தாய் மாமன் தங்க மோதிர திட்டம்! குழந்தைகளுக்கு இலவச தங்க மோதிரம்! ரெடியாகும் லிஸ்ட்!

  • சென்னை: தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு இலவசமாக 1 கிராம் தங்க மோதிரம் வழங்கும் "தாய்மாமன் தங்க மோதிர திட்டம்" வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி முறைப்படி தொடங்கப்பட உள்ளது.

    Advertisement

    தமிழர் பண்பாட்டில் பச்சிளம் குழந்தைகளுக்கு தாய்மாமன் தங்கம் அணிவித்து சீர் செய்யும் பாரம்பரியத்தை பெருமைப்படுத்தும் வகையில் இந்த சிறப்பான திட்டத்தை தமிழக அரசு நடைமுறைப்படுத்துகிறது.

    Advertisement

    முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் சி.என். அண்ணாதுரையின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த திட்டம் அதிகாரப்பூர்வமாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது. அரசு மருத்துவமனைகளில் நிகழும் பிரசவங்களை மேலும் ஊக்கப்படுத்தவும், தாய் மற்றும் சேய் நலனை உறுதிப்படுத்தவும் ஆண்டுக்கு சுமார் ₹755.83 கோடி செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    விண்ணப்பிக்க தேவையில்லை: அதிகாரிகளே நேரடி கணக்கெடுப்பு

    இத்திட்டத்தின் கீழ் பயன்பெற பெற்றோர்கள் தனியாக எந்தவொரு அலுவலகத்திற்கும் சென்று மனு அளிக்கவோ அல்லது இணையவழியில் விண்ணப்பிக்கவோ தேவையில்லை. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், தாலுகா அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பதிவாகும் பிரசவங்களின் விவரங்களை சுகாதாரத்துறை அதிகாரிகளே நேரடியாக சேகரித்து வருகின்றனர்.

    Advertisement

    இத்திட்டம் வெளிப்படைத்தன்மையுடன் நடைபெற கர்ப்பிணிகளின் விவரங்கள் PICME முறைமை மற்றும் RCH அடையாள அட்டை மூலம் சரிபார்க்கப்படுகின்றன. இதற்காக குடும்ப அட்டை, ஆதார் அட்டை, தாய்-சேய் நல விநியோக சுருக்கம் மற்றும் தாயின் வங்கிக் கணக்கு விவரங்கள் அரசு மருத்துவமனை ஆவணங்களிலிருந்து நேரடியாக தொகுக்கப்பட்டு பயனாளிகள் பட்டியல் உறுதி செய்யப்படுகிறது.

    கோவையில் மட்டும் 11,500-க்கும் மேற்பட்ட தாய்மார்கள் பயன் பெற வாய்ப்பு

    திட்டத்தின் முன்னேற்பாடுகள் தமிழகம் முழுவதும் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், கோவை மாவட்டத்தில் விரிவான கணக்கெடுப்பு பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன. கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மட்டுமே மாதந்தோறும் சராசரியாக 500 முதல் 550 பிரசவங்கள் வரை நடைபெறுகின்றன.

    Advertisement

    மாவட்டம் முழுவதும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற சுகாதார மையங்களில் பதிவான பிரசவங்களையும் கணக்கில் கொண்டு, இதுவரை சுமார் 11,500-க்கும் மேற்பட்ட தாய்-சேய் ஜோடிகள் தகுதியான பயனாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். திட்டத் தொடக்க நாளான செப்டம்பர் 15 அன்று இக்குடும்பங்களுக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டு தங்க மோதிரம் வழங்க மருத்துவமனை நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. மேலும், மருத்துவமனைகளில் தினமும் புதிதாகப் பிறக்கும் குழந்தைகளின் விவரங்கள் தினசரி பதிவேட்டில் உடனடியாக சேர்க்கப்பட்டு பயனாளிகள் பட்டியல் உடனுக்குடன் புதுப்பிக்கப்படும்.

    அரசு சுகாதாரக் கட்டமைப்பின் மீதான நம்பிக்கையை உயர்த்தும் முயற்சி

    பச்சிளம் குழந்தைகளுக்கு வழங்கப்படும் தங்க மோதிரங்கள் 22 காரட் ஹால்மார்க் தரத்தில் பாதுகாப்பான முறையில் விநியோகிக்கப்பட உள்ளன.

    Advertisement

    அரசு மருத்துவமனைகளில் தரமான பிரசவ சேவைகள், இலவச சிகிச்சை, ஊட்டச்சத்து பெட்டகம் ஆகியவற்றோடு தற்போது தாய்மாமன் தங்க மோதிரமும் சேருவதால், ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்கள் அரசு மருத்துவமனைகளை நாடி வருவது கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரசவத்தை வெறும் மருத்துவ சிகிச்சையாக மட்டும் பார்க்காமல், ஒரு குடும்ப நிகழ்வாகக் கொண்டாடும் நோக்கில் அரசின் இம்முயற்சி மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

    English Summary

    Free Gold Ring for Newborns in Tamil Nadu Govt Hospitals: Launching Sept 15