இது லிஸ்ட்லயே இல்லையே? பட்ஜெட்டுக்கு முன் முழு பயிர்க் கடன் தள்ளுபடி? விஜய் கையில் வேற லெவல் ப்ளான்!

  • சென்னை: தமிழ்நாட்டில் கூட்டுறவு வங்கிகள் மூலம் பெறப்பட்ட பயிர்க் கடன்களுக்கு ஏற்கனவே பகுதி தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மாநில பட்ஜெட்டுக்கு முன்பாக விவசாயிகளுக்கான முழுமையான கடன் தள்ளுபடி திட்டத்தை அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் விவசாயிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

    Advertisement

    முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் கடந்த மே 25-ஆம் தேதி கூட்டுறவு வங்கிகளில் பயிர்க் கடன் பெற்ற விவசாயிகளுக்கான சிறப்பு தள்ளுபடி திட்டத்தை அறிவித்தார். அந்த அறிவிப்பின்படி, குறு விவசாயிகளுக்கு ரூ.50,000 வரை பெற்ற பயிர்க் கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படுகின்றன.

    Advertisement

    சிறு விவசாயிகளுக்கு ரூ.25,000 வரை அல்லது 50 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதேபோல், ரூ.50,000-ஐ தாண்டி கடன் பெற்றவர்களுக்கும் கடன் தொகைக்கு ஏற்ப ரூ.5,000 முதல் ரூ.40,000 வரை தள்ளுபடி வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது.

    பயிர்க் கடன் தள்ளுபடி

    மேலும், பெரிய விவசாயிகளுக்கும் தலா ரூ.5,000 வரை பயிர்க் கடன் தள்ளுபடி வழங்கப்படும் என அரசு கூறியுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் 14.22 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் பயனடைவார்கள் என்றும், இதற்காக அரசுக்கு ரூ.2,044.46 கோடி கூடுதல் செலவாகும் என்றும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த அறிவிப்பு வெளியான பிறகு பல்வேறு விவசாய சங்கங்கள் அதிருப்தி தெரிவித்தன. குறிப்பாக, கடன் சுமையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு பகுதி தள்ளுபடி போதுமானதாக இருக்காது என்றும், முழுமையான பயிர்க் கடன் தள்ளுபடி மட்டுமே விவசாயிகளை நெருக்கடியில் இருந்து மீட்கும் என்றும் வலியுறுத்தினர்.

    Advertisement

    விஜய் அரசு

    இந்நிலையில், விரைவில் நடைபெற உள்ள மாநில பட்ஜெட் கூட்டத்தொடரில் மேட்டூர் அணை நீர்திறப்பு, குறுவை சாகுபடி பாதிப்பு, மின்வெட்டு, விவசாய நெருக்கடி மற்றும் பயிர்க் கடன் தள்ளுபடி உள்ளிட்ட விவகாரங்களை எதிர்க்கட்சிகள் தீவிரமாக எழுப்ப திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பட்ஜெட்டுக்கு முன்பாகவே விவசாயிகளுக்கான கூடுதல் நிவாரண அறிவிப்புகளை வெளியிட அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    மேட்டூர் அணை

    குறிப்பாக, மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைவாக இருப்பதால் குறுவை சாகுபடி கேள்விக்குறியாகியுள்ள சூழலில், காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளின் அதிருப்தியை சமாளிக்க புதிய சலுகைகள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசு வட்டாரங்களில் இருந்து வெளியாகும் தகவல்களின்படி, கூட்டுறவு வங்கிகளில் நிலுவையில் உள்ள பயிர்க் கடன்களின் முழு விவரங்களையும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது. கடன் தள்ளுபடியால் அரசுக்கு ஏற்படும் கூடுதல் நிதிச்சுமை, பயனாளிகளின் எண்ணிக்கை மற்றும் நடைமுறை சாத்தியக்கூறுகள் குறித்து நிதித்துறை அதிகாரிகள் அறிக்கை தயாரித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    Advertisement

    தமிழக அரசு

    இருப்பினும், அனைத்து விவசாயிகளின் பயிர்க் கடன்களையும் முழுமையாக தள்ளுபடி செய்வது தொடர்பாக இதுவரை தமிழக அரசு எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. எனவே, முழு கடன் தள்ளுபடி தொடர்பான தகவல்கள் தற்போது அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரங்களில் பரவி வரும் தகவல்களின் அடிப்படையிலேயே உள்ளன. ஆனால், பட்ஜெட்டுக்கு முன்பாக விவசாயிகளுக்கான முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், விஜய் அதற்கான ஏற்பாடுகளை துவக்கி விட்டார் என்கின்றனர் தலைமைச் செயலக வட்டாரத்தினர்.

    English Summary

    Speculation grows over a complete crop loan waiver as Tamil Nadu farmers await major announcements ahead of the state budget.