மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயணம்.. சட்டசபையில் வெளியாகும் அறிவிப்பு? விஜய் முக்கிய மீட்டிங்

  • சென்னை: தேர்தல் வாக்குறுதியாக பெண்களுக்கு அனைத்து பேருந்துகளிலும் இலவச பயணத் திட்டத்தை அமல்படுத்துவோம் என விஜய் அறிவித்து இருந்தார். இந்த நிலையில், தவெக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள நிலையில், பெண்களுக்கு அனைத்து பேருந்துகளிலும் இலவச பயணத் திட்டம் எப்போது நடைமுறைக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு மகளிர் மத்தியில் அதிகரித்துள்ள சூழலில் இது குறித்து சென்னை தலைமை செயலகத்தில் விஜய் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.

    Advertisement

    தவெக தனது தேர்தல் வாக்குறுதியில் பெண்களுக்கு அனைத்து பேருந்துகளில் இலவச பயணம் திட்டம் அமல்படுத்துவோம் என்று அறிவித்தது. தற்போது வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், தவெகவின் இந்த வாக்குறுதி எப்போது நிறைவேற்றப்படும் என்ற எதிர்பார்ப்பு மகளிர் இடையே ஏற்பட்டுள்ளது.

    Advertisement

    பெண்கள் இலவச பயணம் திட்டம்

    ஏற்கனவே, நடைமுறையில் உள்ள மகளிர் விடியல் பயண திட்டம் அமலில் உள்ளது. தவெக தேர்தல் வாக்குறுதியை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தி வரும் நிலையில், சட்டமன்ற கூட்டத்தொடரில் இதற்கான அறிவிப்பு வெளியாகுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. போக்குவரத்துத் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் முதல்வர் விஜய் தலைமையில் இன்று நடைபெற்றது. சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த இந்த கூட்டத்தில், போக்குவரத்துத் துறை சார்ந்த செயல்பாடுகள் மற்றும் செயல்படுத்தப்படவுள்ள திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    போக்குவரத்துத் துறையின் கீழ் இயங்கும் 8 அரசு போக்குவரத்துக் கழகங்களின் வாயிலாக 21,527 பேருந்துகள் இயக்கப்பட்டு வருவது குறித்தும், அதன்மூலம் நாளொன்றுக்கு 2.05 கோடி பயணிகள் பயணம் செய்கின்றனர் என்றும், அதில் 64 விழுக்காடு பயணிகளுக்கு கட்டணமின்றி சேவை வழங்கப்படுகிறது என்றும், தமிழ்நாட்டில் 1,000 நபர்களுக்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட கிராமங்களில் 98.40 விழுக்காடு என்கின்ற அளவில் அரசு பேருந்து சேவையானது வழங்கப்பட்டு வருகிறது என்றும் முதல்வர் விஜய்யிடம் தெரிவிக்கப்பட்டது.

    Advertisement

    ஐந்தாண்டு செயல்திட்டங்கள் குறித்து ஆலோசனை

    மேலும், இத்துறையின் கீழ் இயங்கும் 8 போக்குவரத்துக் கழகங்கள், சாலை போக்குவரத்து நிறுவனம், தமிழ்நாடு பயணியர் மற்றும் சரக்கு போக்குவரத்துக் கழகம் மற்றும் தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்பு இயக்குநகரத்தின் செயல்பாடுகள் குறித்தும் விஜய்யிடம் விவரிக்கப்பட்டது. இக்கூட்டத்தில், போக்குவரத்துக் கழகங்களை மேம்படுத்த ஓராண்டு, மூன்றாண்டு மற்றும் ஐந்தாண்டு செயல்திட்டங்கள் குறித்து விரிவான ஆலோசனை விஜய் அவர்களால் மேற்கொள்ளப்பட்டது.

    பயணிகளின் நலனுக்காக புதிய மென்பொருள் (Software) உருவாக்கப்பட்டு பேருந்துகளின் புறப்பாடு, வருகை, பேருந்து நிறுத்தங்கள் போன்றவற்றை GPS கருவி மூலம் இணைத்து 24x7 மணி நேரமும் செயல்படும் தகவல் மற்றும் கட்டுப்பாட்டு மையங்களை முக்கிய பேருந்து நிலையங்களில் அமைத்து, அதனை 8 போக்குவரத்து கழகங்களின் தலைமையகத்தில் உள்ள கட்டுப்பாட்டு மையத்துடனும், சென்னையில் அமையப்பெறும் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்துடனும் இணைத்து கண்காணிக்கும் திட்டம் குறித்து விஜய்யிடம் எடுத்துரைக்கப்பட்டது.

    Advertisement

    ஸ்மார்ட் கார்டு முறையை அமல்படுத்த

    போக்குவரத்துத் துறையின் தொலைநோக்குத் திட்டங்களான மகளிர் மாநிலம் முழுவதும் கட்டணமில்லா பயணம் செய்வது தொடர்பான செயல் திட்டம் குறித்தும், சுற்றுச்சூழலுக்கு உகந்த மின்சாரப் பேருந்துகளை பெருமளவில் பயன்பாட்டிற்கு கொண்டு வருவது குறித்தும், போக்குவரத்து தொழிலாளர்களின் நலன் மற்றும் அவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது குறித்தும் விஜய் அவர்களால் அறிவுறுத்தப்பட்டது.

    இதேபோன்று விஜய் போக்குவரத்துக் கழகங்களால் புதிதாக கொள்முதல் செய்யப்படும் பேருந்துகள் குளிர்சாதன மின்சாரப் பேருந்துகளாக இருக்க வேண்டும் என்றும், பயணிகள் பணமில்லா பரிவர்த்தனை மூலம் பயணிக்க ஸ்மார்ட் கார்டு (Smart Card) முறையை அமுல்படுத்த வேண்டும் எனவும், பேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் விதமாக Bus Rapid Transit System திட்ட செயலாக்கம் குறித்து மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

    English Summary

    Free Bus Travel for Women: TVK had promised free travel for women in all buses during the Assembly election campaign. With the party now in power, expectations are rising over its implementation. Opposition parties are also demanding action, while attention is focused on whether an announcement will be made in the Assembly session.