்தோ,
    பிரதமர் வேட்பாளர் குறித்தோ, இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்தோ பத்திரிகையாளர்களைச் சந்தித்து பேச துணிவில்லாமல், கூட்டணி கட்சித் தலைவர்கள் தங்கள் விருப்பப்படி கருத்து சொல்லிக் கொள்ளுங்கள் என்று அவர்களை அவமதித்திருப்பது, உங்கள் "நரித்தனத்தின் வெளிப்பாடு" என்பது நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும் சி.எம் சார்?

    Advertisement

    இந்தியாவில் அரசியல் அமைப்புச் சட்டம், பத்திரிகை சுதந்திரம், கருத்து சுதந்திரம், மக்களின் உரிமைகளுக்கு எதிராக அன்னை இந்திரா அவர்களால் கொண்டுவரப்பட்ட நெருக்கடி நிலையை அன்றைய முதல்வர் கலைஞர் அவர்கள் எதிர்த்து குரல் கொடுத்ததால் முன்னாள் முதல்வர் முக ஸ்டாலின் கைது செய்யப்பட்டு சிறையில் சித்திரவதை அனுபவித்த தியாக வரலாற்றை சட்டமன்றத்தில் கேலி செய்து கூத்தடிக்கும் பண்பில்லா, அறிவில்லா, நாகரிகமில்லா, கூத்தாடிக்கு முதல்வர் பதவி ஒரு கேடா ?

    ஒருமுறை ஆந்திர முன்னாள் முதல்வர் மறைந்த என்.டி.இராமராவ் வெளிநாடு பயணம் சென்று திரும்புவதற்குள் சந்திரபாபு நாயுடு ஆட்சியை கவிழ்த்து முதல்வரானது போல் ஆதவ் அர்ஜுனா முதல்வராகிவிடக் கூடாது என்ற பயத்தில் உங்களோடு லண்டன் அழைத்துச் செல்கிறீர்களா சி.எம்.சார்?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

    English Summary

    Former Speaker Appavu has questioned Tamil Nadu Chief Minister Vijay, asking if he is taking Aadhav Arjuna along on the London trip out of fear that the government might collapse, similar to the situation in Andhra.