மகளின் கிளாஸ்மேட் 15 வயசு பையன் மீது காதல்! பேச்சை கேட்டு ஓட்டுப்போட்டு.. பிரான்ஸில் என்ன நடக்குது

  • சென்னை: மேக்ரானின் தனிப்பட்ட வாழ்க்கை ஒருபுறம் இருக்கட்டும். அவர் அரசியலில் வளர்ந்து அதிபரானது எப்படி என்பதுதான் முக்கியமான விஷயம். பேச்சில் மயங்கி, வாக்குறுதிகளை நம்பி மக்கள் வாக்களித்துவிட்டு, பிறகு விலைவாசி உயர்வு, வாழ்க்கைச் செலவு, பொருளாதாரப் பிரச்சனைகள் என நெருக்கடிகள் வரும்போது போராட்டத்தில் இறங்குவதால் மட்டும் என்ன பயன்? என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி கேள்வி எழுப்பியிருக்கிறார்.

    Advertisement

    அறம்நாடு சேனலுக்கு உமாபதி தந்துள்ள பேட்டியில், "பிரான்ஸ் என்பது வரலாற்று சிறப்புமிக்க ஒரு நாடு. பிரான்ஸ் நேற்றோ, இன்றோ உருவான நாடு கிடையாது. பல நூற்றாண்டுகளாக அரசியல், கலை, இலக்கியம் எனப் பல துறைகளில் உலக அளவில் தனக்கென ஒரு முக்கியமான இடத்தைப் பிடித்த நாடு.

    Advertisement

    இந்தியாவில் ஒரு காலத்தில் மன்னராட்சி நடைபெற்றதை போலவே, பிரான்ஸிலும் மன்னராட்சி இருந்தது. ஆனால், அங்கே பல நூற்றாண்டுகளுக்கு முன்பே அரசியல் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. பிரெஞ்சு புரட்சிக்கு பிறகு அந்நாட்டின் அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டன. மன்னராட்சியிலிருந்து மக்கள் ஆட்சியை நோக்கி நாடு நகர்ந்தது.

    உலக அரங்கில் பிரான்ஸ்

    பிரான்ஸ் என்பது கலை, இலக்கியம், நாடகம் என பல துறைகளிலும் உலகத்துக்கு பெரிய பங்களிப்பைச் செய்த நாடு. மாவீரர் நெப்போலியன் போன்ற சர்வதேச அளவில் புகழ்பெற்ற தலைவர்களும் அந்த நாட்டிலிருந்துதான் உருவானார்கள். பிரிட்டனுக்கு இணையாகவும், சில காலகட்டங்களில் அதற்குப் போட்டியாகவும் வலிமையுடன் இருந்த நாடு பிரான்ஸ். அப்படிப்பட்ட ஒரு நாட்டில் மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுத்த அரசியல் தலைவர்களின் செயல்பாடுகளால் இப்போது பிரச்சனைகள் ஏற்பட்டிருப்பது வேதனையான விஷயம்.

    Advertisement

    மேக்ரானின் காதல் கதை

    பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானின் தனிப்பட்ட வாழ்க்கையை எடுத்துக்கொண்டால், அவருடைய மனைவி பிரிஜிட் பற்றிய கதை வித்தியாசமானது. பிரிஜிட், மேக்ரானைவிட சுமார் 24 வயது மூத்தவர். மேக்ரான் 15 வயது சிறுவனாக பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது, பிரிஜிட் அவருக்கு நாடகம் கற்பித்த ஆசிரியையாக இருந்தார். அப்போது பிரிஜிட்டுக்கு 40 வயதை கடந்திருந்தது.

    ஒரு மாணவனுக்கும் ஆசிரியைக்கும் இடையே உருவான ஈர்ப்பு, பின்னாளில் காதலாக வளர்ந்து, இறுதியில் திருமணத்தில் முடிந்திருக்கிறது. பள்ளியில் படிக்கும்போது ஒரு மாணவனுக்கு ஆசிரியர் மீது ஈர்ப்பு ஏற்படுவது வேறு. ஆனால், 15 வயது மாணவனுக்கும் 40 வயதை கடந்த ஆசிரியைக்கும் இடையிலான உறவு என்பது வேறு விஷயம்.

    Advertisement

    மேக்ரான் புத்திசாலி

    மேக்ரான் சாதாரண மாணவர் கிடையாது. மிகவும் புத்திசாலியான மாணவராக இருந்திருக்கிறார். மற்ற மாணவர்களிடமிருந்து வித்தியாசமாக தெரிந்திருக்கிறார். அதனால் ஆசிரியையான பிரிஜிட் அவர் மீது ஈர்ப்பு கொண்டுள்ளார். இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், பிரிஜிட்டின் மகளும் மேக்ரானுடன் ஒரே வகுப்பில் படித்திருக்கிறார்.

    மேக்ரான் சிறுவனாக இருந்தபோதே இந்த உறவு தொடங்கியிருந்தாலும், அவர் வயது வந்த பிறகும் இருவருடைய தொடர்பு நீடித்திருக்கிறது. பள்ளிப் படிப்பை முடித்துப் பல்கலைக்கழகத்துக்கு சென்ற பிறகும் காதல் தொடர்ந்திருக்கிறது. பின்னர் மேக்ரானுக்கு 21 வயது ஆனபோது 2 பேரும் திருமணம் செய்துகொண்டார்கள்.

    அரசியலில் பாதிப்பு

    மேக்ரான் அரசியலில் வளர்ந்து பிரான்ஸ் அதிபராக உயர்ந்த பிறகும் பிரிஜிட் அவருடன் இருக்கிறார். மேக்ரானுக்கு வயது அதிகரிக்க அதிகரிக்க பிரிஜிட்டுக்கும் வயது அதிகரிக்கிறது. இருவருக்கும் இடையிலான வயது வித்தியாசம் மட்டும் மாறுவதில்லை.

    Advertisement

    இந்த காதல் கதையை சிலர் காதலின் எடுத்துக்காட்டாக பார்க்கலாம். ஆனால், பிரான்ஸ் போன்ற வரலாற்றுப் பெருமை கொண்ட நாட்டில் இதுபோன்ற உறவு பேசுபொருளாக இருப்பதை வைத்தே அந்த நாட்டின் கலாச்சாரம் எந்தத் திசையில் செல்கிறது என்று கேள்வி எழுப்பலாம். இதுதான் காதலா, கேடுகெட்ட காதல் காவியமா என்ற விமர்சனமும் எழுகிறது.

    மேக்ரானின் தனிப்பட்ட வாழ்க்கை

    மேக்ரானின் தனிப்பட்ட வாழ்க்கை மட்டுமல்லாமல், அவரைச் சுற்றியுள்ள அரசியல் நிகழ்வுகளையும் சேர்த்துப் பார்க்க வேண்டும் என்ற கேள்வியும் எழுகிறது.

    அவருக்கு நெருக்கமான உதவியாளராக இருந்த கேப்ரியல் அட்டல், பின்னர் அரசில் முக்கியப் பொறுப்புகளைப் பெற்று, பிரதமர் பதவிவரை உயர்ந்தார். ஒரு உதவியாளர் எப்படி அடுத்தடுத்து உயர்ந்த பதவிகளுக்குச் செல்கிறார் என்பதைப் பற்றியும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. இதுபோன்ற நியமனங்களைப் பார்க்கும்போது, அரசியலில் ஒருவருடைய தகுதி, அனுபவம், தொடர்புகள் ஆகியவற்றில் எது முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதை மக்கள் கேட்க வேண்டியிருக்கிறது.

    Advertisement

    அரசியலில் என்ன நடக்கிறது?

    மேக்ரானின் தனிப்பட்ட வாழ்க்கை ஒருபுறம் இருக்கட்டும். அவர் அரசியலில் வளர்ந்து அதிபரானது எப்படி என்பதுதான் முக்கியமான விஷயம். பேச்சில் மயங்கி, வாக்குறுதிகளை நம்பி மக்கள் வாக்களித்துவிட்டு, பிறகு விலைவாசி உயர்வு, வாழ்க்கைச் செலவு, பொருளாதாரப் பிரச்சினைகள் என நெருக்கடிகள் வரும்போது போராட்டத்தில் இறங்குவதால் மட்டும் என்ன பயன்?

    தேர்தல் நேரத்தில் தலைவர்களின் பேச்சு மக்களை ஈர்க்கலாம். குடும்பத்தில் இருக்கும் இளையவர்கள் சொல்கிறார்கள் என்பதற்காகவோ, ஒருவர் நன்றாகப் பேசுகிறார் என்பதற்காகவோ வாக்களித்துவிடக் கூடாது. "என் பேத்தி சொன்னாள், பேரன் சொன்னான்" என்று முடிவெடுப்பதற்கு முன்பாக, அந்த வேட்பாளர் என்ன சொல்கிறார், இதுவரை என்ன செய்திருக்கிறார்,

    அவர் ஆட்சிக்கு வந்தால் நம்முடைய வாழ்க்கையில் என்ன மாற்றம் வரும் என்பதையும் யோசிக்க வேண்டும். வாக்களித்துவிட்டு பின்னர் வருத்தப்படுவதைவிட, வாக்களிக்கும் முன்பே நிதானமாகச் சிந்திப்பதுதான் முக்கியம்.

    பிரான்ஸில் போராட்டங்கள்

    பிரான்ஸில் நடைபெறும் போராட்டங்களுக்கு விலைவாசி உயர்வு, பொருளாதார நெருக்கடி, அரசியல் அதிருப்தி உள்ளிட்ட பல காரணங்கள் இருக்கலாம். அன்றாட வாழ்க்கை செலவுகள் அதிகரிக்கும்போது, எரிபொருள் விலை உயரும்போது, குடும்பங்களை நடத்தவே சிரமம் ஏற்படும்போது மக்களின் கோபம் போராட்டமாக வெடிக்கலாம்.

    ஆனால், அந்த நிலை வரும் வரை காத்திருக்காமல், தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் போதே அவர்களுடைய அரசியல் செயல்பாடுகளையும் கொள்கைகளையும் மக்கள் கவனிக்க வேண்டும்.

    பிரான்ஸ் மட்டுமல்ல, ஐரோப்பாவின் பல நாடுகளிலும் மக்கள் அதிருப்தி, விலைவாசி உயர்வு, அரசியல் முடிவுகள் குறித்த விவாதங்கள் தொடர்ந்து எழுகின்றன. ஒரு நாட்டின் வரலாற்று பெருமை மட்டும் அந்த நாட்டின் இன்றைய பிரச்சினைகளை தீர்த்துவிடாது. மக்களின் வாழ்க்கை எந்த நிலையில் இருக்கிறது என்பதுதான் ஆட்சியின் செயல்பாட்டை மதிப்பிடுவதற்கான முக்கியமான அளவுகோல்.

    வாக்களித்த பிறகு வருத்தப்படுவதற்கு பதிலாக, வாக்களிக்கும் முன்பே யாரை தேர்ந்தெடுக்கிறோம், அவர்களால் நாட்டுக்கு என்ன நடக்கும் என்பதை யோசிக்க வேண்டும் என்பதுதான் இங்கே முக்கியமான விஷயம்...!!

    English Summary

    France Macron Love Story: Fell for Daughter’s Classmate at 15? What’s Happening Now?