சென்னை: உலகத்துல ஒவ்வொரு தேதியிலும் எத்தனையோ சம்பவங்கள் நடக்குது. அதுல 26-ம் தேதி நடந்த பெரிய சம்பவங்களை மட்டும் சேர்த்து பார்த்தா அது இன்னும் மர்மமாகவே தெரியும். அதனால... சம்பவங்கள் உண்மை. 26-க்கு பின்னாடி மர்மம் இருக்கு என்பதுதான் நிரூபிக்கப்படாத விஷயம். ஆனால் அந்தத் தற்செயல் நிகழ்வைப் பார்க்கும்போது... அது உண்மையில் சற்று அச்சமூட்டுவதாக இருக்கிறது என நெட்டிசன் ஒருவர் கூறியுள்ளார்.
அதுபற்றி விரிவாக பார்ப்போம்.
26 ஜனவரி 2001 (பூஜ் நிலநடுக்கம் - குஜராத்): இந்தியாவின் 52-வது குடியரசு தினமான அன்று காலை குஜராத்தின் பூஜ் பகுதியை மையமாகக் கொண்டு 7.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 20,000-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
26 டிசம்பர் 2004 (இந்தியப் பெருங்கடல் சுனாமி): இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுக்கு அருகே கடலுக்குள் ஏற்பட்ட 9.1 ரிக்டர் நிலநடுக்கத்தால் உருவான சுனாமியால் இந்தியா, இலங்கை உட்பட பல நாடுகளின் கடலோரப் பகுதிகளைத் தாக்கியது. இதில் 2,30,000-க்கும் அதிகமானோர் பரிதாபமாக உயிரிழந்தனர். சென்னை முதல் கன்னியாகுமரி வரை பலர் இறந்து போனார்கள். குறிப்பாக வேளாங்கண்ணி மற்றும் கன்னியாகுமரியில் நடந்த மனித பேரழிவு ஆகும். 26 ஜூலை 2005 (மும்பை பெருவெள்ளம்): ஒரே நாளில் 944 மி.மீ என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க மிகக் கடுமையான மழை பொழிந்ததால் மும்பை மாநகரமே தண்ணீரில் மூழ்கியது. இதில் 1,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 26 மே 2007 (கவுகாத்தி குண்டுவெடிப்பு): அசாம் மாநிலம் கவுகாத்தியில் அடுத்தடுத்து நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் பல பொதுமக்கள் உயிரிழந்தனர் மற்றும் படுகாயமடைந்தனர். 26 ஜூலை 2008 (அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு): குஜராத்தின் அகமதாபாத் நகரில் வெறும் 70 நிமிட இடைவெளியில் 21 இடங்களில் குண்டுகள் வெடித்தன. இதில் 56 பேர் உயிரிழந்தனர். 26 நவம்பர் 2008 (மும்பை பயங்கரவாதத் தாக்குதல் - 26/11): கடல் வழியாக ஊடுருவிய பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மும்பையின் தாஜ் ஹோட்டல், சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் நடத்திய கொடூரத் தாக்குதலில் 166 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டார்கள். பலர் படுகாயம் அடைந்தனர் 26 ஆகஸ்ட் 2026 (நேபாள திடீர் வெள்ளப்பெருக்கு): அண்மையில் நேபாளத்தின் மலைப் பகுதிகளில் பனி ஏரி உடைந்து உடைந்து ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாகப் பெரும் சேதம் ஆனது இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள நெட்டிசன் ஒருவர், "26 என்ற ஒரு தேதியை மட்டும் எடுத்துப் பார்த்தா சாதாரண நம்பர் மாதிரி தான் இருக்கும்... ஆனால் வரலாறை கொஞ்சம் திருப்பிப் பார்த்தா கொஞ்சம் ஆச்சரியமா பயமா இருக்கு . 26 என்ற ஒரு தேதியை மட்டும் எடுத்துப் பார்த்தா சாதாரண number மாதிரி தான் இருக்கும்... ஆனா வரலாறை கொஞ்சம் திருப்பிப் பார்த்தா கொஞ்சம் ஆச்சரியமா பயமா இருக்கு 26 Jan 2001 - Bhuj Earthquake 26 Dec 2004 - Indian Ocean Tsunami 26 July 2005 - Mumbai Floods 26 May 2007 - Guwahati incident 26 July 2008 - Ahmedabad incident 26 Nov 2008 - Mumbai incident 26 Aug 2026 - Nepal Flash Floods இப்படி பெரிய பெரிய சம்பவங்கள் எல்லாம் 26-ம் தேதியில நடந்திருக்கிறதை பார்த்தா, "இந்த 26-க்கு ஏதாவது connection இருக்குமோ?"ன்னு நமக்கு தோணாம இருக்காது. ஆனா இதுல இருக்க dates பெரும்பாலும் உண்மை தான்... அதே நேரம் 26 ஒரு அன்லக்கி தேதி, இதை 'சாபத்திற்குரிய எண்' என்று அழைப்பதற்கு எந்த அறிவியல் பூர்வமான ஆதாரமும் இல்லை. நம்ம மூளைக்கு ஒரு பழக்கம் இருக்கு... ஒரே மாதிரி ரிப்பீட் ஆகுற விஷயங்களை பார்த்தா உடனே அதுக்குள்ள ஒரு pattern தேடும். உலகத்துல ஒவ்வொரு தேதியிலும் எத்தனையோ சம்பவங்கள் நடக்குது. அதுல 26-ம் தேதி நடந்த பெரிய சம்பவங்களை மட்டும் சேர்த்து பார்த்தா அது இன்னும் மர்மமாகவே தெரியும். அதனால... சம்பவங்கள் உண்மை. 26-க்கு பின்னாடி மர்மம் இருக்கு என்பதுதான் நிரூபிக்கப்படாத விஷயம். ஆனால் அந்தத் தற்செயல் நிகழ்வைப் பார்க்கும்போது... அது உண்மையில் சற்று அச்சமூட்டுவதாக இருக்கிறது" என்று கூறியுள்ளார்.