விமர்சனங்களை உடைத்த விஜய்.. கட்சி மாறியவர்களுக்கு செக்.. ‘மக்கள் இயக்க’ விசுவாசிகளுக்கு மகுடம்!

  • சென்னை: விஜய் தலைமையிலான கேபினட்டில், விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த 16 பேருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருப்பது மிகப்பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. வேறு கட்சிகளில் இருந்து வந்தவர்களுக்கு சீட் கொடுக்கப்பட்டதாக விமர்சிக்கப்பட்ட நிலையில், தற்போது, விசுவாசிகளுக்கு 'அமைச்சர்' பதவி கொடுத்து அழகு பார்த்துள்ளார் விஜய்.

    Advertisement

    தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் களம் கண்டபோது, ஆரம்ப காலத்தில் இருந்து கட்சிக்காக உழைத்த ரசிகர்களை ஓரம் கட்டிவிட்டு, மாற்றுக்கட்சிகளில் இருந்து வந்த அரசியல் வித்தர்களுக்கே விஜய் சீட் கொடுக்கிறார் என்ற கடுமையான விமர்சனம் முன்வைக்கப்பட்டது. வி.எஸ். பாபு போன்ற மூத்த தலைவர்களின் வருகை இந்த விமர்சனத்தை இன்னும் அதிகமாக்கியது.

    Advertisement

    ஆனால், அமைச்சரவை என்று வரும்போது முதலமைச்சர் விஜய் தனது அசல் விஸ்வரூபத்தைக் காட்டியுள்ளார். தேர்தல் நேரத்தில் அரசியல் கணக்குகளுக்காகப் பலரை கட்சியில் இணைத்தாலும், அதிகாரப் பகிர்வு என்று வரும்போது தனக்குத் தோள் கொடுத்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கே சிம்மாசனம் அமைத்துக் கொடுத்துள்ளார்.

    தற்போதைய கேபினட்டில் விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த 16 பேருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் மிகப் பெரிய ஆச்சரிய அலையை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யின் இந்த விசுவாச அரசியல் வியூகம் பற்றி பார்க்கலாம்.

    அமைச்சரவையில் மகுடம் சூடிய 16 மக்கள் இயக்க சிங்கங்கள்

    கட்சி தொடங்கிய நாள் முதல், கொளுத்தும் வெயிலிலும் கொட்டும் மழையிலும் விஜய் மக்கள் இயக்கத்தின் கொடியைப் பிடித்து, மக்கள் நற்பணிகளைச் செய்த 16 விசுவாசிகள் இன்று தமிழகத்தின் அமைச்சர்களாக உருவெடுத்துள்ளனர்.

    Advertisement

    அகில இந்திய விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளராக இருந்தவரும், கட்சியின் தூணாக விளங்குபவருமான புஸ்ஸி ஆனந்த், விஜய்க்கு அடுத்த இடத்தில் அமைச்சரவையில் இடம்பிடித்துள்ளார். விஜய்யின் நிழலாக உழைத்த முக்கிய இயக்க நிர்வாகி வெங்கட்ரமணன், அமைச்சராகியுள்ளார்.

    விஜய் மக்கள் இயக்கம் - எம்.எல்.ஏ - அமைச்சர்கள்

    1-கும்பகோணம் - வினோத்
    2-கடலூர் - ராஜ்குமார்
    3- அரக்கோணம் - காந்திராஜ்
    4-ராஜபாளையம்- ஜெகதீஸ்வரி
    5-ஈரோடு கிழக்கு - விஜய பாலாஜி
    6-சேலம் தெற்கு - தமிழன் பார்த்திபன்
    7- ஶ்ரீரங்கம் - ரமேஷ்
    8-ஶ்ரீபெரும்புதூர் - தென்னரசு
    9- கோவை வடக்கு - சம்பத் குமார்
    10- அறந்தாங்கி - பர்வேஸ்
    11- தாம்பரம் - சரத் குமார்
    12- கிணத்துக்கடவு - விக்னேஷ்
    13- குமாரபாளையம் - விஜயலட்சுமி
    14. தியாகராய நகர் - ஆனந்த்
    15. மயிலாப்பூர் - வெங்கட்ரமணன்
    16. காரைக்குடி - பிரபு

    Advertisement

    விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த விசுவாச ஃபார்முலா

    தவெக வேட்பாளர் பட்டியல் வெளியானபோது, "பழைய ஆட்களுக்கு முக்கியத்துவம் இல்லை, கட்சி மாறி வந்தவர்களுக்கு சீட் கொடுக்கிறார் விஜய்" என மு.க.ஸ்டாலினும் எடப்பாடி பழனிசாமியும், மறைமுகமாக விமர்சித்தனர். ஆனால், விஜய் போட்ட மாஸ்டர் பிளான் வேறு.

    தேர்தல் வியூகம்: தேர்தலை வெல்ல அரசியல் அனுபவம் வாய்ந்த "ஜெயண்ட் கில்லர்கள்", அதாவது வி.எஸ். பாபு போன்ற அரசியல் சீனியர்கள் தேவை என்பதை விஜய் உணர்ந்திருந்தார். அதற்கேற்ப சீட் கொடுத்தார்.

    அதிகார வியூகம்: ஆனால், ஆட்சி அதிகாரத்தின் உச்சமான அமைச்சரவை என்று வரும்போது, தன்னிடம் பல ஆண்டுகளாக விசுவாசமாக இருக்கும் மக்கள் இயக்கத்துக்கே முன்னுரிமை தந்துள்ளார்.

    Advertisement

    இதன் மூலம், விஜய்யை நம்பினால் என்றாவது ஒருநாள் நிச்சயம் ராஜயோகம் அடிக்கும் என்பதைத் தனது அடிமட்டத் தொண்டனுக்கு ஆணித்தரமாக உணர்த்தியுள்ளார் முதலமைச்சர் விஜய்.

    எம்.ஜி.ஆர் ஸ்டைல்: அன்று எம்.ஜி.ஆர் கட்சி தொடங்கியபோது, பெரிய அரசியல் திமிங்கிலங்களை விடத் தன் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தவர்களையே நம்பிப் பதவிகளை வழங்கினார். இன்று அதே பாணியை விஜய் கையில் எடுத்து, 16 மக்கள் இயக்க வீரர்களுக்கு செங்கோல் வழங்கியுள்ளார்.

    மண்டல வாரியான சமநிலை

    கொங்கு மண்டலம்: கோவை வடக்கு (சம்பத் குமார்), கிணத்துக்கடவு (விக்னேஷ்), ஈரோடு கிழக்கு (விஜய பாலாஜி), சேலம் (தமிழன் பார்த்திபன்), குமாரபாளையம் (விஜயலட்சுமி) என கொங்கு பெல்ட்டிற்கு அள்ளிக் கொடுத்துள்ளார்.

    Advertisement

    டெல்டா & தென்மாவட்டம்: கும்பகோணம் வினோத், ஸ்ரீரங்கம் ரமேஷ் மற்றும் ராஜபாளையம் ஜெகதீஸ்வரி ஆகியோர் மூலம் பிற மண்டலங்களும் சமமாகத் திருப்திப்படுத்தப்பட்டுள்ளன.

    பெண்களுக்கு பிரதிநிதித்துவம்: ஜெகதீஸ்வரி, விஜயலட்சுமி போன்ற இயக்கப் பின்னணி கொண்ட பெண்களுக்கு கேபினட்டில் பவர்ஃபுல் இடங்கள் கிடைத்துள்ளன.

    புஸ்ஸி ஆனந்த்துக்கு கிடைத்த அரியாசனம்

    விஜய் மக்கள் இயக்கத்தின் தூணாக விளங்கி, தற்போது தவெக-வின் பொதுச்செயலாளராக இருக்கும் புஸ்ஸி ஆனந்த், மற்றும் முக்கிய நிர்வாகிகளான வெங்கட்ரமணன் ஆகியோருக்கு கேபினட்டில் மிக முக்கிய இலாக்காக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

    தேர்தல் களம், கூட்டணிப் பேச்சுவார்த்தை, உட்கட்சிப் பூசல் என அனைத்தையும் ஒற்றை ஆளாகத் தாங்கிய புஸ்ஸி ஆனந்திற்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சர் பதவியும், சீனியாரிட்டியில் விஜய்க்கு அடுத்த இடமும், உழைப்புக்குக் கிடைத்த உச்சகட்ட அங்கீகாரம்.

    இது தொண்டர்களின் அரசாங்கம்

    மாற்றுக்கட்சியில் இருந்து வந்த வி.எஸ். பாபு போன்ற சீனியர்களுக்கு தற்போதைக்கு அமைச்சர் பதவியைத் தவிர்த்து, விசுவாசப் பட்டியலுக்கு விஜய் முக்கியத்துவம் கொடுத்ததன் மூலம் தவெக-வின் உட்கட்சி ஜனநாயகம் பலப்பட்டுள்ளது.

    சீட் வேண்டுமானால் கட்சி மாறுபவர்களுக்கு கிடைக்கலாம், ஆனால் விஜய்யின் இதயமும் சிம்மாசனமும் என்றும் தொண்டர்களுக்குத்தான் என்பதை இந்த 16 அமைச்சர்களின் பட்டியல் நிரூபித்துள்ளது. இவர்களின் நிர்வாகத் திறனே தவெக அரசின் அடுத்த 5 ஆண்டுகால வெற்றிப் பயணத்தைத் தீர்மானிக்கும்.

    English Summary

    The fact that 16 members of the Vijay Makkal Iyakkam have been awarded ministerial posts in the cabinet led by Vijay has garnered significant attention. While he had previously faced criticism for allocating seats to individuals who had defected from other parties, Vijay has now fittingly honored his loyalists by bestowing upon them the title of ‘Minister.’