சென்னை: "ஆட்சிக்கு வந்தால் இருள் விலகும், புதிய மாற்றம் பிறக்கும்" என்று கூறி அதிகாரத்திற்கு வந்த தமிழக வெற்றிக் கழக ஆட்சியில், கடந்த சில மாதங்களாக மாநிலத்தின் மூலை முடுக்கெல்லாம் மின்வெட்டு தலைவிரித்தாடுகிறது. ஆனால், மின்வெட்டு ஏற்பட்டதற்கு அரசு சொன்ன காரணங்களைக் கேட்டால் சிரிப்பதா அல்லது தலையில் அடித்துக் கொள்வதா என்றே தெரியவில்லை.
ஒருபுறம் பொதுமக்களிடம் விதவிதமான வினோதக் கதைகளை அவிழ்த்துவிட்டு, மறுபுறம் அவசரக் கால மின் பற்றாக்குறை என்ற பெயரில் தனியார் நிறுவனங்களிடம் ஒரு யூனிட் மின்சாரத்தை சராசரியாக ₹35 கொடுத்து வாங்க டெண்டர் விட்டிருப்பது தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
மின் தட்டுப்பாடு குறித்து கேள்வி எழும்போதெல்லாம் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமாரும் அரசுத் தரப்பும் கூறிய காரணங்களின் பட்டியல் பொதுமக்களையே அதிர்ச்சியிலும் வியப்பிலும் ஆழ்த்தியது: திமுகவினரால் சதியாம்: மின்தடை ஏற்படுவதற்கு எதிர்க்கட்சியான திமுகவினர்தான் காரணம் என்று முதலில் பழி போட்டார்கள். வாரிய ஊழியர்கள் மீது பழி: மின்சார வாரியத்தில் உள்ள சில ஊழியர்கள்தான் இதற்கு பொறுப்பு என்றும், ஊழியர்களில் 1% பேர் "கருப்பு ஆடுகள்" என்றும் குற்றம் சாட்டப்பட்டது. பியூஸ் கட்டை திருட்டு: மின்வெட்டுக்கு மிக வினோதமான காரணமாக "யாரோ பியூஸ் கட்டையை (Fuse Carrier) திருடிச் சென்று விடுகிறார்கள்" என்ற நகைப்புக்குரிய பதிலை முன்வைத்தார்கள். பிஎஸ்என்எல் கேபிள் தோண்டுதல்: பிஎஸ்என்எல் நிறுவனம் கேபிள் பதிக்க பள்ளம் தோண்டுவதால்தான் மின்கம்பிகள் சேதமடைந்து மின் தடை ஏற்படுகிறது என்றார்கள். வானிலையும் எல் நீனோவும்: இயற்கையைக் காரணம் காட்டி, "வானிலை சரியில்லை", "எல் நீனோ பாதிப்பு" என சர்வதேச வானிலை காரணங்களை உள்ளூர் மின்வெட்டுக்கு பொறுப்பாக்கினார்கள். அண்டை மாநில ஒப்பீடு: "கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரியில் 4 முதல் 8 மணி நேரம் வரை மின்வெட்டு இருக்கிறது, இங்கே பரவாயில்லை" என்று பக்கத்து மாநிலங்களைக் காட்டி சமாளித்தார்கள். இறுதியில் ஒரு அந்தர் பல்டி: "தமிழ்நாட்டில் எங்குமே மின்வெட்டு இல்லை" என்று மறுநாளே அறிக்கை விட்ட அதே அரசு, "வெளிச்சந்தையில் எங்குமே மின்சாரம் வாங்க முடியவில்லை, கடும் தட்டுப்பாடு நிலவுகிறது; அதனால் தான் தனியாரிடம் அதிக விலைக்கு வாங்க வேண்டியுள்ளது" என்று முற்றிலுமாக முன்னுக்குப் பின் முரணான காரணங்களை அடுக்கிக் கொண்டே போனது. அமைச்சர் கூறிய இந்த முரண்பட்ட விளக்கங்களின் பின்னணியில் ஒரு மிகப்பெரிய முறைகேடு மறைந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டுகின்றன. பழைய ஒப்பந்தங்கள் முடக்கம்:முந்தைய அரசில் குறைந்த விலையில் (ரூ. 5 முதல் 8 வரை) வாங்கப்பட்டு வந்த குறுகிய கால மின் ஒப்பந்தங்கள் மெதுவாக ஓரங்கட்டப்பட்டன. சொந்த அனல்மின் நிலையங்களின் உற்பத்தியும் முழு வீச்சில் இயக்கப்படவில்லை. செயற்கை நெருக்கடி: உற்பத்தி குறைந்து, மாலை நேரங்களில் 1,500 முதல் 2,000 மெகாவாட் அளவுக்கு மின் பற்றாக்குறை ஏற்படும் சூழல் உருவானது. தொடர் மின்தடையால் மக்கள் இரவு நேரங்களில் வீதிக்கு வந்து போராடத் தொடங்கினர். அவசர டெண்டர் வேட்டை: மக்கள் ஆத்திரத்தில் இருக்கும்போது, "மின்வெட்டை போக்க வேறு வழியில்லை" என்ற தோற்றத்தை உருவாக்கி, ஒரு யூனிட்டுக்கு ரூ. 31.99 முதல் ரூ. 37 வரை (சராசரியாக ரூ. 35) தனியார் நிறுவனங்களுக்கு வாரி வழங்க அவசர டெண்டர் இறுதி செய்யப்பட்டது. முன்பு 15 முதல் 20 ரூபாய்க்கு மின்சாரம் வாங்கியபோதே ஊழல் என்று முழங்கியவர்கள், இப்போது எதற்காக 35 ரூபாய்க்கு வாங்க வேண்டும்? பொதுமக்களை மின்தடையில் தவிக்கவிட்டு, பியூஸ் கட்டை முதல் பிஎஸ்என்எல் வரை சாக்குப் போக்குகளை அடுக்கிக் காட்டி, இறுதியில் பல ஆயிரம் கோடி ரூபாய் கமிஷன் அடிப்பதற்காகவே இந்த "செயற்கை மின் பற்றாக்குறை" நாடகம் அரங்கேற்றப்பட்டதா என்ற கேள்வியை முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜி உள்ளிட்ட தலைவர்கள் நேரடியாக முன்வைக்கின்றனர். இந்த ₹35 டெண்டர் சாதாரண மக்கள் தலையில் விழப்போகும் பேரிடி, ஒரு யூனிட் மின்சாரத்தை அரசு தனியார் ஆலைகளிடம் ₹35 கொடுத்து வாங்குகிறது. ஆனால் பொதுமக்களுக்கு அரசு விநியோகிக்கும் கட்டணமோ சராசரியாக ₹5 முதல் ₹7 மட்டுமே. இதனால் ஒவ்வொரு யூனிட்டிற்கும் மின்சார வாரியத்திற்கு சுமார் ₹28 முதல் ₹30 வரை நேரடி நஷ்டம் ஏற்படும். ஏற்கனவே இரண்டரை லட்சம் கோடிக்கும் அதிகமான கடனில் மூழ்கியுள்ள மின்சார வாரியம், இந்த விலைக்கு மின்சாரம் வாங்கினால் கூடுதல் கடன் சுமையில் தள்ளப்படும். அந்த இழப்பை ஈடுகட்ட, கடைசியில் வீட்டு மின் கட்டணத்தை உயர்த்தி அப்பாவி பொதுமக்களின் பாக்கெட்டில்தான் கை வைப்பார்கள். "பழைய கட்சிகள் செய்த ஊழலை ஒழிப்போம், புதிய அரசியல் கலாச்சாரம் தருவோம்" என்று சினிமா பஞ்ச் பேசி ஆட்சிக்கு வந்த முதலமைச்சர் விஜய், ஆரம்பத்திலேயே மின்சாரத் துறையில் இவ்வளவு பெரிய நிர்வாகத் தோல்வியையும் முறைகேட்டுப் புகாரையும் சந்தித்திருப்பது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மின்தடைக்கு பியூஸ் கட்டை திருட்டு, பிஎஸ்என்எல் பள்ளம் என்று குழந்தைப் பிள்ளைத்தனமான காரணங்களைச் சொல்லி ஏமாற்றுவதை விட்டுவிட்டு, இந்த ₹35 டெண்டரை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்; இந்த விவகாரத்தில் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதே தமிழக மக்களின் ஒட்டுமொத்த குரலாக ஒலிக்கிறது.அமைச்சரின் முரண்பட்ட காரணங்கள்: சிரிக்க வைக்கும் பட்டியல்
உண்மையான திட்டம் என்ன? செயற்கை மின்வெட்டா?
எளிய மக்களுக்கு புரியும் நஷ்டக் கணக்கு
விஜய் அரசு பதில் சொல்ல வேண்டிய கட்டாயம்