ஜி.டி. நாயுடு ஹிஸ்டாரிக்கல் மூவி.. ஆரம்பிக்கும்போதே மாதவன் போட்ட ஒரே போடு.. ராஜகம்பீரன் சபாஷ்

  • சென்னை: ஜிடி நாயுடு படம் பற்றியும், நடிகர் மாதவன் பற்றியும் அரசியல் திறனாய்வாளரும், சினிமா விமர்சகருமான ராஜகம்பீரன் தன்னுடைய கருத்தை பதிவு செய்துள்ளார்.. ஒரு வாழ்க்கை வரலாற்று படங்களை உருவாக்கும்போது கமர்ஷியல் சினிமாவுக்காக பொய்களையோ அல்லது சுவாரசியத்திற்காக தேவையற்ற கற்பனை காட்சிகளையோ ஒருபோதும் சேர்க்க முடியாது. எது அசல் வரலாறோ அதை மட்டுமே நேர்மையாகப் பதிவு செய்ய முடியும் என்றும் கருத்து தெரிவித்துள்ளார்,

    Advertisement

    King 24x7 என்ற சேனலில் பேட்டி தந்துள்ள ராஜகம்பீரன், "திரைப்படத் துறையில் ஒரு தலைசிறந்த வரலாற்றுப் படைப்பை உருவாக்குவது என்பது சாமானியமான விஷயம் கிடையாது.. கோவை தந்த மாபெரும் விஞ்ஞானியும், தொலைநோக்குப் பார்வைகொண்ட தொழில்முனைவோருமான ஜி.டி. நாயிடுவின் ஒப்பற்ற வரலாற்றை இன்றைய இளம் தலைமுறைக்கு சரியாக அறியச் செய்ய வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடனேயே இந்த படம் உருவாக்கப்படுகிறது.

    Advertisement

    ஜிடி நாயுடு படம்

    அமெரிக்காவில் கண்டுபிடிப்பாளர் தாமஸ் ஆல்வா எடிசன் மறைந்தபோது உலகமே அவருக்கு விளக்குகளை அணைத்து அஞ்சலி செலுத்தியது போல, நம்முடைய மண்ணின் நாயகரான ஜி.டி. நாயிடுவின் வாழ்வியலும் போற்றப்பட வேண்டிய ஒன்றாகும்.

    இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்புக்கொள்வதற்கு முன்பாக நடிகர் மாதவன் தயாரிப்பாளரிடம், "இதுபோன்று சோதனையில் இறங்கும்போது பாதியிலேயே திட்டத்தை கைவிட்டுவிடாமல் முழுமையாக முடிப்பீர்களா?" என்று கேட்டுள்ளார்.. அவரது உறுதியை முழுமையாக அறிந்த பிறகே இதில் நடிக்க ஒப்புக்கொண்டார்.

    கோவை தந்த விஞ்ஞானி

    ஒரு வாழ்க்கை வரலாற்று படங்களை உருவாக்கும்போது கமர்ஷியல் சினிமாவுக்காக பொய்களையோ அல்லது சுவாரசியத்திற்காக தேவையற்ற கற்பனை காட்சிகளையோ ஒருபோதும் சேர்க்க முடியாது. எது அசல் வரலாறோ அதை மட்டுமே நேர்மையாகப் பதிவு செய்ய முடியும்.

    Advertisement

    1940 மற்றும் 50-களின் காலகட்டத்தை திரையில் நுட்பமாக பிரதிபலிப்பது மிகப்பெரிய சவாலாகும். மின்சாரக் கம்பங்கள் இல்லாத கிராமங்களை சாட்சியாக கண்டறிவது கடினம் என்பதால், செயற்கையாகவே பெரிய அரங்குகள் அமைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

    வரலாற்றை அதன் அசல் தன்மையோடு சொல்லும்போது சில எதிர்ப்புகள் உருவாவது தவிர்க்க முடியாத ஒன்றாகிறது. வரலாற்று நாயகர் ஒருவரது வளர்ச்சிக்கு தடையாயிருந்த நபர்களை படத்தில் சுட்டிக்காட்டும்போது சர்ச்சைகள் வெடிக்கின்றன. இதற்குச் சிறந்த உதாரணம் கமல்ஹாசனின் "மருதநாயகம்" படத்தை சொல்லலாம்.

    மருதநாயகம் பட சிக்கல்

    மருதநாயகம் பிரிட்டிஷாருக்கு தளபதியாக இருந்து பூலித்தேவனை எதிர்த்தார் என்ற வரலாற்று உண்மையால் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரின் எதிர்ப்பையும், அவர் இஸ்லாமியராக மாறியவர் என்பதால் வேறு சில அமைப்புகளின் எதிர்ப்பையும் சந்திக்க நேர்ந்தது. இத்தகைய பலதரப்பட்ட சமூக மற்றும் மத ரீதியான எதிர்ப்புகளாலேயே அந்தப் திரைப்படம் பாதியிலேயே கைவிடப்பட்டது.

    Advertisement

    சினிமா என்பது தனிநபரின் கவிதை எழுதுவது போன்ற எளிய கலை கிடையாது.. அது நூற்றுக்கணக்கான தொழிலாளர்களும் கோடிக்கணக்கான முதலீடும் அடங்கிய ஒரு பெரிய வியாபாரம். ஒரு படம் தியேட்டர்களில் வெற்றிபெற்றுப் பணம் ஈட்டினால் மட்டுமே அடுத்த படைப்பை தயாரிப்பாளர் உருவாக்க முடியம்.. கலைஞனின் கலைமதிப்பைவிட மார்க்கெட்டிங்தான் அவரது திரையுலக நிலையை தீர்மானிக்கிறது.

    "சாக்லேட் பாய்" மாதவன்

    "மாதவன் சாக்லேட் பாயாகத் தான் அலைபாயுதே படத்தில் அறிமுகமானார். அந்த சாக்லேட் பாய் இமேஜில் வருகிற ஹீரோக்கள் அடுத்தடுத்த காலகட்டத்தில் ஆக்‌ஷன் ஹீரோக்களாக மாறினால் மட்டுமே சினிமாவில் தப்பிக்க முடியும். ஆக்‌ஷன் ஹீரோவாக மாற முடியவில்லையென்றால், 40 வயதைத் தொடும்போது அந்த சாக்லேட் பாய் பிம்பம் காலியாகிவிடும். அப்போது அவர்களுக்கு படங்கள் கிடைப்பது கடினம்தான். அதுதான் மாதவனுக்கும் நடந்தது; ஒரு பெரிய இடைவெளி வந்தது.

    Advertisement

    அதற்கு பிறகு சீமான் இயக்கிய தம்பி படத்தில் ஒரு புரட்சிகரமான, சமூகத்தின் மீது கோபம் கொண்ட இளைஞனாக நடித்தார். சேகுவேரா போன்ற கெட்டப்பில் வந்து அந்தப் படம் பெரிய வெற்றியைப் பெற்றது. ஆனால் அதே சீமான், அதே மாதவனை வைத்து எடுத்த வாழ்த்துக்கள் படம் முற்றிலும் தோல்வியடைந்தது.

    அதன் பிறகு ஒரு நீண்ட இடைவெளி கொடுத்து இறுதிச் சுற்று படத்தின் மூலமாகத் தான் மாதவன் மறுபடியும் வெற்றிகரமான ரீ-என்ட்ரி கொடுத்தார். ஒரு கலைஞன் சந்தையில் நிலைத்து நிற்பது என்பது அவன் தேர்ந்தெடுக்கிற கதைகள், கம்பெனிகள் மற்றும் அதில் மக்களுக்குப் பிடித்தமான விஷயம் இருக்கிறதா என்பதைப் பொறுத்ததுதான்.

    Advertisement

    மார்க்கெட் வேல்யூ

    ரஜினிகாந்தும் சத்யராஜும் தொடக்கத்தில் வில்லனாக அறிமுகமாகி பிறகு ஹீரோவாக உயர்ந்தவர்களே. ஆனால், காலமாற்றத்தில் மார்க்கெட் மதிப்பு மாறுபடும்போது சத்யராஜ் கேரக்டர் நடிகராக மாறினார்;,, ரஜினிகாந்த் இன்னும் கதாநாயகனாகவே தொடர்கிறார்.

    இன்றைக்குக் கலையின் மதிப்பை காசுதான் தீர்மானிக்கிறது, கலைஞர்கள் தீர்மானிக்க முடியாது... மாதவன் ஒரு நல்ல நடிகராக இருந்தாலும், மார்க்கெட் மதிப்பு என்ன என்பதைப் பொறுத்தே அவருக்கான வாய்ப்புகள் அமைகின்றன. இதில் கலைஞர்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

    English Summary

    G.D. Naidu Historical Movie.. Madhavan’s Bold Demand Before Shooting Starts! Rajagambeeiran’s Big Reveal