முதியோர் ஓய்வூதியம் பெறுவோருக்கு குட் நியூஸ்.. இலவச வேட்டி, சேலை எப்போது கிடைக்கும்? அரசு அறிவிப்பு

  • சென்னை: தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், தமிழக அரசு சார்பில் பொதுமக்களுக்கு பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், முதியோர் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் ஒரு மகிழ்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. யாருக்கெல்லாம் இந்த இலவச வேட்டி, சேலை கிடைக்கும்? எப்போது, எங்கு சென்று வாங்க வேண்டும்? இதை பற்றி இங்கே சுருக்கமாக பார்க்கலாம்.

    Advertisement

    தமிழ்நாட்டில் ஒவ்வொரு வருடமும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முதியோர் ஓய்வூதியம் பெறும் பயனாளிகளுக்கு தமிழக அரசு சார்பில் இலவச வேட்டி, சேலை வழங்கப்பட்டு வருகிறது... இதற்காக வேட்டி, சேலைகள் கொள்முதல் செய்யப்பட்டு நியாய விலைக் கடைகள் மூலம் பயனாளிகளுக்கு வழங்கப்படுவது வழக்கம்.

    Advertisement

    இலவச வேட்டி சேலை

    அந்த வகையில், 2026ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வழங்கப்பட வேண்டிய வேட்டி, சேலைகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. இந்த வேட்டி, சேலைகள் தமிழகம் முழுவதும் உள்ள நியாய விலைக் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

    இதையடுத்து, நவம்பர் 3ம் தேதியான இன்று முதல் பயனாளிகளுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கும் பணி விறுவிறுப்பாக தொடங்கி உள்ளது.

    யாருக்கெல்லாம் கிடைக்கும்?

    இந்த திட்டத்தின் கீழ் முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்ப அட்டைதாரர்கள் இலவச வேட்டி, சேலைகளை பெற்றுக்கொள்ளலாம். இதற்காக பயனாளிகள் தங்களது குடும்ப அட்டையுடன் நேரடியாக சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடைகளுக்கு செல்ல வேண்டும்.

    Advertisement

    குறிப்பாக, நவம்பர் 7ம் தேதிக்குள் இந்த வேட்டி, சேலைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தகுதியுள்ள பயனாளிகள் கடைசி நாள் வரை காத்திருக்காமல் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நியாய விலைக் கடைகளில் சென்று பெற்றுக்கொள்ளலாம்.

    முதியோர் ஓய்வூதியம்! தமிழக அரசு போட்ட உத்தரவுக்கு எதிராக கொந்தளித்த சிபிஎம் பெ.சண்முகம்

    அதிகாரிகள் கண்காணிப்பு

    தமிழகம் முழுவதும் இந்த திட்டம் எந்தவிதமான தாமதமும் இல்லாமல் செயல்படுத்தப்பட வேண்டும் என்பதற்காக கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்..

    நியாய விலைக் கடைகளுக்கு வேட்டி, சேலைகள் அனுப்பி வைக்கப்படுவது முதல் பயனாளிகளுக்கு அவை முறையாக விநியோகம் செய்யப்படுவது வரை அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    Advertisement

    எனவே, முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்ப அட்டைதாரர்கள் நவம்பர் 3ம் தேதி முதல் நவம்பர் 7ம் தேதிக்குள் தங்களது நியாய விலைக் கடைகளுக்கு சென்று தீபாவளிக்கான இலவச வேட்டி, சேலைகளை பெற்றுக்கொள்ளலாம்.

    English Summary

    Free Dhoti Saree for Old Age Pensioners.. When Will Beneficiaries Get Them? tn Government Announces Dates