சுள்ளான் மதன்கள் உருவாக காரணம் என்ன.. இன்ஸ்டா முதல் பிரபல இயக்குனர்கள் வரை.. திருந்த வேண்டியது யார்?

  • சென்னை: சில திரைப்படங்களில் கதாநாயகன் அல்லது வில்லன் வன்முறையில் ஈடுபடுவது, எதிரிகளை அச்சுறுத்துவது, சட்டத்தைத் தன் கையில் எடுத்துக்கொள்வது போன்றவை அதிகாரத்தின் அடையாளமாகக் காட்டுகிறார்கள். பலரை அடித்தால் பெரிய ஆள். போலீஸையே எதிர்த்தால் துணிச்சலானவன். ஊரே பயந்தால் அவன் செல்வாக்கு மிக்கவன். பழிவாங்குவது ஆண்மையின் அடையாளம். எங்கள் சாதி ஆண்ட சாதி.. நாங்கள் வீரத்தின் அடையாளம் என்று காட்சிகள் தொடர்ந்து ஒரே விதமாகச் சித்தரிக்கப்படுவதை பார்க்கும் இளைஞர்கள் வன்முறையைத் தவறான செயலாகப் பார்க்காமல், மதிப்பையும் புகழையும் பெறுவதற்கான வழியாகக் கருதுகிறார்கள்.இதான் சுள்ளான் மதன் போன்ற சுள்ளான் குரூப்ஸ் உருவாக காரணமாக பார்க்கப்படுகிறது.

    Advertisement

    முன்பு ஒரு ரவுடியைப் பற்றிய தகவல் குறிப்பிட்ட பகுதியில்தான் பரவியிருக்கும். இன்று இன்ஸ்டாகிராம் ரீல்ஸ், யூடியூப் மற்றும் பிற சமூக ஊடகங்கள் மூலம் அந்த நபரின் பெயர், புகைப்படங்கள், சண்டைக் காட்சிகள் போன்றவை விரைவாகப் பரவுகிறது. ஒரு நபர் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டிருந்தாலும், அவரைச் சுற்றி உருவாக்கப்படும் பிம்பம் சில இளைஞர்களுக்கு ஒரு போலியான பிரபலத்தன்மையை ஏற்படுத்துகிறது. இதனால், உண்மையான சாதனைகள் இல்லாமல்கூட அச்சுறுத்தலைச் செல்வாக்காகக் காட்டுகிறார்கள். குடும்பம் மற்றும் சுற்றுப்புறச் சூழல், நண்பர்கள் குழுவின் தாக்கம், உள்ளூர் அரசியல் , சமூக ஆதரவு, பணம், அதிகாரம், அச்சுறுத்தல் மூலம் கிடைக்கும் செல்வாக்கு, சமூக ஊடகங்களில் கிடைக்கும் கவனம் மற்றும் பாராட்டுகளால் திசை மாறுகிறார்கள் இளைஞர்கள்..

    Advertisement

    ஒரு திரைப்படத்தில் ரவுடித்தனம் 90 சதவீதம் காட்டப்படுகிறது. 10 சதவீதம் தான், படத்தின் இறுதியில் தான் அவர்கள் வாழ்க்கை வீணாவது போல் முடியும்.ஆனால் மக்கள் 10 சதவீதத்தை எடுக்காமல் 90 சதவீதத்தை எடுக்கிறார்கள். தேவர் மகன், ஆடுகளம், வடசென்னை, அசுரன், அரசன்,புதுப்பேட்டை, தீனா, வீரம், விஸ்வாசம், கர்ணன், மாமன்னன் என பல படங்களில் நல்ல விஷயங்கள் இருந்தாலும், அந்த படத்தின் கதையில் காட்டப்படும் காட்சிகளில் ரவுடிகள் தங்களுக்கு தேவையானதை மட்டும் எடுத்துக்கொள்கிறார்கள். இதுதான் சிக்கலுக்கு காரணமாக இருக்கிறது.

    இன்ஸ்டா ரீல்ஸ்... சில நிமிடப் புகழ்.. யார் இந்த சிவகங்கை சுள்ளான் மதன்.. நடந்தது என்ன?
    Advertisement

    உண்மையில் ரவுடிகளை கெத்தாக காட்டுவதும், சண்டை போடுவது தான் தீர்வு என்று காட்டப்படுவதும் இளம் சிறார்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. கேஸ் வாங்கினால் கெத்து, கேஸ் உள்ளவர்களுக்கு கிடைக்கும் புகழ், பாராட்டு போன்றவையும் இளம் சிறார்களை தவறாக வழிநடத்துகிறது. விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தில் சிறார்களை வைத்து குற்றங்களை செய்வதை காட்டியிருப்பார்கள். சிறார்களுக்கு தண்டனை இல்லை.. அவர்களை உடனே விட்டுவிவார்கள் என்பதையும் காட்டியிருப்பார்கள். உண்மையில் அந்த படத்தில் வரும் பவானி கேரக்டரில் இன்று பல தருதலைகள் சிறார்களின் வாழ்க்கை வேறு வேறு வகையில் அழித்துக்கொண்டிருக்கிறார்கள்.அதற்கு சினிமாவில் வில்லனை காட்டும் விதம் முக்கியமான காரணம். அதேபோல் இன்ஸ்டாகிராம் தான் இன்றைய தலைமுறை சீரழிந்துபோக முக்கியமான காரணம். இன்ஸ்டாகிராம் மட்டும் இந்தியாவில் தடை செய்யப்பட்டாலே பல குற்றவாளிகள் உருவாதை தடுக்க முடியும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

    Advertisement

    அதேபோல் ஒரு சினிமாவில் ரவுடித்தனம் காட்டினாலும் அதனால் ஏற்படும் சட்டரீதியான விளைவுகள், குடும்பத்தின் பாதிப்பு, பாதிக்கப்பட்டவர்களின் துயரம் ஆகியவற்றை தான் பிரதானமாக காட்ட வேண்டும். அது அவர்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் அளவிற்கு இருக்க வேண்டும். அதேபோல், நிஜ வாழ்க்கையில் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் நபர்களைச் சமூக ஊடகங்களில் மிகைப்படுத்திப் புகழ்வதும் பிரச்சினைக்கு காரணமாக இருப்பதால், இதனை போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து தடுக்க வேண்டும்.

    சேகர்பாபு, மேயர் பிரியா முன்னிலையில் விஜய் குறித்து அவதூறு.. கவுன்சிலர் சுதா தீனதயாளன் மீது வழக்கு

    ஒட்டுமொத்தமாக, சினிமா, சமூக ஊடகங்கள், உள்ளூர் அதிகார அமைப்புகள் ஆகிய மூன்றுக்குமே சுள்ளான்கள் உருவாக்கத்தில் பங்கு உள்ளது. ஒட்டுமொத்தமாக வன்முறையைச் செல்வாக்காகவும், பயத்தைப் புகழாகவும் காட்டும் கலாசாரம் இளைஞர்களுக்கு ஆபத்தான முன்னுதாரணம். இந்த விவகாரத்தில் திருந்த வேண்டிய இயக்குனர்கள் திருந்தினால் அவர்களுக்கு மட்டுமல்ல, இளம் சிறார்களுக்கும் நல்லது.

    English Summary

    What leads to the emergence of 'Sullan Madans'? And who—from Instagram influencers to prominent film directors—needs to mend their ways?