சென்னையில் மெரினா, பெசன்ட் நகர் பீச் உள்பட 32 இடங்களில் ஜென்சி இளைஞர்களுக்கு குட்நியூஸ்

  • சென்னை: மெரினா கடற்கரை மற்றும் பெசன்ட் நகர் கடற்கரையில் 32 இடங்களில் பயன்பாட்டில் இல்லாத இலவச 'வைபை' வசதி பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. மெரினா கடற்கரையில் உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரை 27 இடங்களிலும், பெசன்ட் நகர் கடற்கரை பகுதியில் 5 இடங்களிலும் இலவச 'வைபை' வசதி பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

    Advertisement

    சென்னையில் மெரினா கடற்கரைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கிறார்கள்.. விடுமுறை நாட்களில் லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்வார்கள். அதேபோல் பெசன்ட் நகர் கடற்கரைக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் வந்து செல்கிறார்கள். அதேபோல் தி நகர் உள்பட சென்னையில் பல்வேறு இடங்களுக்கு மக்கள் அதிகம் வந்து செல்கிறார்கள். அப்படி வந்து செல்லும் மக்கள் இணைய வசதியை இலவசமாக பெறும் நோக்கில், அரசு இலவச 'வைபை' வசதியை அறிமுகம் செய்துள்ளது. இந்த வசதி குறித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    Advertisement

    தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறுகையில், "சென்னையில் மக்கள் அதிகம் வந்து செல்லும் கடற்கரை பகுதிகளான மெரினா, பெசன்ட் நகர் மற்றும் திருவான்மியூர் கடற்கரை பகுதிகளில் முதற்கட்டமாக மக்கள் தங்குதடையின்றி இணைய பயன்பாட்டை பெறும் வகையில் இலவச 'வைபை' வசதிக்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, மெரினா கடற்கரை மற்றும் பெசன்ட் நகர் கடற்கரையில் 32 இடங்களில் பயன்பாட்டில் இல்லாத இலவச 'வைபை' வசதி பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. மெரினா கடற்கரையில் உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரை 27 இடங்களிலும், பெசன்ட் நகர் கடற்கரை பகுதியில் 5 இடங்களிலும் இலவச 'வைபை' வசதி பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

    Advertisement

    பொதுமக்கள் தங்கள் செல்போனில் 'வைபை' ஆன் செய்து 'கிளிக்' செய்தவுடன் வரும் கியூ-ஆர் கோட்டை 'கிளிக்' செய்து செல்போன் எண்ணுக்கு வரும் ஒ.டி.பி. எண்ணை பதிவு செய்த உடன் 'வைபை' இணைப்பு ஏற்படும். இதன் தொடர்ச்சியாக, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான இதர கடற்கரைப் பகுதிகள், பூங்காக்கள், விளையாட்டுத் திடல்கள் உள்ளிட்ட இடங்களில் பயன்பாட்டில் இல்லாத 'வைபை' வசதியை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவரவும், புதிய 'வைபை' வசதியை ஏற்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது" இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

    English Summary

    Free Wi-Fi facilities that were previously unused have now been made operational at 32 locations across Marina Beach and Besant Nagar Beach. The service is now available at 27 locations along Marina Beach—stretching from the Labour Statue to the Lighthouse—and at 5 locations in the Besant Nagar Beach area.