புஸ்ஸாகி போன பொது வேட்பாளர் அஸ்திரம்.. தனித் தனியாக களமிறங்கும் கட்சிகள்! தவெகவுக்கு பலமா? பலவீனமா?

  • சென்னை: தமிழகம் அடுத்த ஒரு தேர்தலுக்கு தயாராகி வருகிறது. தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில் முதல் கட்சியாக வேட்பாளர்களை அறிவித்து இருக்கிறது திமுக. அதிமுகவும் விருப்ப மனு பெற்று வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகமும் நாம் தமிழர் போட்டியிடுவதும் உறுதியாகியிருக்கிறது. இடைத்தேர்தலில் பொது வேட்பாளர் என பேசி வந்த நிலையில் அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதால், இந்த தேர்தலிலும் நான்கு முனைப்போட்டி உருவாகியுள்ளது.

    Advertisement

    2026 தமிழக சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்று இருக்கிறார். ஆனால் அந்த வெற்றி அவ்வளவு சீக்கிரம் வாய்த்து விடவில்லை. 108 தொகுதிகளில் மட்டுமே தமிழக வெற்றிக்கழகம் வென்றது.

    Advertisement

    இந்த நிலையில் பல கட்ட பேச்சுவார்த்தைகள், இழுபறிகளுக்குப் பிறகு திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் ஆதரவளித்த பிறகு விஜய் முதல்வராக பொறுப்பேற்று இருக்கிறார்.

    திமுக - அதிமுக

    இது ஒரு புறம் இருக்க, ஆளுங்கட்ச்சியாக இருந்த திமுக எதிர்க்கட்சியாகவும், எதிர்க்கட்சியாக இருந்த அதிமுக மூன்றாவது கட்சியாகவும் மாறி உள்ளது. வழக்கம் போல் நாம் தமிழர் கட்சி கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றதும் விஜய் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு கோரிய நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் சிலர் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

    Advertisement

    முதல்வர் விஜய்

    அதுமட்டுமல்லாமல் அதற்கு பிறகு பெருந்துறை ஜெயக்குமார், மதுராந்தகம் மரகதம் குமரவேல், தாராபுரம் சத்தியபாமா, அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா, கரூர் விஜயபாஸ்கர், விராலிமலை விஜயபாஸ்கர் ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து விட்டு தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர். ஏற்கனவே திருச்சி கிழக்கு சட்டசபை எம்எல்ஏ பதவியை முதல்வர் விஜய் ராஜினாமா செய்ததால்7 தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டது.

    இடைத் தேர்தல்

    தற்போது ஐந்து தொகுதிகளுக்கான தேர்தல் வழக்குகள் நிறுவையில் இருக்கும் நிலையில் தாராபுரம், மதுராந்தகம் ஆகிய இரு தனித் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. இன்று வேட்பு மனு தாக்கல் தொடங்கி இருக்கும் நிலையில் அக்டோபர் 6ஆம் தேதி வாக்குப்பதிவும், 9ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. இந்த இரண்டு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுபவர்கள் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என நேற்று அதிமுக அறிவித்தது.

    Advertisement

    ஆனால் விருப்ப மனு தாக்கல் செய்யாமலேயே மதுராந்தகத்திற்கு பரந்தாமணையும், தாராபுரத்துக்கு சுகன்யாவையும் வேட்பாளர்களாக திமுக அறிவித்துள்ளது. மேலும் அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ள சத்தியபாமா, மரகதம் குமரவேல் ஆகியோர் மீண்டும் தேர்தலில் போட்டியிடலாம் என சொல்லப்படுகிறது. இதற்கிடையே நாம் தமிழர் கட்சியும் வேட்பாளர்களை அறிவிக்கலாம் என தகவல்கள் உலாவுகின்றன.

    பொது வேட்பாளர்

    இது ஒருபுறம் இருக்க தற்போது ஒரு முக்கிய தகவல் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. 2026 தமிழக சட்டசபை தேர்தலில் எதிர்க்கட்சிகள் தோல்வியை சந்தித்து நிலையில் பொது வேட்பாளர் என்ற பேச்சு முன்வைக்கப்பட்டது. குறிப்பாக அம்பாசமுத்திரம் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் பொது வேட்பாளராக நிறுத்தப்படலாம் என சொல்லப்பட்டது. ஆனால் திடீரென தேர்தல் ஆணையம் இரண்டு தொகுதிகளுக்கான தேர்தல் தேதியை அறிவித்திருக்கும் நிலையில் எதிர்க்கட்சிகள் என்ன செய்யப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுவதற்கு உள்ளாகவே வேட்பாளர்கள் பட்டியல் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது.

    Advertisement

    நான்குமுனை போட்டி

    இதனால் 2026 சட்டசபை தேர்தலை போலவே நான்குமுனை போட்டி உருவாகி இருக்கிறது. இதன் மூலம் பொது வேட்பாளர் என்ற பேச்சு அடங்கியுள்ளது. இது தமிழக வெற்றி கழகத்திற்கு சாதகமாக அமையும் என ஒரு தரப்பும், அதிமுக திமுகவிற்கே சாதகமாக அமையும் என மற்றொரு தரப்பும் பேசி வருகிறது, இதில் யோசிக்க வேண்டிய நிலையில் இருப்பது நாம் தமிழர் கட்சி மட்டும் தான்..

    English Summary

    DMK, AIADMK, TVK and NTK are set for a four-way contest in Madurantakam and Dharapuram bypolls after the common candidate plan fades.