இத்தனை நாளா இந்த கருமத்தை தான் குடிச்சீங்களா? Old Monk, Royal Challenge விற்பனைக்கு FSSAI தடை! ஷாக்!

  • சென்னை: இந்தியாவில் மது பிரியர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்த சில முக்கியமான பிராண்டுகளின் குறிப்பிட்ட வகை மதுபானங்களை விற்பனை செய்ய இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஆணையமான எஃப்எஸ்எஸ்ஏஐ தடை விதித்துள்ளது. ஓல்ட் மங்க், ராயல் சேலஞ்ச், ஆண்டிகுய்ட்டி ப்ளூ மற்றும் பேக்பைப்பர் ஆகிய பிராண்டுகளின் சில தயாரிப்புகளில் விதிமுறைக்கு முரணாக சுவையூட்டிகள், நிறமூட்டிகள் பயன்படுத்தப்பட்டதாக ஆய்வில் கண்டறியப்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    இந்தியாவில் உள்ள பிரபலமான மதுபான ஆலைகளில் வெளிநாடுகளில் மதுபானங்கள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இந்தியாவின் சில முக்கிய மதுபான நிறுவனங்கள் பல பெயர்களில் மதுபானங்களை விற்பனை செய்து வருகிறது.

    Advertisement

    இந்த நிலையில் ஓல்ட் மங்க், ராயல் சேலஞ்ச், ஆன்ட்டிக்யூட்டி ப்ளூ, பேக்பைப்பர் ஆகிய பிராண்டுகளின் சில தயாரிப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது இந்திய மதுபான துறையில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

    மேலும் பிரபல நிறுவனங்கள் தயாரிக்கும் சில மதுபானங்கள் தரம் மற்றும் உற்பத்தி தொடர்பாக தற்போது தீவிர கண்காணிப்பு வளையத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. எஃப்எஸ்எஸ்ஏஐ உத்தரவின் படி குறிப்பிட்ட உற்பத்தி நிலையங்களில் தயாரிக்கப்பட்ட சில மதுபான வகைகளை விற்பனை நிறுத்தப்பட்டு இருக்கிறது. மத்திய பிரதேசத்தில் யுனைட்டட் ஸ்பிரிட் நிறுவனம் தயாரித்த ஆண்ட்டிக்ய்ட்டி ப்ளூ விஸ்கி மற்றும் ராயல் சேலஞ்ச் விஸ்கி ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    இதேபோல் மத்திய பிரதேசத்தில் இன்ப்ரூ பெவரேஜஸ் தயாரித்த பேக்பைப்பர் ராயல் விஸ்கி Whisky மற்றும் ஓல்டு கேஸ்க் டிரிபிள் எக்ஸ் ரம் விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், மகாராஷ்டிராவில் மோகன் ராக்கி ஸ்பிரிங் வாட்டர் நிறுவனம் தயாரித்த ஓல்டு மாங்க் பிராண்டின் மூன்று வகைகளும் தடை செய்யப்பட்ட மதுபானங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

    இந்தத் தடை அந்தந்த குறிப்பிட்ட உற்பத்தி நிலையங்களில் தயாரிக்கப்பட்ட மதுபானங்களுக்கு மட்டுமா அல்லது இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் மாநிலங்களில் தயாரிக்கப்படும் அதே பிராண்டுகளுக்கும் பொருந்துமா என்பது குறித்து இதுவரை எஃப்எஸ்எஸ்ஏஐ தெளிவான விளக்கத்தை அளிக்கவில்லை. அதே நேரத்தில் இந்தத் தடைக்கான காரணம் தற்போது வெளியாகி இருக்கிறது.

    Advertisement

    இந்திய உணவு பாதுகாப்பு விதிகளின்படி மதுபானங்களில் இயற்கையாக பெறப்பட்ட சுவையூட்டிகளை மட்டுமே பயன்படுத்த அனுமதி உள்ளது. ஆனால் எஃப்எஸ்எஸ்ஐ நடத்திய ஆய்வில் சில தயாரிப்புகளில் விஸ்கிக்கு விஸ்கி சுவையூட்டி, ரம்முக்கு ரம் சுவையூட்டி போன்ற செயற்கை அல்லது நேச்சுரல் ஐடென்டிக்கல் பிளேவரிங் பயன்படுத்தப்பட்டது கண்டறியப்பட்டது.

    உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மதுபான உற்பத்தி நடைமுறைகளில் தயாரிக்கப்படும் அதே மதுபானத்தில் செயற்கைச் சுவையை மீண்டும் அதில் சேர்ப்பது வழக்கமல்ல என எஃப்எஸ்எஸ்ஐ தெரிவித்துள்ளது. இது போன்ற நடைமுறைகள் கரும்புச் சர்க்கரை, மால்ட், திராட்சை போன்ற இயற்கை மூலப்பொருட்களை பயன்படுத்தி வழக்கமான உற்பத்தி மற்றும் முதிர்ச்சி செயல்முறைகளை தவிர்க்க உற்பத்தியாளர்களுக்கு வாய்ப்பளிக்க கூடும் என அந்த ஆணையம் சுட்டிக்காட்டி உள்ளது.

    Advertisement

    இந்த காரணங்களால் ஆய்வு செய்யப்பட்ட தயாரிப்புகள் தர நிலைக்கு உட்படாதவை என எஃப்எஸ்எஸ்ஐ முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக யுனைடெட் ஸ்பிரிட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களிடம் கருத்து கேட்டபோதும் உடனடியாக அவர்கள் பதில் அளிக்கவில்லை. அதே நேரத்தில் மதுபான உற்பத்தி துறையைச் சேர்ந்த சில உயர் அதிகாரிகள் இந்திய விதிமுறைகளின்படி இத்தகைய சுவையூட்டிகளை பயன்படுத்த அனுமதி இருப்பதாக சொல்கின்றனர்.

    உலகின் மிகப்பெரிய இந்திய சந்தைகளில் மதுபான சந்தைகளில் இந்தியா முக்கியமானது. ஆண்டுக்கு சுமார் 40 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள மதுபான விற்பனை இங்கு நடைபெறுகிறது. இந்திய சந்தையில் முக்கிய பங்கு வகிக்கும் யுனைடெட் ஸ்பிரிட்ஸ், பெர்னாட் ரிச்சர்ட் போன்ற பல நிறுவனங்கள் சர்வதேச நிறுவனங்களுடன் போட்டியிட்டு வருகின்றன.

    Advertisement

    உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையத்தின் நடவடிக்கைக்கு உள்ளான பெரும்பாலான பிராண்டுகள் உள்நாட்டுத் தயாரிக்கப்படும் குறைந்த மற்றும் நடுத்தர விலை பிரிவை சேர்ந்த மதுபானங்கள் என்பதால் அவை நாடு முழுவதும் பயன்படுத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் தான் அதிக காஃபின் கொண்ட மதுபானங்களை எனர்ஜி ட்ரிங்க் என்ற பெயரில் விளம்பரப்படுத்தக் கூடாது என எஃப்எஸ்எஸ்ஐ உத்தரவிட்டிருந்தது. அந்த நடவடிக்கையை தொடர்ந்து தற்போது மதுபான உற்பத்தியிலும் அதிரடி காட்டி இருக்கிறது எஃப்எஸ்எஸ்ஐ.

    English Summary

    FSSAI bans select Old Monk, Royal Challenge and other liquor variants over artificial flavouring concerns, triggering industry-wide attention.