சென்னை தாம்பரம் அருகே விசிக நிர்வாகி படுகொலை வழக்கில் திடுக் தகவல்கள்! விசாரணையில் பகீர்

  • சென்னை: சென்னை தாம்பரத்தில் விசிக மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் அன்பழகன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நண்பர்களே கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து கூலிப்படையினரை சங்கர் நகர் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    Advertisement

    சென்னை தாம்பரத்தை அடுத்த திருநீர்மலை பகுதியைச் சேர்ந்தவர் அன்பழகன்(40). விசிக மாவட்ட தொண்டரணி அமைப்பாளர்.

    Advertisement

    கே.கே.நகர் பகுதியில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். நேற்றைய தினம் திருநீர்மலை அம்பேத்கர் சிலை அருகே நண்பர்களுடன் நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது 3 இரு சக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணிந்து வந்த 6 பேர் கொண்ட கும்பல் அன்பழகனை மட்டும் சுற்றி வளைத்தனர்.

    அப்போது அவரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். அன்பழகனின் நண்பர்கல், ஆம்புலன்ஸ் வாகனத்தில் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றநர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், விசிக பிரமுகர் அன்பழகன் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து சங்கர்நகர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அன்பழகனின் சடலத்தை பிரேத பரிசோத்தைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    Advertisement

    சம்பவம் நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு திடுக் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து சங்கர்நகர் போலீஸார் கூறியிருப்பதாவது: கொலை செய்யப்பட்ட விசிக பிரமுகர் அன்பழகன் மீது 3 கொலை வழக்குகள் உள்பட 14 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    அதில் 2009ஆம் ஆண்டு திருநீர்மலை பகுதியைச் சேர்ந்த குமார், 2021 ஆம் ஆண்டு பம்மல் நாகல்கேணியைச் சேர்ந்த திமுக பிரமுகர் கணேசன் ஆகியோரை கொலை செய்த வழக்குகள் நிலுவையில் உள்ளன. கணேசன் வழக்கில் அன்பழகனும் அவரது நண்பர் நாகல்கேணியைச் சேர்ந்த வீனஸ் என்பவரும் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டனர்.

    Advertisement

    இந்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த அன்பழகன், கட்டட வேலைக்கு பயன்படுத்தும் சரளை மண் விற்பனை செய்து வந்தாராம். இதனால் அவருக்கு வருமானம் கொழித்ததாக சொல்லப்படுகிறது. இந்த தொழிலால் வீனஸுக்கும் அன்பழகனுக்கும் இடையே தகராறு இருந்து வந்ததாம். இதனால் அவர்கள் இரு தரப்பினரிடையே அடிக்கடி மோதல் போக்கு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் கூலிப்படை மூலம் வீனஸ்தான் அன்பழகனை கொலை செய்ததாக தகவல் கிடைத்தது. இதனால் வீனஸ் உள்பட கூலிப்படையினர் சிலரையும் கைது விசாரணை நடத்தி வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.

    English Summary

    VCK Activist Anbalagan was hacked to death in Tambaram, Chennai, police revealed.