சபரீசனுடன் தொடர்பை நிரூபித்தால் ரூ.5,000 கோடி பங்கு எழுதி தரேன்.. ஜி ஸ்கொயர் நிறுவனர் சவால்

  • சென்னை: சட்டமன்றத்தில் மானிய கோரிக்கை நடைபெற்று வருகிறது. தவெக, திமுக உறுப்பினர்கள் இடையே காரசார விவாதம் நடைபெற்று வருகிறது. இருவரும் பரஸ்பரம் பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார்கள். ஜி ஸ்கொயர் நிறுவனம், சபரீசன் குறித்து விமர்சிக்கப்பட்டது. இது பரபரப்பான நிலையில், சபரீசனுடன் தொடர்பை நிரூபித்தால் தன்னுடைய நிறுவனத்தின் 50% பங்கை (ரூ. 5,000 கோடி) எழுதி தருகிறேன் என்று ஜி ஸ்கொயர் நிறுவனம் பகிரங்கமாக சவால் விடுத்துள்ளார்.

    Advertisement

    சட்டமன்றத்தில் பேசிய அதிமுக எம்எல்ஏ எஸ்.பி. வேலுமணி, "கோவையில் ஜி ஸ்கொயர் என்கிற ஒரு நிறுவனம் இருக்கிறது. இந்த நிறுவனம் அங்கு ஒரு 1,000 ஏக்கருக்கு சைட் போட்டுள்ளனர். அதற்காக பெரிய பெரிய பாறைகளை உடைத்து எடுத்துள்ளனர். விலங்குகளை கொன்றுள்ளனர். சாதாரண விவசாயி சிறு தவறு செய்தாலும் வழக்கு போடுவார்கள். ஜி ஸ்கொயர் மீது வழக்கு போடவில்லை" என்றார்.

    Advertisement

    அவரின் பேச்சுக்கு திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, "ஜி ஸ்கொயர் நிறுவனத்தை பற்றி பேசினால் ஏன் திமுகவினருக்கு கோபம் வருகிறது" என கேள்வி எழுப்பினார். தொடர்ந்து தவெகவினர் சமூகவலைதளங்களில், ஜி ஸ்கொயர் நிறுவனம் மற்றும் முன்னாள் முதலமைச்சர் மருமகன் சபரீசனை தொடர்புபடுத்தி விமர்சனம் செய்து வருகிறார்கள்.

    இதுகுறித்து ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் நிறுவனர் பால ஜெயராமன், "சபரீசனை நான் 2 முறை பார்த்திருக்கிறேன். அவரை எங்காவது சந்தித்தேன் என்று ஒரு போட்டோ காட்ட சொல்லுங்கள். இப்போது ஏ.ஐ தொழில்நுட்பத்தில் வேண்டுமானால் காட்டலாம். என்னுடைய கம்பெனியின் வொர்த் 10,000 கோடி ரூபாய். 2,300 கோடி ரூபாய் கடன் உள்ளது. 2012 ஆம் ஆண்டில் இருந்து புக் பைல் செய்துள்ளேன்.

    Advertisement

    என்னை தேடாத செய்யாத ஏஜென்ஸிகள் இல்லை. நான் ஓப்பன் சேலஞ்ச் விடுகிறேன். எனக்கும், சபரீசன் சாரும் தொடர்பு இருக்கிறது என்பதை நிரூபித்தால் என் நிறுவனத்தின் 50 சதவிகிதம் பங்கை இலவசமாக எழுதி கொடுக்கிறேன். சமூகவலைதளங்களில் இருப்பதை தான் சொல்ல முடியும். நான் அவர் மீது நிறைய வழக்கு போட்டுள்ளேன். நீதிமன்றத்தில் ஆவணங்களை சமர்ப்பித்துள்ளேன்.

    ஒருவர் பிளாட் போட்டார் விற்கவில்லை. பிறகு ஜி ஸ்கொயர் நிறுவனம் வந்தது. அதைப்பற்றி கற்பனை கதையாக சொன்னதற்கு எத்தனை பார்வை சென்றுள்ளது பாருங்கள் என்று சமூகவலைதளங்களில் பகிரங்கமாக ஒருவர் சொல்கிறார். என்னை திமுகவுடன் நெருக்கமாக்கி அவர்களையும் அப்ரூவல் கொடுக்க விடாமல் செய்வதன் நோக்கம் தான் இது. அதை அவரே ஒப்புதல் வாக்குமூலமாக கொடுத்துள்ளார்.

    Advertisement

    2025 ஜனவரி மாதம் இப்போதைய முதலமைச்சர் பரந்தூர் செல்வதற்கு முன்பு சமூகவலைதளங்களில் ஒரு வதந்தி பரப்பப்பட்டது. பரந்தூர், பண்ணுர் சுற்றுவட்டார பகுதியில் ஜி ஸ்கொயர் நிறுவனத்துக்கு 900 ஏக்கர் நிலம் இருக்கிறது. அதற்காக தான் திமுக அரசு பரந்தூரில் விமான நிலையம் கொண்டு வருகிறது என கூறினார்கள். அப்போதே நாங்கள் ஒரு ட்வீட் வெளியிட்டோம். அப்போதே நாங்கள் அவருக்கு ஒரு கடிதம் அனுப்பினோம்.

    ஜி ஸ்கொயர் நிறுவனம் நாளிதழ்கள், ஊடகங்களில் விளம்பரம் கொடுத்தும், ஸ்பொன்சர் செய்தும் நிகழ்ச்சி நடத்துவோம். ஸ்பான்சர் தான் நாங்கள். விருந்தினர்களை அழைத்து நிகழ்ச்சிந நடத்துவது ஊடகங்கள். பாஜக, அதிமுக எல்லா கட்சியை சேர்ந்த நிர்வாகிகளும் கலந்துள்ளனர். ஒரு நிகழ்ச்சியில் சபரீசன் வந்ததை வைத்து தவறாக பேச முடியாது. எந்த ஊடகமாக இருந்தாலும் எங்கள் பட்ஜெட்டில் இருந்தால் நிகழ்ச்சி நடத்துவோம். விருந்தினர்களை அழைப்பது அவர்களின் முடிவு" என்றார்.

    English Summary

    G Square Founder Bala Jayaraman said, We will give 50 % our share if anyone prove connection between us and Sabareesan.