புறம்போக்கு நிலத்தில் 5 ஆண்டுகளாக வசிக்கிறீர்களா?.. அரசு இலவச வீட்டுமனை பட்டா 2027 வரை நீடிப்பு!

  • சென்னை: சொந்தமாக ஒரு வீட்டு மனைக்கான பட்டா கிடைக்க வேண்டும் என்பது பல ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களின் நீண்டகால எதிர்பார்ப்பாக உள்ளது.. முக்கியமாக அரசு புறம்போக்கு நிலங்களில் பல ஆண்டுகளாக வசித்து வரும் மக்கள், தங்களது குடியிருப்பை முறைப்படுத்தி பட்டா வழங்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து கொண்டிருக்கிறார்கள்.. இப்படிப்பட்ட சூழலில்தான் இந்நிலையில், அவர்களுக்கு நிம்மதி அளிக்கும் வகையில் தமிழக அரசு முக்கியமான உத்தரவை பிறப்பித்துள்ளது.

    Advertisement

    தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் அரசுப் புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து குடியிருந்து வருபவர்கள் தரப்பிலிருந்து பட்டா வழங்க கோரி தொடர் கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வந்தன.

    Advertisement

    புறம்போக்கு நிலம்

    மக்களின் இந்த நீண்ட நாள் கஷ்டத்தையும், அவசியத்தையும் கருத்தில் கொண்டு, ஆட்சேபகரமற்ற புறம்போக்கு நிலங்களில் குறைந்தபட்சம் 5 வருடங்கள் தொடர்ந்து வசிப்பவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் இந்த திட்டம் கடந்த 2018ம் ஆண்டில் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது.

    இதனடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள ஆட்சேபகரமற்ற புறம்போக்கு நிலங்கள் எங்கெங்கே உள்ளது என்று உடனடியாக கண்டறியப்பட்டு, அங்கு வசிக்கும் ஏழை எளிய மக்களின் ஆக்கிரமிப்புகள் முறைப்படுத்தப்பட்டு அதிகாரப்பூர்வ பட்டாக்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

    நீர்நிலைப் புறம்போக்கு

    அதுமட்டுமல்ல, நீர்நிலைப் புறம்போக்கு போன்ற பகுதிகளில் ஆபத்தான முறையில் வசிப்பவர்களை கண்டறிந்து அவர்களுக்கும், மாற்றுப் புறம்போக்கு நிலங்கள் ஒதுக்கப்பட்டு பாதுகாப்பான முறையில் பட்டா வழங்கப்பட்டு வருகிறது.

    Advertisement

    வசிப்போருக்கு அந்த இடத்திலேயே பட்டா வழங்கப்படாது; மாறாக, அவர்களுக்கு வேறு புறம்போக்கு நிலங்கள் ஒதுக்கி பட்டா வழங்கப்படும். வேறு புறம்போக்கு நிலங்கள் இல்லாத நிலையில், அப்பகுதியில் பயன்படுத்தாமல் உள்ள தனியார் நிலங்களை கையகப்படுத்தி, அதில் பட்டா வழங்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது

    எனினும் இந்த திட்டத்துக்கான கால அவகாசம் கடந்த ஆகஸ்ட் 30ம் தேதியுடன் நிறைவடைந்திருந்தது. இந்நிலையில், பொதுமக்களின் நலன் கருதியும், நிலுவையில் உள்ள கோரிக்கைகளை முழுமையாக நிறைவேற்றும் வகையிலும், இந்த அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தபடி இருந்தனர்..

    Advertisement

    வீட்டுமனைப் பட்டா

    இதனை ஏற்று இப்போது இந்த கால அவகாசம் வரும் 2027ம் ஆண்டு ஆகஸ்ட் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

    இதனால், பல ஆண்டுகளாக பட்டா கிடைக்காமல் காத்திருக்கும் குடும்பங்களுக்கு இந்த ஓராண்டு நீட்டிப்பு முக்கியமான வாய்ப்பாக அமையும் என்றே தெரிகிறது.. அதுமட்டுமல்ல, மாவட்ட அளவில் தகுதியான பயனாளிகளை கண்டறிந்து, விதிமுறைகளின்படி பட்டா வழங்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற உள்ளன.

    வருவாய்த் துறையின் இந்த அதிரடி உத்தரவின் மூலம் ஆயிரக்கணக்கான ஏழை எளிய மக்கள் சொந்த வீட்டுமனைப் பட்டா பெறும் வாய்ப்பை பெறப்போகிறார்கள்.. இது உண்மையிலேயே சூப்பரான விஷயமாக பார்க்கப்படுகிறது...!!!

    English Summary

    Free House Site Patta for Government Poramboke Land Residents.. Scheme Extended Until 2027 for Those Living There for 5 Years